பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு விக்கு விநாயகராம் மாமா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-017 திரு விக்கு விநாயகராம் மாமா மஹாபெரியவா இந்த சொல்லை கேட்டாலோ உச்சரித்தாலோ உங்கள் கண்களில் உங்களை அறியாமல் கண்ணீர் பெருகுகிறதா உங்களுக்குள் மஹாபெரியவா வாழ்கிறார் இது சத்தியம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரவர்கள் செலுத்தும் திசையில் செல்லும்.. ஆனால் விநாயகராம் மாமாவின் வாழ்க்கை மஹாபெரியவளால் செங்கல் செங்கலாக வைத்து கட்டப்பட்டது. சமுதாயத்தில் ஒரு சிலருக்குத்தான் அறிமுகம் தேவையிருக்காது.. அப்படி பட்ட ஒரு சிலரில் கடம் வித்வான் விக்கு விநாயகராம் மாமாவை தெரியாதவர்களே இல்லை எனலாம். கச்சேரிகளில் கடம் என்பது ஒரு உப பக்கவாத்தியம். அதை ஒரு கச்சேரி செய்யும் அளவிற்கு ஒரு முதன்மை வாத்தியமாக பரிமளிக்க வைத்த பெருமை மாமாவை சேரும். பிரதோஷ மாமாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. மஹா

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் வெற்றி சிரித்து வாழவைக்கும் தோல்வி சிந்தித்து வாழவைக்கும் இரண்டாவது அற்புதம் ஒரு முறை காஞ்சி ஸ்ரீ மடத்தில் இரவு வேலை முடிந்தவுடன் பவாரின் மனைவியும் மகளும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்கள் திருப்பதி போகவேண்டுமென்றும் அவர்களுடன் பவாரும் வரவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.அதற்கு பவார் " நான் வரமுடியாது.எனக்கு பயமாக இருக்கிறது மஹாபெரியவாகிட்டே உத்தரவு கேட்க" என்று சொல்லி மறுத்து விட்டான். பணம் மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். விடிந்தால் மனைவியும் மகளும் திருப்பதி கிளம்பவேண்டும். இரவு படுக்கபோகும்முன் மஹாபெரியவளிடத்தில் ரிப்போர்ட் செய்வது வழக்கம். அந்த முறையில் பவார் மஹாபெரியவாளிடத்தில் போய் ரிப்போர்ட் செய்தார்..அப்பொழுது ம

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்வர்ணமால்யா

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்வர்ணமால்யா “நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டுனமானால் பொருள் உன்னைவிட்டு போவது முக்கியமல்ல நீ பொருளை விட்டு விலகவேண்டும்” காஞ்சிபுரத்தில் அதிஷ்டான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவித்துவிட்டு அவர்களுடைய ஊருக்கு சென்று சேர்ந்தனர். மறு நாள் காலை புதன் கிழமை. என் கனவில் மஹாபெரியவா தரிசனம் எனக்கு புதன் கிழமை அதி காலை மஹாபெரியவா கனவில் தரிசனம் கொடுத்து கீழ் வருமாறு சொன்னார். "ஸ்வர்ணமால்யாவிற்கு அவளை பிடித்த பேய் போயிடுத்துடா. அவள் வேலைக்கும் அனுக்கிரஹம் பண்ணியாச்சு. இன்னமே சுபிட்ஷமா இருப்பா. தன்னுடைய அற்புத அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் பல குடும்பங்களில் விளக்கேற்றி வைப்பாள். நீ தான் நன்னா எழுதுவையே இவள பற்றியும் எழுது”

Guru Pooja Experience by Sow.Vyjayanthi Chennai

Guru Pooja Experience by Sow.Vyjayanthi Mahaperiyava Bakthi & HIS divine excellence is Not an imaginatory Not a hallucinatory Not a dream at a distance But an existential reality Vyjayanthi is a living example I came to know about this puja and G.R. mama through my chithi. I thought of sending a mail to mama since I was not able to clear my CS final exams and for few other personal reasons. On 18th september,2018 I sent a mail to him. After that I started checking my mail with a hope of getting a reply. I really wondered whether out of many mails’ mama get in a day, will I get permission for doing puja. A week went by and suddenly on 26th September, 2018 morning I got a mail from G.R. Mama t

