என் வாழ்வில் மஹாபெரியவா -061

என் வாழ்வில் மஹாபெரியவா -061 பிரதி வியாழன் தோறும் நீள் முடி தாள் வரை கொண்டவனே திரு நீறு பூசியவனே இமைப்பொழுதும் எங்கள் நெஞ்சில் வாழ்பவனே மாயபிறப்றுக்கும் மாயாவா பிறவிப்பிணியை அறுப்பவனே எங்களை காத்து அருள்பவனே விண்ணையே இல்லமாக கொண்டவனே மண்ணில் நாங்கள் இருப்பது தெரியவில்லையா? கலியின் தாக்கத்தால் இமைப்பொழுதும் கலங்குகிறோமே எங்களுக்கு விடிவு காலமே இல்லையா எங்களை உன் கரங்களால் பற்றிக்கொள் ஜென்மத்தின் இறுதியில் எங்களை அழைத்துக்கொள் பரமேஸ்வரா மஹாபெரியவா எங்களுக்கு பயமில்லாத நோய் நொடியற்ற வறுமை இல்லாத இந்த கலியின் காலத்தில் வாழ என்ன தேவையோ அவைகளை எல்லாம் எங்கள் வாழ்க்கைக்கு தந்தருள்வாய் நின் பாதம் சரணம் மஹாபெரியவா ஈஸ்வர அவதாரம் கங்கை அணிந்தவா கங்கையின் புனித தீர்த்தம் என் இல்லத்திலிருந்த ஏழு நாட்க

SMART Sree Mahaperiyava Arul Religious Trust

நின்னை சரணடைந்தேன் SMART Sree Mahaperiyava Arul Religious Trust It is almost four years since my life took a “U” turn and transformed me and my life. Transformation is too small a word for this dramatic change in me. It is definitely beyond medical science and genetic science. Even, if I had selected an excellent couple on the earth to acquire all the desired qualities of a human, there is no guarantee that the desired qualities would have been inherited by me. Without living in a mother’s womb for nearly 10 months and without any well defined parents, all the desired and enviable qualities were formatted in me, my attitude underwent a sea change and my belief system touched new height. Comp

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-058

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-058 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் ஓரிருக்கை மணி மண்டபம் பிறந்த கதை மஹாபெரியவா ஒன்றை மனதில் நினைத்து சங்கல்பம் செய்துவிட்டால் பிரபஞ்சமே ஒன்று கூடி சங்கல்பத்தை நிறைவேற்றி விடும் இந்த பதிவே ஒரு ஆதாரம் ஒரு நாள் மாலைப்பொழுது மஹாபெரியவா தன்னுடைய கைங்கர்ய மனுஷாளுடன் வந்தவாசி சாலையில் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார். மேற்கில் பொன்னிறத்தில் கதிரவன் கீழே இறங்கி கொண்டிருந்த மந்தமாருத மாலை நேரம். ஓர் மணல் மேடான பகுதி. நன்றாக கண்களை கவரும் வண்ணம் பூச்செடிகள் வளர்ந்து நிற்கின்றன. அருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்த நீர்த்தடம். இவைகளை பார்த்த மஹாபெரியவா தன்னுடைய சிப்பந்தி வேதபுரி மாமாவிடம் சொல்கிறார். ஏண்டா வேதபுரி இந்த இடம் எவ்வளவு ரம்யமா இருக்கு என் கண்ணுலேயே இருக்குடா. தூங்க

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -IV-ப்ரியா சுதாகர் தம்பதியினர்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -IVப்ரியா சுதாகர் தம்பதியினர் பிரதி திங்கட்கிழமை தோறும் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு நீண்ட அற்புத காவியத்தை நிகழ்த்த கூடியவர் மஹாபெரியவா ப்ரியா சுதாகர் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதும் ஒரு வாழ்க்கை காவியம் தானே. சென்ற வாரம் தடைகளையும் தாண்டி மஹாபெரியவா எப்படி தன்னுடைய அற்புதங்கள் மூலம் ப்ரியாவிற்கு வேலையயை வாங்கிக்கொடுத்தார் என்பதை பற்றி பார்த்தோம். இந்த வாரம் வேலையில் சேருவதற்கு முன் ப்ரியா எதிர்கொண்ட மற்றுமொரு பிரச்னையை மஹாபெரியவா எப்படி கையாண்டார் என்பதை பார்ப்போம். ப்ரியா சேரவிருக்கும் அலுவலகம் ப்ரியாவை தன்னுடைய விசாவை ரத்து செய்வதற்கு அந்த நாட்டின் விசா அலுவலகத்தில் கொடுத்து ரத்து செய்து விட்டு தெரிவிக்குமாறு சொன்னார்கள்.. காரணம் பிரியவின் விசா

