பெரியவா பார்வையில்-015

பெரியவா பார்வையில்-015 மஹாபெரியவா பார்வையில் தானமும் தர்மமும் கொடையும் மஹாபெரியவா கொடை தானம் தர்மம் போன்றவைகளை பற்றி சொல்லும்பொழுது நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களில் இருந்தும் பல சுவையான சம்பவங்களை எடுத்து காட்டியிருக்கிறார். மஹாபெரியவாளை பொறுத்தவரை நாம் செய்யும் தர்மம் தானம் எல்லாம் அளவை வைத்து பார்க்கக்கூடாது. தர்மம் செய்யவேண்டும் என்னும் மனம் தான் முக்கியம் என்று நமக்கு சொல்கிறார். முதலில் மஹாபெரியவா ராமாயணத்தில் நடந்த ஒரு விஷயத்தை நமக்கு சொல்லுகிறார். இலங்கைக்கு பாலம் கட்டும் பணியில் ஹனுமான் சுக்ரீவன் அங்கதன் இன்னும் எத்தனையோ வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. ஆனல் அந்த பாலம் காட்டும் பணியில் அனுமனுக்கு அடுத்த படியாக நம் மனதில் நிற்பது எது. சிறிய அணிலின் பெரிய மனதை பார்த்து ராமர் சந்தோஷத

திவ்ய தேச திருத்தலம் திருஇந்தளூர் -மாயவரம்

திவ்ய தேச திருத்தலம் திருஇந்தளூர் -மாயவரம் பரிமள ரங்க நாதர் பள்ளிகொண்ட பெருமாள் திரு இந்தளூர் ஸ்தல வரலாறு நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் ஸ்ரீமன் நாராயணனை மையமாக கொண்டு எழுப்பப்பட்ட கோவில் திருஇந்தளூர். .மயிலாடுதுறை அருகில் உள்ளது இந்த திருஇந்தளூர். இந்த கோவில் கட்டப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் புனரமைக்கப்பது சோழர்கள் காலத்திலும் விஜயநகர பேரரசு மன்னர்களும் பிறகு மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களும் சேர்ந்து திருப்பணிகள் செய்தனர். பெருமாள் தாயாருடன் காலை ஐந்தரை மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள பரிமள ரங்கநாதர் இங்கு தான் சந்திரனுக்கு காட்சி கொடுத்தாராம். தமிழில் இந்து என்றால் சந்திரன் என்று பெயர். சந்திரனுக்கு காட்சி கொடுத்ததால் இந்த ஸ்த

திருப்புகழ்- 13

பழனி மலை மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 13 நாதா குமரா நம என்று ஓதும் அடியார் வாழ்வு என்றும் குன்றாது ஒளிர் விடும் ஜோதி என மலரும் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்) ........பாடல் ......... சந்ததம் பந்தத் ...... தொடராலே      சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்      கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே      சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா      தென்பரங் குன்றிற் ...... பெருமாளே ........... சொல் விளக்கம் ......... சந்ததம் பந்தத் தொட

என் வாழ்வில் மஹாபெரியவா -051

என் வாழ்வில் மஹாபெரியவா -051 பிரதி வியாழன் தோறும் என் தாயின் கருவறை எனக்கு ஒரு பிறப்பை கொடுத்தது என் ஆசானின் வகுப்பறை எனக்கு இந்த உலகை காட்டியது என் மஹாபெரியவளின் இறை அறை எனக்கு பிரபஞ்சத்தை காட்டிக்கொண்டிருந்தது வாழ்க்கை பயணமும் பிரபஞ்சத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.. இந்த பதிவில் மஹாபெரியவா என்னைக்கொண்டு செய்த இரண்டு அற்புதங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசை தான்.. ஆனால் ஒரு விரலில் என்னால் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறேன். மற்ற பதிவுகளையும் குறித்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் என்னை இயக்கிக்கொண்டே இருக்கிறது..நான் இன்னும் வரும் பதிவுகளில் குரு பூஜையை பற்றியும் எழுத வேண்டும்..ச