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திரு ராமநாதன் செட்டியார்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திரு ராமநாதன் செட்டியார் ஆத்மாவிற்கு ஜாதிகள் உண்டா இல்லையே மஹாபெரியவா கடைபிடித்த நெறிமுறைகளில் இதுவும் ஒன்று இதை பறைசாற்றும் அனுபவம் இந்த பக்தரின் அனுபவம் பொதுவாகவே ஒரு அபிப்ராயம் நிலவிய காலம் அது. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உரியவரான குரு. பிராமணர் அல்லாதாருக்கு மஹாபெரியவா ஆசிர்வாதம் பண்ண மாட்டார் என்றும் ஒரு கருத்து நிலவியது. இந்தக்கருத்தையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் மஹாபெரியவா தன்னை ஒரு ஜகத் குரு என்றும் சொன்னது மட்டுமல்லாமல் எல்லா ஜாதியினருக்கும் ஒன்றுபோல அருள் பாலித்த சம்பவங்கள் ஏராளம்.அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இந்த ராமநாதன் செட்டியார் என்ற மஹாபெரியவா பக்தரின் அனுபவமும் கூட. ராமநாதன் செட்டியாருக்கு சங்கர மடத்துடன் ஒரு பாரம்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஹம்பி- கர்நாடக மாநிலம். இந்திய சிற்ப கலைக்கும் பழமை நாகரீகத்துக்கும் எஞ்சிய ஒரு சான்று. ஹம்பி பற்றிய காணொளி விடியோவை கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் கண்டு களித்து விட்டு மேலே அற்புதத்தின் உள்ளே நுழையுங்கள். https://www.youtube.com/watch?v=ik3KiYAMxic அற்புதங்களை பகிர்ந்து கொண்டவர்: ஸ்ரீ அமரேந்தர் அற்புதங்களை அனுபவித்தவர் : திரு பவார் -காவலாளி வேலை பார்த்த வருடம் -1980 - 1994 இருவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மஹாபெரியவா அற்புதத்தை அனுபவித்த காவலாளி ஸ்ரீ பவாருக்கு இந்த தொடர் சமர்ப்பணம் (௦22 அண்ட் ௦23) மஹாபெரியவா அற்புதத்தை மட்டும் அனுபவிப்பதைவிட அற்புதம் நடந்த இடத்தின் பின்னணி குறித்தும் அறிந்து கொண்டால் அனுபவிக்கும் அற்புதம் இன்னும் சுவையாக இருக்கும

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- ஸ்வர்ணமால்யா

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II-ஸ்வர்ணமால்யா “பொதுத்தொண்டு செய்பவன் மான அவமானத்தை பார்க்கமாட்டான் மிகவும் தூய்மையான எண்ணத்தை கொண்டிருப்பான் தெய்வங்கள் அனைத்தும் அவனுக்கு துணை நிற்கும்” சென்ற வாரம் மஹாபெரியவாளிடம் ஸ்வர்ணமால்யாவின் பிரச்சனைகளை எடுத்து வைத்து தீர்வு வேண்டினேன். வழக்கமாக மஹாபெரியவா பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள்வரை எடுத்துக்கொள்வார் பதில் அளிக்க. ஆனால் ஸ்வர்ணமால்யாவின் பிரச்சனைக்கு நான்காவது நாள் குரு பூஜை உத்தரவு கொடுத்து விட்டார். நானும் ஸ்வர்ணமால்யாவிடம் குரு பூஜை உத்தரவு பற்றியும் அதன் பூஜை செய்யும் முறை பற்றியும் தெரிவித்தேன். இந்த போஸ்ட் எழுதும்பொழுது ஐந்து வார பூஜை முடித்திருந்தாள்.. ஒவ்வொரு வாரமும் எப்படி கடந்தது. என்னென்ன பேய் பிரச்சனைகளை எதிர்கொண்டாள் என்பத