திருப்புகழ்- 21

மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 21 நம் வாழ்வில் பல தடைகள் வந்தாலும் தீய வீனை பயம் தந்தாலும் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று நம் மூச்சிலே ஜபம் செய்தால் வீனை அகலும் மெய்இன்பமும் நிச்சயமாக கூடும் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 21 அங்கை மென்குழல் (திருச்செந்தூர்) அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர் பின்பு கண்டறி யோநா மீதே அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா எங்க ளந்தரம் வேறா ரோர்வார் பண்டு தந்தது போதா தோமே லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா திங்கு நின்றதென் வீடே வாரீ ரென்றி ணங்கிகள் மாயா ல

என் வாழ்வில் மஹாபெரியவா -060

என் வாழ்வில் மஹாபெரியவா -060 பிரதி வியாழன் தோறும் அண்டம் தான் பிண்டம் பிண்டம் தான் அண்டம் பிரபஞ்சமே நாம் நாமே பிரபஞ்சம் பிரபஞ்சத்துடன் பேசுங்கள் கேட்டது கிடைக்கும் மஹாபெரியவாளே பிரபஞ்சம் இந்த பதிவு தாங்கி வரும் அற்புதம் கங்கையில் இருந்து தோன்றியது. ஆகவே கங்கை ஹராத்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இரவு நேரத்தில் கங்கை மாதாவிற்கு ஹாரத்தி சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு அற்புதங்களை எழுதுவதாக சொல்லியிருந்தேன். ஆனால் அதற்குள் மஹாபெரியவா ஒரு அற்புதத்தை நிகழ்த்தி விட்டார்.. நிகழ்த்திய அற்புதம் மஹாபெரியவாளின் நூற்றி இருபத்தி ஐந்தாவது ஜெயந்தியை ஒட்டி நிகழ்துள்ளதால் அந்த அற்புதத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் உள்ளம் துடித்தது. ஆகவே காலம் தாழ்த்தாமல் இந்த பதிவில் நிகழ்ந்த அற்புதத்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-057

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-057 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் இறைவன் இருக்கின்றான் அவன் நினைத்தால் அசையாத அணு கூட அசையும் பிரபஞ்சத்தின் தொடக்கமும் அவனே முடிவும் அவனே கண்ணுக்கு தெரியும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா இதை மெய்ப்பிக்கும் ஒரு நிகழ்வு நம்முடைய காஞ்சி மடத்தின் ஆஸ்தான சிற்பி கணபதி ஸ்தபதி என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் இந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஒரிக்கையில் இருக்கும் மஹாபெரியவா மணி மண்டபம் ஒரு எடுத்து காட்டு. கணபதி ஸ்தபதியின் சிற்பக்கலைக்கு கிடைத்த சரியான அங்கீகாரம் தான் ஆந்திர மாநிலத்தின் ஆஸ்தான சிற்பியாக நியமிக்கப்பட்டார். அப்பொழுது ஆந்திராவின் முதல்வராக இருந்த N.T.ராமராவ் இவரை ஆஸ்தான சிற்பியாக நியமித்து சகல மரியாதைகளையும் செய்தார், உங்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -III - ப்ரியா சுதாகர் தம்பதியினர்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -III பிரதி திங்கட்கிழமை தோறும் ப்ரியா சுதாகர் தம்பதியினர் நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும் எது எப்படி இருந்தாலும் மஹாபெரியவா இருக்கும் வரை நினைத்தது நடந்து விடும். சென்ற வாரம் ப்ரியா சுதாகர் வாழ்க்கையில் விளையாடிய விதியை பார்தோம்... இந்த வாரம் அந்த விதி எப்படிப்பட்டது.. எவ்வளவு ஆழமான ஆபத்துகளை விளைவிக்கக்கூடியது.. இந்த விதியை மஹாபெரியவா கையாண்ட விதம் எல்லாமே ஒரு இனிய அனுபவம் அற்புதம். இனி அந்த விதியை பற்றி பார்ப்போம். ஒரு முக்கியமான டாக்குமெண்ட்.. இந்த டாகுமெண்ட்டை ப்ரியா தேர்வு ஆகியிருக்கும் அலுவலகத்தில் கேட்காமல் இருக்க வேண்டுமே என்று அவர்கள் வேண்டிக்கொண்டார்கள்.. அந்த வங்கி இந்த முக்கியமான டாக்குமெண்டை கேட்டுவிட்டது என்று