குருப்புகழ்

பெரியவா சரணம். முற்பிறப்பின் பாவ-புண்ணியங்களினாலே உண்டாகிய வினைப்பயனை அனுபவித்துக் கழிக்க இந்தப் பிறப்பு பெற்றிருக்கிறோம். அன்னையின் கருவறையினிலே அவதரித்து தெசாமாசம் எனும்படியான பத்து மாதங்கள் தங்கி உருபெற்று புவனத்திலே பிறந்துள்ளோம். கல்வி, கேள்வி என பண்பட்டு, பின்னர் ஒரு வேலைக்குச் சேர்ந்து உலகவாழ்வுக்குத் தேவையான இத்யாதிகளைப் பெற்று, ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தன் எனும் நிலைக்கு அப்கிரேட் ஆகிவிடுகிறோம். அதோடு முடிந்ததா? இல்லையே! சத்புத்திர சம்பத்தும் பெறவேண்டுமே… இப்பிறப்பிற்குச் சொல்லியபடியான சம்ஸ்காரங்கள் அனைத்தினையும் செய்தாக வேண்டுமல்லவோ…! இன்றைய பொழுதுகளில் பற்பல தலங்களுக்குச் செல்கையில் பக்தர்களை, பெரியவா குரும்ப உறவுகளைச் சந்திக்க நேர்கையில் அவர்களுள் விவாகப

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-045

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-045 பிரதி புதன் கிழமை தோறும் C.P.M.G ஜெயராமன் மாமா & மாமி ஜெயராமன் மாமா கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வங்கியில் வேலையில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். பணியாற்றிக்கொண்டே I.R.S. என்னும் மத்திய அரசாங்கத்தின் தேர்வு எழுதி தபால் துறையில் சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் பெரிய பதவியான தபால் துறையின் தலைவராக பதவி உயர்வு உயர்வை அடைந்து ஒய்வு பெற்றார். மஹாபெரியவாளை கேட்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார். மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். ஜெயராமன் மாமா தன்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே மஹாபெரியவாளின் பக்தி மழையில் நனைந்து கொண்டு இருக்கும் பெரிய பாக்கியத்தை பெற்றார். மாமாவின் பெற்றோர்கள் தாத்தா பாட்டிகள் எல்லோருமே மஹாபெரியவாளின் பக்தர்கள்..மாமாவிற்க

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-049

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-049 பிரதி செவ்வாய் கிழமை தோறும் நமக்கெல்லாம் தெரியும் மஹாபெரியவா கால் நடை பயணமாகவே இந்தியாவையே நடந்து பிரதக்ஷிணம் செய்தார். அதுமட்டுமல்ல இந்தியாவின் புனித நதிகள் அனைத்திலும் நீராட வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்களை கடந்து தான் சென்றார். அப்படி செல்லும் பொழுது மஹாபெரியவா கல்கத்தாவையும் சென்று அடைந்தார். கல்கத்தாவில் சில நாட்கள் தங்கியிருந்து தன்னுடைய பூஜை அனுஷ்டானங்களை தொடர நினைத்தார். . கல்கத்தா நகரம் காளி வழிபாட்டிற்கு பெயர் போனது என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆகவே அங்கு குங்குமம் கிடைக்கும் மஞ்சள் கிடைக்கும்.. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு தேவையான வில்வம் இல்லை கிடைக்குமா என்பது சந்தேகம். . மடத்து சிப்பந்திகளும் அலையாய் அலைந்து பார்த்தார்கள். எங்க

ஆன்மாவின் ஏக்கங்கள் ஆத்மாவும் மனசும்

ஆன்மாவின் ஏக்கங்கள் ஆத்மாவும் மனசும் ஒரு ஆத்மா இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மவிற்கும் பெரிய சொற் போரே நடக்குமாம்.. இந்த கலி யுயுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.. அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்.இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்.. இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் நீ என்னை அழைத்தால் ஒழிய. இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது. ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-28-ருத்திரன் பாகம் –IV

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-28 ருத்திரன் பாகம் –IV பிரதி திங்கட்கிழமை தோறும் இந்த வார குரு பூஜை அற்புதங்களில் ருத்திரன் அவர்களது இரண்டு பிரார்தனைகளான மனைவியின் உடல் நலம் மற்றும் அவருடைய இரண்டாவது மகன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.மஹாபெரியவா மற்ற பிரார்த்தனைகளுக்கு அற்புதமான முறையில் பதில் கொடுத்து விட்டார்.மேலே கொடுக்கப்பட்ள்ள இரண்டு பிரார்த்தனைகளை பற்றி ருத்திரன் அவர்கள் என்னிடம் சொன்னதாவது. "மாமா என்னுடைய மனைவிக்கு மனச்சோர்வு நோய் வந்து விட்டது. ஆங்கிலத்தில் டிப்ரஷன் என்று சொல்லுவார்களே அந்த நோய் தாக்கி விட்டது. இவருடைய இரண்டாவது மகனுக்கும் இதே நோய். இதனால் தான் அவன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த இரண்டு பேருக்கும் ஒரு தீர்வு வேணும் மாமா மஹாபெரியவளிடம் சொல்லி கொஞ்சம் சர