Guru pooja Experience by Mrs.Geetha of Mumbai

Guru pooja Experience by Mrs.Geetha of Mumbai Periyava You answer our prayers in many ways Anonymous voice through unknown persons And even from unknown directions. This post carries your miracle through a dream. Geetha of Mumbai shares her experience Good Morning Mama. I am happy to share that today I have completed Guru Puja with utmost happiness. This itself gives me confidence in life. I don’t know how to express my gratitude to you. I want to share a news . Mama before getting reply from you , I prayed and pleaded Periyava to come in dream( thinking only then Periyava accepted me). I had very bad dream that day, so I fought with HIM badly and even two days I didn’t pray him. Then I pra

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திருமதி மீரா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா- திருமதி மீரா வாழ்க்கை ஒளி இழக்கலாம் அது நிரந்தரம் அல்ல கணங்கள் ஒளியை இழக்கலாமா இழந்த ஒளியை மீட்ட முடியுமா இயற்கையும் பார்வையும் இறைவன் மனித வர்க்கத்திற்கு கொடுத்த கொடையல்லவா இழந்த ஒளியை திரும்ப கொடுத்த அற்புதம் மஹாபெரியவாளின் விஸ்வரூப அற்புதத்தை காணுங்கள் திருமதி மீரா ஒரு இசை குடும்பத்தை சேர்ந்த பெண். இவருடைய தந்தை ஆணையாம்பட்டி கணேசன் என்னும் ஜலதரங்கம் வசிக்கும் விற்பன்னர். (ஜலதரங்கம் என்பது பல கோப்பைகளில் தண்ணீரை நிரப்பி ஒரு இசை எழுப்பும் தடிமனான குச்சியால் நீருள்ள கோப்பையை தட்டி ஓசை எழுப்பி மேடைகளில் கச்சேரி செய்வார்கள்.). இவருடைய தந்தை மஹாபெரியவாளுக்கு நன்கு அறிமுகமானவர்.காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு மிகவும் வேண்டியவர். நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மஹாபெரியவாளின்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-021 உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை “மஹாபெரியவா”” இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்குள் என்ன நடக்கிறது? என்ன செய்கிறது? ஒரு இனம் புரியாத இன்பச்சலனம் இல்லையா. ஜாதி மதம் குலம் கோத்திரம் எல்லாவற்றையும் தாண்டி "மனிதன்" என்று ஒரு சொல்லுக்குள் அடங்கும் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். இது எப்படி சாத்தியம். இதோ என் கற்பனையில் பூத்த ஒரு காட்சி. இடம்- திருப்பாற்கடல் இறை சபை. சபையில் உள்ளவர்கள் ஈஸ்வரன் ,விஷ்ணு, ப்ரம்மா மற்றும் மஹாலக்ஷ்மி பார்வதி சரஸ்வதி சபை கூடிய காரணம்: வேத பரிபாலனம் சபையோர் மனநிலை: கவலை தோய்ந்த முகம் --கலங்கிய மனது காரணம் பஞ்ச பூதங்கள் தோன்றும் முன்னே தோன்றியது

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- ஸ்வர்ணமால்யா

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- ஸ்வர்ணமால்யா ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கையை வரிகளாக்கினேன் கட்டுரையானது இந்தக்கட்டுரை வாழ்க்கையாகும் பட்சத்தில் மஹாபெரியவாளின் ஆசியும் கிடைத்துவிட்டால் ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கை வரலாறாகும் என்பதில் சந்தேகமென்ன இந்த அற்புதத்தின் நமது நாயகி பெயர் ஸ்வர்ணமால்யா தமிழகத்தில் பண்பாடு மிகுந்த, பாசத்தில் தாயை மிஞ்சும், அடுத்தவர் மனதுக்கும் உணச்சிகள் உண்டு என்று என்னும் அணுகுமுறை, பிடித்து நடக்கும் குழந்தயை கூட தம்பி தங்கை என்று அழைக்கும் நாகரீகம், அடுத்தவர் வாழ தன் மொத்த சொத்தையும் தாரை வார்க்கும் கொடை வள்ளல் கர்ணனின் விசால மனம். இத்தனைக்கும் பெயர் போன மனிதாபிமானத்தை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அழகான அலங்கரிக்கப்பட்ட கிராமம் என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் வகை படுத்த மு