குரு பூஜை புஷ்பங்களே உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

குரு பூஜை புஷ்பங்களே உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என் உள்ளத்திலும் இல்லத்திலும் கோவில் கொண்டிருக்கும் நமது பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா பாதுகையுடன் இன்று உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை நாள் ப்ரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து நீங்கள் செய்யும் மஹாபெரியவா குரு பூஜை உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையும் இனிமையான வாழ்க்கை அனுபவத்தையும் அத்தியாயத்தையும் துவங்கட்டும்.... பிரும்மனுக்கு மட்டுமா இது முஹூர்த்தம்.. உங்களுக்கும் தான் இது ஒரு சுப முஹூர்த்தம். மஹாபெரியவாளும் உங்களை தாராளமாக ஆசிர்வதிக்கட்டும்.. நீங்கள் என்னென்ன பிராத்தனைகளை முன் வைத்து மஹாபெரியவாளை உங்கள் இல்லத்திற்கு அழைக்கிறீர்களோ உங்கள் அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும்.. சென்ற நொடி வரை உங்கள் வாழ்க்கை எப்படியோ எனக்கு தெரியாது. ஆ

என் வாழ்வில் மஹாபெரியவா -059

என் வாழ்வில் மஹாபெரியவா -059 பிரதி வியாழன் தோறும் பக்தி என்பது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சரியான விகிதத்தில் கலந்த்து செய்வது. அற்புதம் என்பது உங்கள் ஒரு சுவாசத்தின் நேரத்தில் நடந்து முடியும் ஒரு நிகழ்வு. சாத்தியமே இல்லை முடியவே முடியாது என்று நினைப்பீர்கள் நிச்சயம் சாத்தியம் என்று ஒரு புதிய திசையில் இருந்து உங்கள் முன்னே நிற்கும் அற்புதம். அற்புதங்களே மஹாபெரியவா மஹாபெரியவாளே அற்புதம் எனக்கு சிறு வயதில் இருந்தே பிச்சை எடுப்பவர்களையும் கை கால் இல்லாதவர்களையும் கஷ்டப்படும் குழந்தைகளையும் பார்த்தால் என் மனம் அவர்களுக்காக ஏங்கும்... நான் அலுவலகத்திற்கு என்னுடைய காரில் செல்லும் பொழுது ஜன்னல் கதவை தட்டி சாப்பிட தங்களுடைய வயிற்றை காண்பித்து ஏதாவது கேட்பார்கள். நான் எப்பொழுதுமே என்னுடைய காரில் ப

திருப்புகழ்- 20

வயலூர் முருகன் தம்பதி சமேதராய் மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 20 அன்புள்ள மகா பெரியவா அடியார்களுக்கு வணக்கம். நம் வாழ்வில் வரும் எல்லா துன்பங்களும் தீர ஒரு வழி இருக்கின்றது. மனதார முருகா ஷண்முகா ஆறுமுகம் என்று துதித்தால் வேலும் மயிலும் சேவலும் துணையாக வரும் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 20 வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி ...... க

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-056

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-056 பிரதி செய்வாய்க்கிழமை தோறும் இந்த பதிவு வேத ரக்ஷ்ணத்திற்கும் வேதத்திற்கும் மஹாபெரியவா கொடுத்த மரியாதையை பறை சாற்றும் ஒரு நிகழ்வு...அப்பொழுது மஹாபெரியவா வட நாட்டில் உள்ள மஹாகாவுன் என்னும் ஊரில் முஹாம் இட்டிருக்கிறார். அங்குள்ள பக்தர்களுக்கு அன்றாடம் தரிசனமும் ஆசிர்வாதமும் கொடுத்து உபன்யாசங்கள் போன்றவைகளை செய்து கொண்டிருந்தார்.. இதேசமயத்தில் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர் வாஜபேய யாகம் செய்து விட்டு குடும்பத்துடன் மஹாபெரியவாளை தரிசனம் காண காஞ்சிக்கு வந்திருந்தார்.. வாஜபேய யாகம் என்றால் என்ன? வாஜபேய யாகம் என்பது மிகவும் கடினமான யாகம்...கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு யாகம் அது. அவ்வளவு சிரத்தையாக செய்யவேண்டும் என்பது விதி. சாஸ்திரிகளின் குடும்பமே சேர

குரு ஸ்துதி

பெரியவா சரணம். சூலம் கரமேந்தும் சொக்கனெனும் நாமங்கொள் சுந்தரன் செகம்புந்திச் சொக்கவைத்த சுந்தரமாம் தண்டம் கரமேந்தும் தன்னருளில் வாழ்விக்கும் சங்கரனின் பேரருவின் தரிசனமும் கொள்வோமே! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காதங்களுடன் சாணு புத்திரன்.

