பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா பிரதி புதன்கிழமை தோறும் எல்லோர் இதயமும் ரத்தமும் சதையால் ஆனதுதான் நாம்தான் அதை கல்லாக்கி விடுகிறோம் இரும்பு இதயமும் கரைந்து விடும் அணுகுமுறை சரியாக இருந்தால் ஒரு வாழும் உதாரணத்தை காணுங்கள் ராமஸ்வாமி சர்மா என்னும் வேத பண்டிதர் காஞ்சிபுரத்தில் சிறு பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். மஹாபெரியவாளுக்கும் மிகவும் பிடித்த ஒருவராக இருந்தார்.இவர் தன்னிடம் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு குரு பக்தி குரு விசுவாசம் போன்ற எல்லவற்றையும் சொல்லிக்கொடுத்தார். இவருடைய சிறந்த மாணவர்களுள் ஒருவராக கணேசன் என்னும் கணேச கனபாடிகள் இருந்தார். கணேச கனபாடிகள் சில காலம் பெங்களூருவில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். மாதம் மூன்று நான்கு முறையாவது காஞ்சிபுரத்திற்கு

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் “தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” இந்த அற்புதசாரல்களின் நாயகன் சுரேஷ் ஒரு பட்டதாரி. நாயகி பவானியும் ஒரு பட்டதாரி. சுரேஷ் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த ஒரு பட்டதாரி இளைஞர். மனைவி பட்டதாரி இல்லத்தரசி. மஹாபெரியவாளின் ரா.கணபதி அண்ணா எழுதிய தெய்வத்தின் குரல் படித்த ஒரே இரவில் வாழும் முறை மாறிய அற்புதம். வாழ்க்கைமட்டுமா மாறியது. கணவன் மனைவி இருவருமே தங்களையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் ஊர் கோயம்பத்தூர். நவீன வாழ்க்கை முறை, நவீன ஆடை ஆபரணங்கள் இவைகளுக்கிடையே தங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இவர்கள் ந

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- சரண்யமாலா

குரு பூஜை அற்புதங்கள்- பாகம்-I- சரண்யமாலா பிரதி திங்கள் தோறும் “தாய்மை” “தொல்லை தனெக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும் சொல்லாமல் சொல்லுகின்ற தேவதையின் கோவிலது” எந்த ஒரு மனிதன் பெண்மையை மதிக்கிறானோ போற்றுகிறானோ அவன் வாழ்க்கையில் குற்றம் குறை இல்லாமல் வாழ்வான் என்பது இறை நியதி. ஒரு நாடும் அப்படிதான். எந்த ஒரு நாடு பெண்மையை கோவிலுக்கு இணையாக வணங்கிக்குகிறதோ அந்த நாட்டில் வறுமை இருக்காது பஞ்சம் இருக்காது. அது ஒரு கர்ம பூமியாகவே கருதப்படும். இன்று உலகத்தில் இருக்கும் நாடுகளிலேயே இறை பூமியாக கருதப்படுவது நம் பாரத நாடு மட்டும்தான் .நம் நாட்டில் மட்டும்தான் நம்மைத்தாங்கும் மண்ணை தாய்க்கு ஒப்பாக மதிக்கிறோம். அதனால் தான் தாய் நாடு, பாரத தாய் நாடு, இந்திய தாய்த்திருநாடு என்று போற்றுகிறோம். ஓடும் நதிக