ஸ்ரீசந்திரசேகரேந்திர பஞ்சரத்நம்

பெரியவா சரணம் சமீபத்திலே ஒரு அற்புதமான ஸ்ரீமஹாபெரியவா ஸ்தோத்திரம் ஒன்று கிட்டியது. சமஸ்கிருதத்தில் இருந்த அதனை அன்பு அன்னை Geetha Kalyan அவர்களுடைய உதவியில் தமிழ் எழுத்துக்களிலே பகிர்கின்ற பாக்கியம் இன்று கிட்டியுள்ளது. #அனுஷம் #Anusham #mahaperiyavaStotram ஸ்ரீசந்திரசேகரேந்திர பஞ்சரத்நம் காமகோடி பீடவாஸிகாமிதார்த்த தாயகம் த்யாகசீலமானஸம் க்ருபாதரங்கிதேக்ஷணம் தண்டதாரிஸத்கரம் விபூதிபூஷ ஃபாலகம் சந்த்ரசேகரேந்த்ர பூஜ்யபாதமாச்ரிதோஸ்ம்யஹம். (1) ஸ்நேஹபூரபாஸுரம் ஸுநிஷ்டயா ஸுகோபிதம் நிஷ்களங்க பூர்ணசந்த்ர ஸாந்த்ரமானஸம் சிவம் ஸநாதநாதிபிஸ்ஸதா ஜகத்தமோவிநாசனம் ஞானரூபசங்கர ப்ரதீபகம் லஸத்யஹோ. (2) கேரளோத்பவச்சரீ ஸமஸ்ததேசஸோசிகா க்‌ஷீணவேதசாஸ்த்ரபோஷணாய ஸுஸ்ரவா ஸுதா ஷண்மதப்ரதிஷ்டபாஸுதர்ம ஸஸ்ய

குரு ஸ்துதி

பெரியவா சரணம் ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப துதி (தமிழில்) இன்றைய தினம் காலையிலிருந்தெர் மனம் கராவலம்ப ஸ்தோத்திரத்தின் இறுதி அடியை திரும்பத் திரும்ப உச்சரித்தபடியஅக இருந்தது. 'காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்..." காரணம் அறியவில்லை. மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்புகையில் கையிலிருந்த கைபேசி தவறி கீழெர் விழ, கணினியின் தட்டச்சுப் பலகையில் பட்டு கீழே விழுந்தது. அதனைக் குனிந்தெ எடுத்தவன் கணினியில் ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப துதி தெரிய ஆச்சர்யப் பட்டேன். இதனை எழுதி பல நாட்களாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்னராக ஒரு முறை பதிவிட்டிருக்கேனா... ஞாபகமில்லை. துதியைப் படித்துப் பார்க்கையில் அதனில் ஏதோ ஒன்று விடப்பட்டுள்ளதாகவே தோன்றியது. கை கால் அலம்பிக் கொண்டு வந்து அதனைப் படித்துப் பார்க்கையில், மனதிற்

பெரியவா பார்வையில்-014 அதிதி போஜனம் விருந்தோம்பல்

பெரியவா பார்வையில்-014 அதிதி போஜனம் விருந்தோம்பல் நம்முடைய புராண காலத்தில் இருந்தே நம்முடைய இல்லங்களில் விருந்தோம்பல் என்பது நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து பழக்கத்தில் இருந்து வருகிறது.. மஹாபெரியவா இதை மிகவும் சிலாகித்து பேசுவார். அதிதி என்பவர் நம் இல்லத்திற்கு வரும் விருந்தினர். அவருக்கு போஜனம் கொடுக்காமல் இருபது மிகப்பெரிய பாவம். போஜனத்தின் முக்கியத்துவத்தை. மஹாபெரியவா ஒரு அழகான கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கதை மூலம் நமக்கு விளக்குகிறார். இனி கதைக்குள் செல்வோம். ஒரு அடர்ந்த காடு.. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இல்லமே காடுகள் தானே...அந்த காட்டில் எந்த ஒரு விலங்குக்கும் ஒரு பிரச்சனை இல்லாமல் ஒரு ஜோடி புறா தம்பதியர் மரத்தின் உச்சியில் தங்களுக்கென்று ஒரு கூட்டை கட்டிக்கொண்டு குடும்பம் ந

திவ்ய தேச திருத்தலம் நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்)

