இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி

அத்வைதம் அன்று 68 வது பட்டம் 69 தாவது பட்டத்திற்கு உபதேசம் இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி 69 வது பட்டம் ஜகத் குரு ஜெயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர பெரியவா என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டு எல்லோர் இல்லத்திலும் ஜகத் குரு மஹாபெரியவளாவே பார்க்கப்பட்டு வந்த பெரியவா இன்று ஸ்தூலத்தில் இருந்து சூஷ்மத்திற்கு உயர்ந்து விட்டார். சன்யாச கோலத்தில் இருந்தாலும் எண்ணங்களில் சமுதாய சிந்தனையே மேலோங்கி இருந்தது.. எவ்வளவு கனவுகள் எத்தனை நினைவுகள்.. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஹிந்து மிஷன் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் இந்து மத ஸ்தாபனங்கள் மத ஆராய்ச்சி கோவில் நிர்மாணங்கள் கோவில் புணருத்தாரணங்கள் கோ சாலைகள் இன்னும் எவ்வளவோ நினைவு கூறலாம். ஸ்தூலத்தில் இருந்து சூஷ்மத்திற்கு உயர்ந்த ஜகத் குரு பு

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041 பிரதி புதன் கிழமை தோறும் K.G.கிருஷ்ணமூர்த்தி மாமா நானும் பல பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவாளின் அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரம் தவறாமல் புதன் கிழமை தோறும் வாசித்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு சிலஅற்புதங்கள் உள்ளத்தை நெகிழச்செய்ததுண்டு சில அற்புதங்கள் கண்களில் கண்ணீரை வெளிக்கொணர்ந்ததும் உண்டு. வெகு சில அற்புதங்கள் நம் இதயத்துடன் கைகோர்த்து ஆத்ம சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததும் உண்டு.. ஒரு சில அற்புதம் மட்மே மஹாபெரியவாளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்வும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு “பக்தரின் வாழ்வில் மஹாபெரியவா” தொடரில் கிருஷ்ணா மூர்த்தி மாமாவின் அனுபவமும் ஒன்று. இதைத்தான் இன்றைய தொடரில் அனுபவிக்கப்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-045 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவாளுக்கு சொந்தமான இரு வார்த்தைகள் “நா இருக்கேன்” இதை மெய்யாக்கும் ஒரு அற்புதம் மஹாபெரியவாளின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவம் கொண்டது. சில அற்புதங்களை எழுதும் பொழுது எனக்கு கண்களில் கண்ணீர் வரும். சிலஅற்புதங்கள் என்னை சிந்திக்க வைக்கும். . இன்னும் சில அற்புதங்கள் என்னை வியக்க வைக்கும். சில அற்புதங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.. ஆனால் ஒரு சில அற்புதங்கள் இதில் எதிலும் அடங்காமல் என் உள்ளத்தில் என்னை அசை போட வைத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இந்த பதிவில்நாம் படித்து பரவசப்பட போகிறோம். ஆல் இந்தியா வானொலியில் பணிபுரியும் அலுவலர் ஒருவர். எல்லா சாமிகளையும் வணங்

ஸ்ரீகுருதுதி

பெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி காஞ்சிச் சங்கரன் சன்னதி எண்ணிக் கணமும் குருவை நாடித் தொழுதால் மஞ்சுள மூர்த்தியின் திருவடி யருளால் கவலைகள் எல்லாம் தொலைந்திடுமே! வல்லான் அங்கை வரமாய் அருளும் வல்லமை உண்டாம் வாழ்வும் உயர்ந்திட வல்வினை யாவும் நீங்கிடும் நற்றுணை நாயகத் தருளால் நலம் பெருகிடுமே! 2018- ஆண்டின் பிரதி மாத அனுஷ தேதியினைத் தெரிவிக்கும் ஓர் அட்டவணையை இன்றையதினம் பகிரும் பாக்கியம் கிட்டியதும் அவர் அருளாலே தாம்! சில காலம் முன்பாக நடந்த ஒரு நிகழ்வினை நினைந்து பார்க்கின்றேன்...! "இப்போல்லாம் பார்த்தேளோ... நம் மஹாபெரியவா விஸ்வரூபம் எடுத்துண்டுருக்கா... " "எதை வச்சுண்டு அப்படி சொல்றே..டா?" "எங்கு பார்த்தாலும் அனுஷம் நடக்கறது... கோலாகல

