உங்கள் கவனத்திற்கு -குரு பூஜை அற்புதங்கள்

பிடித்ததை விடுவது மட்டும் சன்யாசமல்ல பிடிக்காததை ஏற்றுக்கொள்வதும் சன்யாசம் தான் உங்கள் கவனத்திற்கு -குரு பூஜை அற்புதங்கள் இந்த வார குரு பூஜை குரு பூஜை அற்புதங்களில் சாருகேசியின் அனுபவங்களை நீங்கள் நாளை படிப்பீர்கள்.இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக சற்று நீளமாக இருப்பதாக உங்களுக்கு படும். எப்பொழுதும் எழுதும்பொழுது நான் என்னை உங்கள் இடத்தில் வைத்துக்கொண்டுதான் எழுதுவேன்.எப்பொழுதுமே எழுத்தாளனின் விரலுக்கும் படிப்பவர் கண்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என்று நினைப்பவன். இதன் காரணமாக முடிந்தவரை தேவையான எல்லாவற்றையும் எழுத முயற்சிப்பேன்.அதையும் எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி பதிவுகள் நீண்டு போகாமல் பார்த்துக்கொள்வேன். ஆனால் இந்தப்பதிவு சற்று நீளமாக இருக்கும். பொறுமையுடன் படியுங்கள். என

திவ்ய தேச தரிசனங்கள்-1 ஸ்ரீரங்கம் - 001

சைவமும் நீ வைணவமும் நீ கலியில் உன் அவதாரம் வேத மாதா நலிந்து கொண்டிருந்த வேதத்தை மீண்டும் தழைக்க செய்தாய் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் உன் திசை நோக்கி வணங்குகிறோம் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஓம் நமோ நாராயணா திவ்ய தேச தரிசனங்கள்-1 ஸ்ரீரங்கம் - 001 உங்கள் கவனத்திற்கு : என்னுடைய ஆங்கிலம் தமிழ் மொழி மாற்றியில் அழவார் என்று அடித்தால் சரியான எழுத்துக்களுடன் கூடிய வார்த்தை கிடைக்கவில்லை. ஆகவே எவ்வளவு முயன்றும் அழவார் என்றுதான் வருகிறது. இந்தப்பிழை கவனத்தில் கொள்ளப்பட்டுசரி செய்ய முடியவில்லை. இந்தப்பிழை கவனமின்மையின் வெளிப்பாடு அல்ல. இருப்பினும் நான் இந்தப்பிழைக்கு வருந்துகிறேன். ******** நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீ ரங்கம் முதலாவது திவ்யதேசமாகும். ஸ்ரீ ரங்கத்தின் பெரு

சக்தி பீடம்-மூன்று கன்னியாகுமாரி அம்மன்

சரணாலய பெரியவா வேதமும் நீ வேதத்தின் பொருளும் நீ சக்தியும் நீ சக்தி பீடங்களும் நீ கர்ம பூமி பாரதத்தின் மண்ணில் குடி கொண்டிட்ருக்கும் அத்தனை பெண் தெய்வங்களும் நீ எங்கள் மனதில் நீ வாழுகின்றாய் எங்கள் மனது சலனமற்ற சாகரமாகிறது இதை உணர்ந்து நொடியோ பொழுதும் அனுபவித்து கொண்டிருக்கிறோம் நீ எட்டாக்கனியாக இல்லாமல் எவருக்கும் எட்டும் கனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நின் திருவடி சரணம் சக்தி பீடம்-மூன்றுகன்னியாகுமாரி அம்மன் கன்யாச்ரம் பீடத்தின் பெயர் - கன்யாச்ரமம் அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - முதுகு பீட சக்தியின் நாமம் - ஸர்வாணி «க்ஷத்திரத்தைக் காக்கும் பைரவர்