திவ்ய தேச திருத்தலம் நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) நந்திபுர விண்ணகரம் கர்ப கிரஹம் செல்லும் வழி: நாதன் கோவில் என்ற திரு நந்திபுர விண்ணகரம் கும்பகோணத்திற்கு தெற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.புராண காலத்தில் இந்த கோவில் செண்பகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி நாதன் கோவில் முடியும் வரை உள்ள பகுதியே அந்தக்காலத்தில் செண்பகாரண்யம் என்று அழைக்கப்பது. நந்திபுர விண்ணகரம் பெருமாள் தாயாருடன் மூலவர் : வீற்றிருக்கும் கோலத்தில் ஜெகநாதர் தாயார்: அமர்ந்த திருக்கோலத்தில் செண்பக வள்ளி தாயார் தீர்த்தம்: நந்தி தீர்த்த புஷ்காரணி விமானம்: மந்தார விமானம் கோவில் சிறப்பு: காளமேகப்புலவர் இந்த ஊரில்தான் பிறந்தார். இந்தக்கோவில் தக்க்ஷிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்தலவரலாறு: ஒருமுறை பூ

திருப்புகழ்- 12

சுவாமி மலை ஸ்வாமிநாதன் மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 12 அன்பும் அருளும் தரும் தெய்வத்தை நாம் எப்பொழுதும் நம் நினைவில் வைக்க வேண்டும் , இந்த மாற்றம் நம்மிடம் வந்தால் இறை அருள் நம்மை விடாது இருக்கும். சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 12 காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்) ........பாடல் ......... காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி      வாளிம யங்கம னம்பயந் தந்திருள்           கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை      யாழியு டன்கட கந்துலங் கும்படி           காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே வாதுபு ரிந்தவர்

என் வாழ்வில் மஹாபெரியவா -050

என் வாழ்வில் மஹாபெரியவா -050 பிரதி வியாழன் தோறும் இன்றைய சமுதாயத்தில் நாம் எதைஎதையோ தேடுகிறோம் அவைகள் எல்லாம் நமக்கு கிடைத்து விட்டதா? இருந்தும் அன்றாடம் தேடுவது நிற்கவில்லையே! முறைப்படி வாழ்ந்து பாருங்கள் எதையும் தேட வேண்டாம் தேடும் அனைத்தும் உங்களை தேடி வரும் அன்பு பாசம் நேசம் மனிதம் இவைகளைத்தான் சொல்கிறேன். நான் அன்றாடம் அனுபவித்து கொண்டிருக்கிறேன் இந்தசமயத்தில்தான் மஹாபெரியவா எனக்கிட்ட உத்தரவு. “மற்றவர்கள் நலனுக்கு நீ என்னிடம் பிரும்ம முகூர்த்த நேரத்தில் பிரார்த்தனை செய். நானும் அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்றேன். அவாளுக்கு குரு பூஜை செய்ய உத்தரவு கொடுக்கிறேன். அவாளுக்கு கர்ம விதிக்கு ஏற்ப அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ணறேன்” என்றார். இந்த இடத்தில் இருந்து ஒரு வீடு எப்படி இருக்கவேண்டு

குரு புகழ்

பெரியவா சரணம் எங்கெல்லாம் சங்கர கோஷம் நிறைந்திருக்கின்றதோ அங்கே மங்களங்கள் நிறையும் என்பதனை அந்த மஹாபட்டாரிகாவான ஆதிபராசக்தியான பரமேஸ்வரி முதலாக அனைவரும் நமக்கு அருள்வதாயிற்றே! அனுதினமும் சங்கர ஸ்மரணையுடனாக இருந்து விட்டால் நாம் எப்படிப்பட்ட துயரங்களினின்றும் துன்பங்களினின்றும் விடுபட்டு ஆனந்தமாகிய முக்தியை வாழுங்காலத்திலேயே பெறுவோமே! இன்றைய தினம் அப்படியாக ஒரு குருப்புகழ் கொண்டு சங்கரனை ஸ்மரித்து அவருடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதியடைந்து அருள் பெறுவோம், உறவுகளே! ......... சந்தம் ......... தனனா தனனத் தனனா தனனத் தனதா தனனத் …….. தனதான ......... பாடல் ......... இருமா வினையு மினியே வெமையு மணுகா நிலையுந் …….. தருவாயே கருகாத் திறமுங் குலையா மனம

