மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-026

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் மஹாபெரியவாளின் போதனைகள் என் வார்த்தைகளில் “நீ வீட்டில் இஸ்லாமியனாயிரு கிறிஸ்துவனாயிரு இந்துவாயிரு ஆனால் வீதியில் மனிதனாயிரு” பரம்பொருள் மஹாபெரியவாளின் அற்புதசாரல்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம்.பலவிதமான அற்புதங்கள் அவற்றில் எதுவுமே அறிவியலுக்கு உட்படாதது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.எந்த அற்புதமும் ஒரு வரையறைக்குள் அடங்காதது. மேலும் மஹாபெரியவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜாதிக்கு அப்பாற்பட்டவர் என்பதை எல்லோரும் அறிவோம். இந்த வார தொடரில் மஹாபெரியவா மதங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் அந்தந்த மதத்தினர் வழிபடும் தெய்வமாகவே காட்சி கொடுத்து எல்லா மதங்களும் வழிபடும் ஒருமித்த தெய்வமும் நானே என்பதை சொல்லாமல்

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I அமிர்தவர்ஷினி

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I அமிர்தவர்ஷினி “விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்” இந்த அற்புதத்தின் நாயகி அமிர்தவர்ஷினி நடுத்தர வயது கொண்ட ஒரு குடும்பத்தலைவி.. குடும்பம் என்றால் என்ன?.. கொடுப்பதில் இன்பம் என்பதுதான் குடும்பம் என்றானது.. கொடுப்பது என்றல் என்ன? கொடுப்பது பணம் மட்டுமா?. நிச்சயமாக இல்லை. பணத்துடன் சேர்த்து அன்பு பாசம் அரவணைப்பு கரிசனம் மற்றவர் துன்பங்களை தன்னுடைய துன்பமாக நினைத்து ஆறுதலான ஒரு சில வார்த்தைகள் அல்லது தன்னால் இயன்ற அளவு பொருளுதவி செய்து வந்த துன்பத்தை போக்குவதற்கு ஒரு கருவியாக செயல் படுவது. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழும் உதாரணமாக இருப்பது இவையனைத்தும் ஒரு நல்ல குடும்பத்தலைவிக்கு இ

உங்கள் கவனத்திற்கு என் பணி சுமையை சுமக்கும் இரு ஆத்மாக்கள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர பெரியவா என் கடன் உன் பணி செய்து கிடப்பதே மற்றவர்கள் துன்பத்தின் வலியை உணர்ந்து பார் உனக்குள் இருக்கும் ஆத்மா உதயமாகும் எண் பணி சுமையின் வலியை உணர்ந்த இரண்டு ஆத்மக்களின் ஆத்மா உதயமானது உதயமான இரு ஆத்மாக்கள் சவிதா முரளிதர் - சௌம்யா என் நெருக்கமான உறவுகளே என் ஆன்மீக பணிகள் துவக்கத்தில் மிகவும் எளிமையாக தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல என் பணி அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு மனிதனின் இரண்டு பக்கங்களும் செயல் படும் பக்ஷத்தில் பணி சுமையை நன்றாகவே சமாளிக்கலாம். ஆனால் உடலின் ஒரு பகுதி செயல் இழந்து ஒரு பகுதி மட்டும் ஓரளவிற்கு செயல் படும் என்றால் ஓரளவிற்கு பணி சுமையை தாங்கலாம்.. என்ன செய்ய?. என் இடது புறம் முற்றிலும் செயல் இழந்து வலதுபுறம் ஓரளவிற்கு மட்டுமே செயல் படுக

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் ஞானம் என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்தளவுக்கு அமைதியாக இருக்கும் அன்று காஞ்சி ஸ்ரீ மடத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மஹாபெரியவாளை தரிசனம் செய்து ஆசிர்வாதம் வாங்க பக்தர்கள் கூடியிருந்த நேரம். எல்லோரும் அவரவர்கள் தோட்டத்தில் விளைந்த காய் கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை மஹாபெரியவா முன் சமர்ப்பித்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். தொடுக்காத மலர்களும் தொடுத்த மலர் மாலைகளும் எங்கும் நிரம்பி வழிய காஞ்சி ஸ்ரீ மடமே ஒரு பசுமையான பழச்சோலையாகவும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சோலையாகவும் காட்சி அளித்தது. இவற்றிற்கு மத்தியில் மஹாபெரியவா சாட்ஷாத் பரமேஸ்வரன் ரூபத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் ஆசிர

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III- விந்தியவாசினி

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-விந்தியவாசினி “அன்பானவர்கள் அழைக்காத போதும் மனசு அவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறது” சென்ற வாரம் அஞ்சனா ஆசிரியை விந்தியவாசினியிடம் கேட்ட கேள்வி "அப்பா சாமிகிட்ட போய்டுவாரா டீச்சர், போன திரும்ப வரவே மாட்டாராம். அப்பாவை போகவேண்டான்னு சொல்லுங்க டீச்சர் என்று சொன்னவுடன் விந்தியவாசினி நெஞ்சு வெடித்து அழுததும் இதைப்பார்த்த அஞ்சனா டீச்சரின் கால்களை கட்டிக்கொண்டு அழுததையும் சென்ற வாரம் பார்த்தோம். ஐந்து வார குரு பூஜை முடிந்து இருவரும் அழுததை பார்த்து நாமும் அழுதோம். வாருங்கள் அதே கலங்கிய கண்களுடன் இந்த வார ஆறாவது குரு பூஜைக்குள் நுழைவோம். ஆறாவது வார குரு பூஜை: வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து பூஜைக்கு தயாராகி விட்டாள் ஆசிரியை விந்தியவாசினி. நான் எவரிடமும் பார