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III ராமானுஜம் குமுத வள்ளி

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-25 பாகம் -III ராமானுஜம் குமுத வள்ளி திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் அடுத்த கட்ட பயணம் குருவின் கடாக்ஷமும் இருந்து விட்டால் வாழ்க்கை பல கட்டங்களையும் மங்களகரமாக தாண்டும் மஹாபெரியவா பக்த கோடிகளே நாம் இதுவரை ராமானுஜம் குடும்பத்தாரின் முதல் இரு பிரார்தனைகளான ராமானுஜத்தின் கால் புண் ஆறவேண்டும். பிறகு தகுதி சான்றிதழ் பெற்று வேலை நீட்டிப்புடன் வேலையில் சேரவேண்டும் என்னும் பிரார்த்தனைகளை மஹாபெரியவா எப்படி தன்னுடைய இறை அற்புத்ததால் நிகழ்த்தி காட்டினார் என்பதை கண்டு அதிசியத்தோம். ஒரு வருடமாக ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் மஹாபெரியவாளின் குரு பூஜை முதல் வாரத்திலேயே தீர்வுக்குண்டான நம்பிக்கையை கொடுத்து ஒன்பதாவது வாரத்தில் கால் புண் ஆறி வேலையிலும் சேர்ந்து தன்னுடைய அலுவல

குரு கானம்

பெரியவா சரணம். "சிவன்" எனும் சொல்லுக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தல் அது "நன்மை" என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையானவை எவையோ அவற்றை ஒரே ஒரு சொல் இங்கே அடக்கி நிற்கின்றது. அதுபோலே "சங்கரன்" என்ற சொல்லுக்கு அகராதி மங்களங்களை அருள்பவன் என்பதாகவே கூறுகிறது. "சங்கரம் போற்றிடின் சங்கடம் விலகும்" என்பர். இன்றைய பொழுதிலே ஆயிரமாயிரம் பக்தர்கள் அடியேனுக்குத் தெரிவிப்பதெல்லாம், சங்கர மஹாபிரபு அவர்களுடைய வாழ்விலே அவர் செய்த மகிமைகளைத் தாமே! சமீபத்திலே நடைபெற்ற "ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜை"க்கு வருகை புரிந்தவர்களிலே பெரும்பாலோர் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தமையைச் சொன்னபோழ்து அடியேன் மனம் அடைந்த் ஆனந்தத்துக்கு அளவிடவே இயலாது. இப்படியாக குருவை ஸ்மரித்தவர்களெல்லாம் குருவர

பெரியவா பார்வையில்-010 குருவும் குருவருளும்

பெரியவா பார்வையில்-010 குருவும் குருவருளும் எந்த குருவின் சன்னிதானத்தில் உங்கள் புலன்கள் அடங்குகிறதோ மனம் அமைதி அடைகிறதோ அவர் தான் உங்கள் குரு.. குரு என்பவர் யார் என்ற கேள்விக்கு மஹாபெரியவா பதில் சொல்லுகிறார். ஒருவரை பார்த்த உடனே உங்கள் மனம் அடங்குகிறதா உள்ளத்தில் இருக்கும் இருளை நீங்கி உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கிறாரா அவர்தான் உங்கள் குரு. நம்முடைய பெரியவர்கள் நமக்கு சொல்லிகொடுத்திருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்று. மாதா நமக்கு தந்தையை காட்டுகிறாள் தந்தை உலகை காட்டுகிறார் தாய் தந்தை இருவரும் சேர்ந்து ஒரு குருவை தேடி அவரிடம் நம்மை ஒப்படைகிறார்கள். குரு நமக்கு ஞானத்தை கொடுத்து கடவுளை காட்டுகிறார். ஒரு நல்ல குரு இல்லாமல் கடவுளை நாம் அடைய முடியாது. மஹாபெரியவா சொன்ன ஒரு சம்பவம்.