என் வாழ்வில் மஹாபெரியவா-083

என் வாழ்வில் மஹாபெரியவா-083 குரு பூஜை சரணாலய பெரியவா விண்ணுக்கு நீங்கள் மண்ணுக்கு நாங்கள் எங்களின் ஓலத்திற்கு செவி சாய்த்து மண்ணுக்கு வரும் எங்கள் கருணாசகரா நின் பாதம் சரணம் சரணம் நான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அன்று காலையில் கலந்து பேசி என்னுடைய வேண்டுகோளை ஏற்றார்களா இல்லையா? என்னும் பதிலுக்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். என்னுடைய வேண்டுகோள் எங்கள் குடியிருப்பில் மொட்டை மாடியில் என்னை குரு பூஜைக்காக பார்க்கவரும் மஹாபெரியவாளின் பக்தர்களின் சௌகர்யத்திக்காக ஐநூறு சதுர அடியில் ஒரு கட்டடம் கட்டுவதற்காக மற்றவர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன். எனக்கு அபாரமான நம்பிக்கை.. நிச்சயம் என் வேண்டுகோளை ஏற்று மொட்டை மாடியில் மஹாபெரியவா பக்தர்களுக்காக ஒரு ஹால் கட்ட அனுமதிப்பார

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 பிரச்சனைகள் எடுக்கும் பொழுது மண்டியிடுகிறோம் விஸ்வருபம் எடுத்தால் நம் முன்னே மண்டியிடும் ஸ்வாமி நமக்கு ஒரு வாழும் உதாரணம் டாக்டர் சுப்ரமணியம் ஸ்வாமிக்கு அறிமுகம் தேவையா.? நம் எல்லோருக்குமே தெரியும் அவர் ஒரு பழுத்த அரசியல் வாதி, பாராளுமன்ற உறுப்பினர் மிகச்சிறந்த வழக்குரைஞர் இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைவர். இது ஒரு புறம். இவரது மறுபுறம் இவர் ஒரு மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர் என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் இவர் மஹாபெரியவாளுக்கு ஒரு நெருக்கமான பக்தராக எப்படி மாறினார் என்பது மிகவும் சுவாரசியம்..இவர் அனுபவித்த மஹாபெரியவா அற்புதங்கள் ஏராளம். அவற்றுள் உங்களுக்காக சிலதை உங்களுக்கு விளக்குகிறேன் மஹாபெரியவா என்னும் பக்தி சா

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-034

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-034 உங்களுக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். கடவுளுக்கு உண்டான லக்க்ஷணங்கள் யாவை? என்னை பொறுத்த வரை என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியவரை கடவுள் என்பவர். முக்காலத்தையும் உணரத்தெரிந்தவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். எவருக்கும் நொடிப்பொழுதில் நினைத்ததை நடத்தி முடிப்பவர். இறந்தவரின் உயிரை திரும்ப கொண்டுவந்து இறந்தவரை உயிர்ப்பித்து எழச்செய்வது. சர்வ ரக்க்ஷகன் என்ற பெயர் பெற்றவர். ஒருவருடைய தலைவிதியை நொடிப்பொழுதில் மாற்றி அமைப்பவர். இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். ஈரேழு லோக சக்ரவர்த்தியாக இருப்பவர். இந்த பூமிப்பந்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். இவ்வளவு பரத்துவம் இருந்தும் தன்னுடைய சௌலப்ய (எளிமை) குணத்தால் ஒரு சாத

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி திருமணத்தில் அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே அதுவும் இதுவும் சேர்ந்தகிருந்தால் திருமணத்தில் அமைதிக்கு வாய்ப்பில்லே வானத்தில் பறக்கும் பறவையை விட உங்கள் கைகளில் இருக்கும் சிட்டுக்குருவி பாதுகாப்பானது மேலானது இதை புரிந்து கொண்டால் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறந்து விளங்கும் இந்த குருபூஜை அற்புதங்களில் நம்முடைய நாயகியின் பெயர் சாருகேசி. சாருகேசி என்பது கர்நாடக சங்கீதத்தில் மனதை வருடும் ஒரு ராகம்.. அப்பழுக்கற்ற புனிதமான ராகங்களில் ஒன்று.. புனிதம் என்றாலே அது மற்றவர்களின் இதயக்கதவை தட்டும் தன்மை வாய்ந்தது. சாருகேசியும் கர்நாடக சங்கீதத்தின் ராகம் சாருகேசியை போலவே ஒரு அப்பழுக்கற்ற புனித ஆத்மா. இந்த கற்பனை பெயரும் என்னுடைய பிரும்ம முகூர்த்த பி