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-044

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-044 பிரதி புதன் கிழமை தோறும் ஸ்ரீ பட்டாபிராமன் மாமா இந்த பதிவு சற்றே வித்யாசமான பதிவு. இந்தப்பதிவு நமக்கு சொல்லும் செய்தி என்ன தெரியுமா? நம்முடைய எண்ணங்கள் ஆழமாகவும் உறுதியாகவும் என்றும் மாறாததாகவும் இருந்தால் அந்த இறைவனே உங்கள் எண்ணங்களுக்கு கண்ணுக்கு தெரியும் ஒரு உண்மை வடிவத்தை கொடுத்து விடுவான் என்பதற்கு ஒரு அசைக்க முடியாக சான்று இந்த பதிவு.. நான் இறைவன் என்று சொன்னது நம்முடைய மஹாபெரியவாளை. இந்த காணொளியில் இரண்டு பாகங்கள் உள்ளன. நான் உங்களுக்கு சமர்பிக்கப்போவது ஒரு அற்புதம் மட்டுமே.. அதுவே கேட்டு கேட்டு அனுபவிக்கும் படியாக நிச்சயம் இருக்கும். நாம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஏராளமான கதைகளை படித்திருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் சொல்லியும் கேட்டிருக்க

ஆன்மாவின் ஏக்கங்கள்

உங்கள் கவனத்திற்கு ஆன்மாவின் ஏக்கங்கள் -புதிய தொடர் ஆரம்பம் நம்முடைய அன்றாட வாழ்வில் எத்தனையோ விஷயங்களுக்கு ஏங்கும் நிலைமை தானே நம்மில் பலருக்கு. நாம் எல்லோருமே அன்றாடம் ஒரு விஷயத்திற்காவது ஏங்குவதுண்டு. அந்த ஏக்கங்களுக்கு ஒரு வடிகால்தான் ஆன்மாவின் ஏக்கங்கள் என்னும் புதியதொடர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நமக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் பொழுது (Transformation) அந்த மாற்றத்தை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் நம்மில் எல்லோருக்குமே இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அந்த மாற்றம் வரும்பொழுது நாம் அந்தமாற்றத்தை அங்கீகரிக்கிறோமா?. நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். நாம் எல்லோருமே இரண்டு பக்கங்களிலுமே இருப்பதுண்டு. ஆனால் உண்மை நிலையை யார் எடுத்து கூறுவது?. இந்த ஏக்கத்திற

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-048

மஹாபெரியவா ஜீவ காருண்யத்தின் உச்சம் மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-048 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மஹாபெரியவாளின் ஜீவகாருண்ய உச்சம் நாமெல்லாம் சிந்திக்க தெரிந்த மனித வர்கம் தானே பின் ஏதற்கு சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி சிந்தித்து பேசுவோம் சிந்தித்து போதிப்போம் மனிதபிறவி எடுத்துவிட்டாலே சொல்லுக்கும் செயலுக்கும் இடையே மிகப்பெரிய பள்ளம் இருக்கும். சொல்வதை செய்ய இயலாது செய்வதையும் சொல்ல முடியாது. இயந்திரத்தனமான வாழ்கை முறையில் எதுவுமே சாத்தியம் இல்லாமல் போகிறது. ஆனால் இந்த கலிகாலத்திலேயே பிறந்து நம்முடனேயே வாழ்ந்து சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஒரு இம்மியளவு கூட இடைவெளியில்லாமல் பார்த்து வாழ்ந்து வந்தார். மஹாபெரியவா. ஜீவகாருண்யத்தை பற்றி மஹாபெரியவா சொல்வது மட்டும்லல ஜீவ காருண்யத்தை கடைப்பிட

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26-ருத்திரன் பாகம் –III

மஹாபெரியவா சரணம் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26 ருத்ரன் பாகம் –III பிரதி திங்கட்கிழமை தோறும் ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு ஓய்வு என்பதே கிடையாதோ? ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை தலையை தூக்கும். இதுதானே வாழ்க்கையின் இலக்கணம். பிரச்சனைகளை கண்டு ஓடிப்போவதும் ஒதுங்கிக்கொள்வதும் யாருக்கும் அழகல்ல. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. நீங்கள் ஓடினால் உங்களை விட்டு பிரச்சனைகள் உங்களை ஓடி போய்விடுமா?. நீங்கள் ஒதுங்க ஒதுங்க பிரச்சனைகளின் ஆழம் இன்னும் அதிகமாகப்போகும். .இதுநாள் வரை உங்கள் கட்டுக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கள் ஒதுங்க ஒதுங்க உங்கள் கட்டுப்பாட்டையும் தாண்டி உங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கின்றன.