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணபுரம்

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணபுரம் சௌராஜப்பெருமாள் தேவியருடன் திருக்கண்ணபுரம் கோவில் தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் திருக்கண்ணபுரமும் ஒன்று. கோபுரமஹிமை: இந்த கோவிலில் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. திருக்கண்ணபுரம் அருணோதயக்காட்சி மூலவர்: இங்கு மூலவர் நீல மேகப்பெருமாள் என்றுஅழைக்கப்படுகிறார். சவுரிராஜப்பெருமாள் தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளது போல அபய முத்திரையுடன் இல்லாமல் தானம் பெறும் முத்திரையுடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களை எல்லாம் தான் வாங்கிக்கொள்வதாக ஐதீகம்...வைகாசி மாதம் நடக்கும் பிரும்மோட்சவம் விழாவின் பொழுது அதி காலையில் சிவனாகவும் மாலையில் பிரும்மாவாகவும் இரவ

மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும்

மஹாபெரியவா குரு பூஜையும் தாய் மகன் பாசப்போராட்டமும் எந்த ஒரு தாயும் குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து நொந்துதான் பெத்திருப்பாள் நிச்சயம் தும்பி பெத்திருக்கமாட்டாள் எத்தனை கோவில்கள் இறை சக்தி எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அலைந்து திரிந்தாள் தாய் அகிலாண்டேஸ்வரி நான் கடந்த பல வருடங்களாக பிரதி பலனை எதிர்பார்க்காமல் வாழ்வில் துன்பப்படும் என்னுடைய சக ஆத்மாக்களுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவாளிடம் அதிகாலை பிரும்ம முகூர்த்த நேரத்தில் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வது வழக்கம். உங்களுக்கும் இது தெரியும் இது போல் என்னுடைய சக ஆத்மா விக்னேஷ் என்னும் வாலிபரின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். அந்த பக்தரின் இன்னல் என்ன என்பதை உங்களுக்கு தெரிய படுத்

திருப்புகழ்- 8

சுவாமி மலை முருகன் மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 8 மகா தேவா , மகா புருஷா மகா பூரணமே , சரணம் இந்த பூவுலகில் நம் கர்ம வினையால் நமக்கு துயரமும் தீயாக சுடும் வாழ்க்கை இருக்கலாம். எந்த வினை வந்தாலும் தெய்வம் நம்வுடன் தான் இருக்கும் , அதை நாம் இறுக பற்ற வேண்டும் இன்று திருப்புகழ் 8ஆம் பாடல் பாராயணம் செய்யலாம் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்) ......... பாடல் ......... உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை      உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை           உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்      விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்

நாளை சிறப்பு குரு பூஜை அற்புதம் தாய் அகிலாண்டேஸ்வரி மகன் விக்னேஷ் இருவரின் பாசப்போராட்டம்