உங்கள் G.R.மாமா மீண்டும்  உங்களிடம்

நீ என் தாயுமானவன் என் இனிய உறவுகளே, உங்கள் G.R.மாமா மீண்டும் உங்களிடம். கடந்த இருபது நாட்களுக்கும் மேலான நம்முடைய நெருக்கமான உறவில் சிறு தடை ஏற்பட்டுவிட்டது. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. நம்முடைய உறவு என்பது நாம் இருவருமே இறைவனிடம் கேட்டு பெற்றது இல்லை. .இறைவனால் ஒரு இறை காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட உறவு நம் உறவு.. . என் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக நான் படுக்கையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்... என்னுடைய அன்றைய நாட்கள் என் மனத்திரையில் ஒரு திரை படமாக ஓடியது.. எனக்கு உடல் நிலை சரியில்லை என்பது மஹாபெரியவளுக்கு தெரியாதா என்ன.? நிச்சயம் தெரிந்திருக்கும்.. அதனால் தான் மருத்துவர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல ஆத்மாவை எனக்காக என் கண்களில் காண்பித்து

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-007

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-007 அன்று குழந்தை மது மதி இன்று ஒரு குழந்தைக்கு தாய் மது மதி காணொளியில் பேசுவது டாக்டர் ரவிச்சந்தரன் மது மதியின் தந்தை வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளையும் டாக்டர் தம்பதிகளின் போராட்டங்களையும் போராடியே வாழ்க்கையை வென்ற மதுமதியையும் நினைத்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். டாக்டர் ரவிச்சந்தரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணபதி அக்ராஹாரத்தை பிறந்த இடமாகக்கொண்டவர். டாக்டருக்கு திருமணமாகி திருமண பரிசாக ஒரு பெண் குழந்தையை கடவுள் கொடுத்தார். வாழ்க்கையில் உறவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் "நான் ஒரு “அமங்கலி” என்று நினைத்த எந்தப்பெண்ணும் நொடிப்பொழுதில் “சுமங்கலி” ஆகிவிட முடியும் மஹாபெரியவா அனுகிரஹமிருந்தால்" -------------- இந்த அற்புதச்சரால் உங்களுக்கு ஒரு ஆத்ம விருந்து ------- நாமெல்லாம் இதுவரை தனிமனிதனொரு வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்த பெரியவாளை பார்த்திருக்கிறோம். இந்த அற்புதசாரல் மட்டும் சாரல் அல்ல கொட்டும் மழை. வாருங்கள். இனி அற்புதசாரல்களில் நனைவோம். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காஞ்சி ஸ்ரீமடத்தில் சுமங்கலிகளுக்கு சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. மடமே விழாக்கோலம் பூண்டிருந்தது..வாழைமர தோரணங்களும் மங்கள வாத்தியங்களும் முழங்கிக்கொண்டிருந்தது. சுமங்கலி பெண்கள் அனைவரும் முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு தழைய தழைய தொங்கும் தாலியில

குரு பூஜை அற்புதங்கள்- ஸ்ரீ ஆண்டாள்

குரு பூஜை அற்புதங்கள்- ஸ்ரீ ஆண்டாள் மஹாபெரியவாளின் மேலும் ஒரு அற்புதம் “ஒவ்வொருவர் வாயிலும் ஓற்றை நாக்கு உலகின் வாயினில் மட்டும் இரட்டை நாக்கு நாக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் நாக்கு பிரசவிக்கும் வாக்குகள் நல்லவையாக இருக்கட்டுமே” குரு பூஜை அற்புதங்களில் ஒன்பதாவது பாகம் ஸ்ரீ ஆண்டாளின் வாழ்வில் மஹாபெரியவா குரு பூஜைக்கு தன்னுடைய அற்புதங்கள் மூலம் பதிலளித்ததை நம்மெல்லாம் படித்து மஹாபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை பக்தர்கள் வாழ்வில் கண்டு அதிசயத்தது மட்டுமல்லாமல் மஹாபெரியவாளின் இறை அற்புதத்தின் எல்லையை காண முடியாமல் நம் கண்கள் அகல விரிந்த நாட்களும் உண்டு. இந்த பதிவில் ஸ்ரீ ஆண்டாள் வாழ்வில் நிகழ்ந்த மேலும் ஒரு அற்புதத்தை ஸ்ரீ ஆண்டாள் என்னிடம் பகிர்ந்துகொண்டதை உங்களிடம் நான் இப