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

பெரியவா நீங்கள் இருக்கையில் எனக்கென்ன கவலை ஒரு பணியை கொடுப்பதற்கு முன்னே அந்த பணிக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துதானே அனுப்புகிறீர்கள் எனக்கென்ன கவலை. எனது இதயத்திற்கு நெருக்கமான உறவுகளே , ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மஹாபெரியவா குரு பூஜையை என்னிடம் கொடுத்து அல்லல் படும் ஆத்மாக்களை கரையேற்றும் பணியை கொடுத்தார். அடுத்து எழுத்துப்பணியை கொடுத்து என் விரல் மூலம் அவரே எழுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த ஆத்மாக்களுக்கு திரும்பவும் நம்பிக்கையை ஊட்டி பயமற்ற வாழ்கையை வாழ வைக்கும் பணியை கொடுத்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த என்னை மஹாபெரியவா கொடுத்த அடுத்த பணி வெளி உலகை பார்க்கவைக்க போகிறது. ஆம

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- விந்தியவாசினி

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II-விந்தியவாசினி உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தில் குழந்தையாய் இரு உலகமே உன்னை நேசிக்கும் விந்தியவாசினியிடம் விடை பெற்றுக்கொண்ட பின் மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது விந்தியவாசினியின் மனக்கலகத்தையும் அதற்கு காரணமான அஞ்சனாவின் தந்தை புற்று நோயால் அவதிப்படுவதையும் பின் வருமாறு மஹாபெரியவாளிடம் என் பிரார்த்தனைகளை சமர்பித்தேன். "பெரியவா விந்தியாவசினியை போல ஒரு ஆத்மாவை இந்த கலியுகத்தில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.தன்னிடம் கல்வி பயிலும் மாணவியின் தந்தை புற்று நோயால் அவதிப்படுவதால் குழந்தை அஞ்சனா சொல்ல முடியாத மனக்கலகத்தில் இருக்கிறாள். இதை அறிந்த ஆசிரியை விந்தியாவசினியும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறாள். இதற்கு ஒரு நல்ல தீர்வு கொ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-024 “மஹாபெரியவா” எனக்கு நேற்று பேசியது நினைவில்லை இன்று பேசியது புரியவில்லை நாளை என்ன பேசுவது தெரியவில்லை ஆனால் என் உயிர் இருக்கும் வரை உங்களிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்போல இருக்கிறது நாம் இதுவரை மஹாபெரியவாளின் ஞான திருஷ்டியை கண்டு அறிந்து அனுபவித்திருக்கிறோம். நாம் அறிந்த கேட்ட படித்த ஞான திருஷ்டிகள் எல்லாமே பெரும்பாலும் மனிதர்களை சார்ந்துதான் இருந்தது. ஆனால் மஹாபெரியவாளின் ஞான திருஷ்டி ஐந்தறிவே படைத்த பறவை இனங்கள் விலங்கு இனங்கள் தாவரங்கள் இவைகளிடமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பதை அறியும் பொழுது நம்முடைய மஹாபெரியவாளின் பக்திப்பார்வை விண்ணையும் தாண்டிச்செல்கிறது.அப்படி தாவரங்களிடம் நிகழ்ந்த அற்புதத்தை இந்த பதிவில் அனுபவிப்போம். மஹாபெரியவாளின் ஸ்ரீகார

குரு பூஜை அற்புதங்கள்-7-பாகம்-I- விந்தியவாசினி

குரு பூஜை அற்புதங்கள்-7-பாகம்-I- விந்தியவாசினி “உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரை சொல்லவை” விந்தியவாசினி ஒரு வாழும் உதாரணம் விந்தியவாசினி குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியை. மஹாபெரியவா எனக்கு தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஆத்மாக்கள் எல்லோருமே ஒரு விதத்தில் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள். விந்தியவாசினி எப்படிப்பட்ட பெண் என்று சொல்கிறேன். கேளுங்கள். ஒரு நல் முத்து எடுக்க கடலில் குதித்து எவ்வளவு ஆழம் செல்லவேண்டும் என்பது நமக்கெல்லாம் தெரியும்.தங்கமும் வைரமும் எடுக்க எவ்வளவு ஆழம் பூமியை தோண்ட வேண்டுமென்பதும் நமக்கெல்லாம் தெரியும். மனிதர்களில் ஒரு நல்ல மனிதரை கண்டு பிடிக்க பல காலம் பழகிய அனுபவம் மிகவும் அவசியம். ஆனால் ஆழத்திற்கு செல்லாமலும