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்னும் வாழ்க்கை தத்துவத்தை அனுபவித்து வாழ்ந்தே எங்களுக்கும் போதித்தீர்களா பெரியவா வாழ்க்கை தத்துவம் வாழ்கை என்பது இன்பமா துன்பமா இல்லை இரண்டும் கலந்ததா வாருங்கள் ஒரு புதிய அனுபவத்தை அனுபவிப்போம். கர்மாவும் கால மிருத்துவும் ( மிருத்து என்றால் ஆயுள் முடிவில் காலத்தை முடிக்க வரும் தேவதை) ஒன்று சேர்ந்தால் அந்த பரமேஸ்வரனே ஒன்றும் செய்ய இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொள்வோம். நாம் வழக்கமாக மஹாபெரியவா குரு பூஜையில் மஹாபெரியவா ஆசிர்வதித்து கொடுத்த பக்தர்களின் அற்புதங்களை மட்டுமே அனுபவித்து வந்தோம். நமக்கு ஒரு புது அனுபவம். ஆம் நாளைய சிறப்பு மஹாபெரியவா குரு பூஜை அற்புதம் நமக்கு ஒரு சோகத்தை கொடுக்க போகிறது. அந்த சோகம் வாழ்க்கையின் தத்துவத்தையும் நமக்கு உணர்த்த போக

என் வாழ்வில் மஹாபெரியவா -046

என் வாழ்வில் மஹாபெரியவா -046 பிரதி வியாழன் தோறும் நேற்று வரை நான் பார்த்த உலகம் குனிந்து கரம் நீட்டினேன் குழியில் தள்ளிவிடுவான் ஜாக்கிரதை என்றது ஆத்மார்த்தமாக பேசினேன் ஆபத்தானவன் என்றது என் இயலாமையை சொன்னேன் வேஷம் போடுகிறன் என்றது உலகத்தில் இருந்து தள்ளி நின்றேன் ஆணவக்காரன் என்றது நிலை தடுமாறினேன் புரியாமல் விழித்தேன் மஹாபெரியவா அழைத்து ஆட்கொண்டார் இன்று வேறு உலகத்தை பார்க்கிறேன் நான் ஒன்றை உங்களுக்கு இங்கே சொல்லியாக வேண்டும். வாழ்வில் திருப்புமுனை என்பது எந்தநேரத்திலும் வரலாம். எப்படி மரணம் நிச்சயமோ. ஆனால் எந்த நொடியில் வரும் என்பது தெரியாதோ அதே போல வாழ்க்கையில் திருப்புமுனை என்பது நிச்சயம்.. எந்த நொடியிலும் வரலாம். நமக்கு தேவை பொறுமையும் நிதானமும் நம்பிக்கையும் மட்டுமே.. வாழ்க்கை என்ப

குருப்புகழ்

பெரியவா சரணம் ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் ……… சந்தம் …….. தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன … தானதனனா ………. பாடல் ……….. மங்கலமு கந்தருளு மெங்கதியு மிங்குறவு மெம்பதியு புங்கவனு …. மானதிருவே சுந்தரமு கம்பொழியு மன்புமிக வெந்தனிலு முய்யொளியு கந்தருளு …. வேதவிரதா சிந்தையிலு மெங்கினிலு முந்தனுரு கண்டிடவு மெந்திறமு முந்தனருள் …. கூட்டிடவுமே எந்தனக முந்தியுன தந்திபக லுந்தொழவு கந்தருளு மெந்திருப …. தாதியுனையே அந்தகனு மெந்தனிட வந்துவிடு மந்தபொழு துந்தநினை வுந்ததயரு …. ளாசியுடனே சந்தமிகு சிந்துபல செந்தமிழில் செய்திடவு முந்தனரு ளெந்தனிலு …. மேகிடவுமே இந்நிலமு முந்திவரு மெம்முறவு முந

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-040

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-040 பிரதி புதன் கிழமை தோறும் ராஜாராமன் மாமா ராஜாராமன் மாமா எமலோகத்தின் கதவை தட்டி விட்டு மஹாபெரியவா அனுகிரஹத்தால் உயிருடன் பிழைத்து வந்து திருமணமும் செய்து கொண்டு இன்றும் மஹாபெரியவாளை தியானித்து கொண்டிருக்கும் ஆத்மாக்களில் ஒருவர். மாமாவின் பள்ளி நாட்களில் இருந்தே மாமாவின் தந்தையார் விடுமுறைக்கு காஞ்சி மடத்திற்கு வந்து குழந்தைகளை விடுமுறையை கழிக்க கொண்டு வந்து விட்டுவிடும் பழக்கம் இருந்தது. விடுமுறையை கழிக்கும் நாட்களில் மஹாபெரியாளிடம் விளையாடுவதும் கோபித்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள். .மஹாபெரியவாளும் இவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடுவாராம். இவரது தந்தை சிறு வயதில் மஹாபெரியவா நகர் வலம் வரும்பொழுது ஊர்வலத்தில் வந்த ஒட்டகங்களை எல்லா வேடிக்கை பா