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -II-ப்ரியா சுதாகர் தம்பதியினர்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -II ப்ரியா சுதாகர் தம்பதியினர் பிரதி திங்கட்கிழமை தோறும் இவர்கள் ஒரு பாதையை தேடவில்லை மஹாபெரியவா போட்டுக்கொடுத்த பாதையில் மஹாபெரியவா கை விரல்களை பிடித்து கொண்டு வாழ்க்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று பிரார்த்தனைகளில் முதல் ப்ரார்தனையான ப்ரியாவிற்கு வேலை என்ற பிரார்த்தனைக்கு நான் மஹாபெரியவா முன் வைத்த முதல் பிரார்த்தனை. அதற்கு மஹாபெரியவா சொன்ன பதில், நான் பிரியவாவிற்கு சொன்ன புத்திமதிகள், நான் சொன்ன உறுதி மொழிகளுக்கு மஹாபெரியவா தன்னுடைய அற்புதத்தால் எப்படி வலு சேர்த்தார்.? இறுதியில் எப்படி வேலை கிடைத்தது.. எதிர்பார்த்ததை விட எவ்வளவு பெரிய வேலை கிடைத்தது.. என்பது தான் இதில் அற்புதம் எதிர்பார்த்த சம்பளத்தை

ஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.

ஸ்ரீகுருகானம் - பரத அபிநயம். https://www.youtube.com/watch?v=_413znMXioc&feature=youtu.be Mahaperiyava Stuthi | Kanchi Nagar Veedhiyile www.youtube.com Lyrics: Shri. Saanu Puthiran Translations: Shri. Puducode Ramachandra Iyer Mridangam: Bhargav Raguraman Vocal: Vivek Sivaraman Violin: Shreyas Ravishankar Da. சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தன்று ஆரிசோனா மாகாணத்திலே நடைபெற்ற ஸ்ரீமஹாகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக வைபவ கலை நிகழ்ச்சிகளிலே நம் உம்மாச்சீ ஸ்மரணையும் அமைந்திருப்பது விசேஷமல்லவோ! அவ்யாஜ கருணாமூர்த்தியின் கருணாகடாக்ஷத்திலே எழுதப்பெற்ற " காஞ்சி நகர் வீதியிலே..." கானத்திற்கு அபினயத்துடனாக ஒரு குரு ஸ்மரணை. பெரியவான்னு உச்சரித்தால் நேஷனல் இண்டெகரேஷன் இல்லே... யுனிவர்சல் இண்டெகரேஷன் தான் என்பதற

பெரியவா பார்வையில் சைவமும் அசைவமும்

பெரியவா பார்வையில் சைவமும் அசைவமும் ஈஸ்வரன் படைப்பில் இந்த பூலோகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் தொன்று தொட்டு இருந்து வருகிறது.. .சூரியன் சந்திரன் ஆண் பெண் இன்பம் துன்பம் இன்னும் எத்தனையோ இருவகை படைப்புகள். இரு வகை படைப்பிலேயும் மிகவும் உயர்ந்த படைப்பு மனித பிறவி.. எண்பத்து நான்கு லக்ஷம் உயிரினங்களில் மிக உன்னதமான படைப்பு மனித படைப்பு. மற்ற உயிரங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வித்யாசம் அறிவை பயன்படுத்தி சிந்திக்க தெரிந்த படைப்பு மனிதப்படைப்பு. விலங்குகளுக்கு பசியெடுத்தால் சாப்பிடும். உறக்கம் வந்தால் உறங்கும். காமம் கொண்டால் காமுறும். பசி எடுத்தால் வேட்டை ஆடி உண்ணும். அவைகளுக்கு தங்களுடைய பெருமையும் சக்தியும் தெரியாது. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லையே!. மனிதன் சிந்திக்க தெரிந்தவன்..