Guru pooja experience of Mrs.Visalakshi-Finland

Guru pooja experience of Mrs.Visalakshi-Finland Mahaperiyava HE is beyond the beyond Mahaperiyava guru pooja Piloting Visalaksahi’s life In Finland- a living example For divine excellence of Mahaperiyava. My name is Visalakshi Ganesh and I am a Chartered Accountant from Mumbai. I have been a very devotional person since childhood and have always had a lot of faith and belief in God. My parents are followers of Mahaperiyava and we are tamil brahmins. God has been very kind to us and we have got his help in every step of our life. I was working for a French bank in Mumbai since past 5 years and my husband was employed with an IT company in Mumbai. My husband got an opportunity to move to Finla

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு பிந்து

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு பிந்து “கோபம் என்பது மற்றவர்கள் தவறுக்கு உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் தண்டனை நொடிப்பொழுது கோபத்தின் விளைவுகள் யுகப்பொழுது தண்டனைகள்” இந்த அற்புதத்தின் நாயகன் அன்று ஒரு சிறுவன்.. பெயர் பிந்து. இன்று ஒரு வளர்ந்த குடும்ப நாயகன்.. இப்பொழுது பிந்துவின் இளமை பருவத்திற்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். நமக்கெல்லாம் பள்ளிப்பருவ நாட்களில் கோடை விடுமுறை என்றால் நம்முடைய தாத்தா வீட்டிற்கோ பாட்டி வீட்டிற்கோ செல்வோம்.. வசதி படைத்தவர்கள் கோடை வாசஸ்தலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் செல்வர். ஆனால் சிறுவன் பிந்துவின் கோடை விடுமுறை சங்கர மடமோ அல்லது மஹாபெரியவா எங்கல்லாம் முகாமில் தங்கியிருக்கிறாரோ அங்கெல்லாம் பிந்துவும் சென்று விடுவான். பிந்துவுக்கும் மஹாபெரியவாளுக்க

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-020 பிள்ளைக்கு ஏற்பட்ட தில்லைக்காதல் பெரும் காதலாக மாறி தில்லையிலிருந்து தில்லை நாயகனே மணி சாஸ்திரிகளை காப்பாற்ற வந்த உண்மைச்சம்பவம் எவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை மாவட்டம். திருக்கோவலூர் தாலுகா T.குளத்தூர் கிராமம்.இந்த ஊரில் மணி சாஸ்திரிகள் மடத்தின் உண்மை பக்தர் பிறந்து வாழ்ந்து வந்தார். இவர் மடத்துக்கும் மஹாபெரியாளுக்கும் தொண்டு செய்வதயே தலையாய கடமையாகக்கொண்டிருந்தார். மஹாபெரியவாளுக்கு இவரிடத்தில் மிகுந்த பாசமும் பரிவும் உண்டு. இவர் மடத்தில் எல்லோருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்தார். இவர் 1983 வருடம் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு நாள் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சென்னையில் அடையாறில் உள்ள

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-சந்தரமதி

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-சந்தரமதி “முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவ நம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை” ***** சந்தரமதியின் இரண்டு பெண்களில் மூத்த பெண்ணை மஹாபெரியவா ஆசிர்வாதத்துடன் திருமணம் முடித்து நல்ல படியாக ஒருவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டாள். பெற்றோர்களுக்கு ஒரு குழந்தை வாழ்க்கையில் கால் ஊன்றியவுடன் அடுத்த குழந்தை பற்றி கவலை... எல்லா கவலைகளுக்கும் விடை கிடைத்தவுடன் பெற்றோர்கள் தங்களின் இறுதி காலத்தைப்பற்றி கவலைப்படுவார்கள். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை வித விதமான கவலைகளை கொண்டது தான் வாழ்க்கை. கவலை இல்லாத வாழ்க்கைப்பருவம் எது தெரியுமா. பிறந்த நாளில் இருந்து ஓரளவு விவரம் தெரியும் பத்து வயது வரை. இதுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பொ