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-044

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-044 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவா கருணா சாகரன் என்பதற்கு பல நிகழ்வுகள் உதாரணம் இதோ மேலும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு உதாரணம் காஞ்சி மடம்.இளம் காலைப்பொழுது. மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்க்ஷ வந்து நிற்கிறது. ரிக்ஷனாவை ஓட்டி வந்தவர் கலைந்த தலையுடன் லுங்கி கட்டிக்கொண்டு இறங்கினார். ஒரு வயதான முதியவரை பிடித்து கைத்தாங்கலாக இறக்கினார். தன்னுடைய அலங்கோல நிலையில் மடத்திற்கு போவதை தவிர்க்கும் பொருட்டு மடத்தில் உள்ள கைங்கர்யம் செய்பவர்களில் ஒருவரை அழைத்து பெரியவரை உள்ளே அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்... மடத்து சிப்பந்தியும் பெரியவரை உள்ளே அழைத்து சென்று மஹாபெரியவா இருக்கும் இடத்திற்கு அருகில் உட்காரவைத்தார்.. ரிக்க்சா ஓட்டுனரும் மடத்தி

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-24 பாகம்-II ராமானுஜம் குமுத வள்ளி

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-24 பாகம்-II ராமானுஜம் குமுத வள்ளி வட்டத்துக்குள் சிக்கியவன் திசையை இழப்பான் வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் சிக்க வேண்டாம் இறைவனின் துணையோடு வாழ்க்கையை நடத்துங்கள் மஹாபெரியவாளை அழையுங்கள் உங்களை வழி நடத்துவார் இதுவரை ஆறு வார மஹாபெரியவா குரு பூஜை முடிந்தது. ஆறாமல் இருந்த புண் ஆறி விட்டது. புண் இருந்த இடம் ஓட்டையாகி மூடாமல் இருந்தது. இதனால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இரண்டு வருட வேலை நீடிப்பு கேள்விக்குறியானது. இப்பொழுது ஓட்டை சதை வளர்ச்சியால் அடைபட்டு விட்டது. ராமானுஜம் வேலைக்கு செல்ல தயாராகி விட்டார். ஒரு வருடமாக ஆறாமல் இருந்த புண் மஹாபெரியவா குரு பூஜைக்கு பின் ஆறிய அற்புதத்தை என்னவென்று சொல்வேன். வாருங்கள் இனி மேற்கொண்டு நடந்த அற்புதத்திற்குள் உங்களை அழை

பெரியவா பார்வையில்-009 பெரியவா பார்வையில் மஹான்கள் வேதாந்த தேசிகர்

சைவத்தையும் வைணவத்தையும் இந்து மதத்தின் இரு கண்களாக பார்த்த மஹாபெரியவா பெரியவா பார்வையில்-009 பெரியவா பார்வையில் மஹான்கள் வேதாந்த தேசிகர் சென்ற பதிவில் மஹான்களுக்கு மனம் இறங்கிய மஹாலக்ஷ்மி என்னும் தலைப்பில் விஜயநகர பேரரசு உருவாக காரணமாக இருந்த வித்யாரண்யர் பற்றி அறிந்து கொண்டோம். இந்தப்பதிவில் வேதாந்த தேசிகருக்கு மஹாலக்ஷ்மி எப்படி மனம் இறங்கினாள் என்பதை மஹாபெரியவா சொன்னதை பற்றி பார்ப்போம். வைஷ்ணவத்தில் ஏராளமான ஸ்லோகங்களையும் பிரபந்தங்களையும் எழுதி வைணவத்திற்கு என்று வழிபாட்டு முறையை அளித்தவர்களில் ஒருவர் வேதாந்த தேசிகர். வேதாந்த தேசிகர் மனம் உருகி அழைத்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டுமோ அந்த வரத்தை அளித்து விட்டு சென்று விடுவாள். இவருக்கு ஊரில் உள்ள எல்லோரும் மிகுந்த ம