திவ்ய தேச திருத்தலம் கபிஸ்தலம் கஜேந்தரவரத பெருமாள் கோவில்

திவ்ய தேச திருத்தலம் கபிஸ்தலம் கஜேந்தரவரத பெருமாள் கோவில் கஜேந்தரவரத பெருமாள் தம்பதி சமேதராய் அமைவிடம் : தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து பதினைந்தாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மூலவர்: இங்கு கஜேந்திர வரதப்பெருமாள் ஆதிமூலம் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சயனித்து காட்சி கொடுக்கிறார். தாயார்: இங்கு தாயார் ரமாமணி வள்ளி தாயார் என்றும் பொற்றாமரையாள் என்றும் அழைக்கப்படுகிறார். விமானம்: ககனா க்ரித விமானம் கபிஸ்தலம் கோவிலின் முகப்பு தோற்றம் ஸ்தல விருக்ஷம் : மகிழம்பூ மரம் தீர்த்தம்: கஜேந்திர புஷ்காரனி தீர்த்தம் கபில தீர்த்தம் திரு விழா: ஆடி பௌர்ணமி அன்று நடக்கும் கஜேந்திர மோக்ஷம் லீலை வைகாசி விசாக தேர் திரு விழா பிரும்மோட்சவம் இங்

திருப்புகழ்- 19

வயலூர் முருகன் தம்பதி சமேதராய் மகா பெரியவா சரணம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம். திருப்புகழ்- 19 அன்புள்ள அடையார்களுக்கு வணக்கம் வாழ்வில் எத்தனை வலி வந்தாலும் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று உள்ளத்ததோடு ஜபம் செய்வோம் ஜபம் நம் மூச்சு காற்று என மாறும். எந்த வேளைக்கும் வேலும் மயிலும் சேவலும் துணை துன்பம் பறந்தோடும் ஆனந்தம் நிலைக்கும் சரவணபவ நிதி அறுமுக குரு பர நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம் திருப்புகழ் 19 வடத்தை மிஞ்சிய  (திருப்பரங்குன்றம்) வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை      தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்           மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல      நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை           வழுத

என் வாழ்வில் மஹாபெரியவா -058

என் வாழ்வில் மஹாபெரியவா -058 பிரதி வியாழன் தோறும் அற்புதங்கள் இரண்டு வகை ஒன்று மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள் இரண்டு அற்புதங்கள் அற்புதங்களாகவே வெளிப்படுவது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல மஹாபெரியவாளே ஒரு அற்புதம் தானே நான் ஆசைப்பட்டது அனைத்தையும் மஹாபெரியவா எனக்கு பக்தர்கள் மூலம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.. ஒரு மஹாபெரியவா கோவிலில் பாதுகை எப்படி கோவில் கொள்ள வேண்டுமோ அப்படி கோவில் கொள்ள செய்து விட்டார். என் இடது புறம் செயல் இழந்து விட்டது என்ற நினைவே எனக்கு இல்லாமல் என் வாழ்க்கையை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டிருக்கிறார் மஹாபெரியவா. நான் ஒன்றை நினைத்து ஆசைப்படுகிறேன்.. அந்த ஆசைக்கு மஹாபெரியவா செயல் வடிவம் கொடுத்து எல்லோரையும் திகிமுக்கு ஆடவைத்து விடுகிறார்.. மஹாபெரியவா பாதுகை வந்து விட்டால் அ

குருப்புகழ்

பெரியவா சரணம் தவத்திரு அருணகிரிநாதர் செந்தூர் வேலனாம், ஞானஸ்கந்தன், தமிழ்கடவுளான முருகப்பெருமானை நாகப்பட்டிணத் திருத்தலத்தில் உறைவோனைப் பாடிய திருப்புகழினுடைய சந்தத்திலே அமைந்த்ஃ இந்த குருப்புகழினை இன்றைய தினம்.பகிரும் வேளையில் இனிய ஹேவிளம்பியின் சித்திரை முதல் நாளான இன்று முதல் அனைவதும் வளமோடி வாழ ப்ரார்த்த்கிப்போமே! சங்கரம் போற்றி! ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #குருப்புகழ் “தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான” ......... பாடல் ......... படுமா வலியே உறுமூ வினையா லணைவா தமென …. அறியாமல் மனமே விடுசூ ழிருளா யுளவாழ் நிலையே சுகமென ...... உழலாமல் விரைவா தமொடு இருளா கிடவே நிறைமா யுநிலை …… மாறிடவே நினைவே யுனதா யுளதாய் வரமாய்