திவ்ய தேச திருத்தலம் ஒப்பிலியப்பன் கோவில்

திவ்ய தேச திருத்தலம் ஒப்பிலியப்பன் கோவில் மூலவர் உப்பிலியப்பன் ஒப்பிலியப்பன் கோவில் திருவிண்ணகர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து ஏழு கிலோமிட்டர் தூரத்தில் உள்ளது. மூலவர்: உப்பிலியப்பன் தாயார்: பூமா தேவி நாச்சியார் உப்பிலியப்பன் பூமா தேவி பெயர்க்காரணம்: :திரு விண்ணகர் என்பது புராண பெயர். திரு விண்ணகர் அப்பன் ஒப்பிலா அப்பன் என்பதால் ஒப்பில்லா அப்பன் என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இதுவே ஒப்பிலியப்பன் என்று மாறிற்று.. பூமாதேவியை திருமால் மணந்துகொண்டு தாயார் உப்பு இல்லாமல் சமைத்த உணவை கூட ரசித்து ருசித்து சாப்பிட்டதால் இந்த பெருமாளுக்கு உப்பு இல்லா அப்பன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் உப்பிலியப்பன் என்று மருவிற்று.. இன்றும் இந்த கோவிலில் விநியோகம் செய்யப்படும் பிரசாதங்கள் உப்

திருப்புகழ்- 7

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 7 மகா பெரியவா என்னும் அருள் மழையில் தவம் புரியும் அடியார் எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் இன்று நாம் திருப்புகழ் பாடல் 7 பாராயணம் செய்வோம். முருகா என்று மெய் உருகி அழைக்கும் போது வரும் தெய்வத்தை தடுப்பது எது? நம்முள் இருக்கும் தேவை இல்லாத குணங்கள் , அவைகளை வென்று தெய்வத்தின் திருவடியை நம்முள் அடைய அருள்வதே திருப்புகழ் நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 7 அருக்கு மங்கையர்  (திருப்பரங்குன்றம்) ......... பாடல் ......... அருக்கு மங்கையர் மலரடி வருடியெ      கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை          அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையி

என் வாழ்வில் மஹாபெரியவா -045

என் வாழ்வில் மஹாபெரியவா -045 பிரதி வியாழன் தோறும் ஏதாவது ஒரு ஜென்மத்தில் தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் முதல் பூமித்தாயின் மடியில் ஓய்வெடுக்கும் காலம் வரை நான் உங்களுக்காக உழைக்க வேண்டும் ஒரு மனிதன் முழு மனிதத்துவம் அடைய வேண்டுமானால் அவன் தன்னை மூன்று வழிகளில் சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்..அவைகள் சரீர சுத்தி ஆத்ம சுத்தி பூரண சுத்தி. இந்த மூன்று புனிதத்தையும் அடைந்து விட்டால் ஒரு மனிதனின் சத்துவ குணம் மேலோங்கி தமோ குணமும் ரஜோ குணமும் பின்னுக்கு தள்ள படும்.. இவைகளை மஹாபெரியவா என்னிடம் சொல்லாவிட்டாலும் என்னுடைய அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இத்தனை நாளும் நான் அனுபவித்த மஹாபெரியவா அற்புதங்களை நாம் எல்லோருமே அனுபவித்து வந்தோம். அந்த சரீர சுத்தி என்னை