என் வாழ்வில் மஹாபெரியவா-082

என் வாழ்வில் மஹாபெரியவா-082 இறை சிந்தனை சக ஆத்மாவின் நலன் நாடும் செயல்கள் சத்வ குணத்தை கொடுக்கும் உணவு இவைகள் உங்களை இறைவனை நோக்கிய ஆத்ம பயணத்திற்கு அழைத்து செல்லும். முயன்று பாருங்கள் மஹாபெரியவா உங்கள் கைகளை பிடிப்பார். ஒருவரின் வாழ்க்கையில் எந்த நொடியிலும் வாழ்க்கையின் பாதை மாறலாம். மாறலாம் என்பது நல்ல பாதையை நோக்கி என்பதை கருத்தில் கொள்ளவும். வாழ்க்கையில் அனுபவப்பட அனுபவப்பட இறைவனின் கண்கள் உங்கள் மேல் விழுந்து விட்டது என்று அர்த்தம். இறைவன். உங்களை ஒரு குருவின் பாதத்தில் கொண்டு சேர்ப்பார். இல்லையேல் இறைவனே ஒரு குருவின் வடிவில் வந்து உங்களை கை பிடித்து அணைத்து கொள்வார். என் வாழ்விலும் இப்படித்தான் நடந்துள்ளது. அந்த பிரபஞ்சமே ஒரு குருவாக மஹாபெரியவா உருவில் வந்து என்னை ஆட்கொண்டு என்னை ச

திவ்ய  தேச மகிமைகள் தொடரின்  சுருக்கம்:

சைவமும் வைணவமும் இந்து மதத்தின் இரு கண்கள் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா அன்றும் இன்றும் என்றும் இரு கண்களாகவே பாவித்து நமக்கும் கற்றுக்கொடுத்தார். திவ்ய தேச மகிமைகள் தொடரின் சுருக்கம்: : வைணவத்தில் நூற்றி எட்டு திவ்ய தேசங்களும் சைவத்தில் இருநூற்று எழுபத்தி நான்கு சிவாலயங்களும் அழவர்களாலும் சைவ சமய நாயன் மார்கhளாலும் மங்களசாசனமும் பாடலும் பெற்ற ஸ்தலங்களாக விளங்குகின்றன. முதலில் அழவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றி எட்டு திவ்ய தேசங்களையும் வரிசை படி பார்க்க உள்ளோம். நூற்றி ஆறு இந்த பூலோகத்திலும் இரண்டு மேல் லோகத்திலும் உள்ளது. இவைகளை வரலாற்று குறிப்புகளோடு உங்களுக்கு சமர்ப்பிக்க என்னால் இயன்ற வரை முயல்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இந்த வரலாற்று உண்மைக

ஜ்வாலாமுகி சக்தி  பீடம்

பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு மஹாபெரியவா ஜ்வாலாமுகி சக்தி பீடம் பீடத்தின் பெயர் - ஜ்வாலாமுகீ அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - நாக்கு பீட சக்தியின் நாமம் - ஸித்திகா «க்ஷத்திரத்தைக் காக்கும் பைரவர் - உன்மத்தர் «க்ஷத்திரம் உள்ள இடம் - பதான்கோட் (பஞ்சாப்) ஜவாலாமுகி தேவி ராஜஸ்தானில் உள்ள பதான் கோட் என்னுமிடத்திலிருந்து ஜோகேந்திர நகர் போகும் பாதையில் ஜ்வலாமுகி என்ற இடத்தில் அமைந்துள்ளது இப்பீடம். அன்னையானவள் ஜ்வாலாமுகி பீடத்தில் ஸித்திதா சக்தியாய் வீற்றிருக்கிறாள். உலகமனைத்தையும் ஈன்றவள். உன்மத்த பைரவரால் காக்கப்படுபவள். தீஜ்வாலை வடிவில் திகழ்பவள். ஆதிசக்தி உயிர்களுக்குள் ஞான ஒளியை ஏற்றுபவள். உயிர்களின் ஆதார சக்தியாக விளங்கும் அன்னைய

"மஹாபெரியவா குரு பூஜை சரணாலயம் இது கோவில் அல்ல சாந்தி நிலையம்"

என் வாழ்வில் மஹாபெரியவா-081 என் இனிய உறவுகளே, இன்று வெளியிடப்பட வேண்டிய “என் வாழ்வில் மஹாபெரியவா – 081” என்னுடைய வேலை பளுவால் இன்று என்னால் எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்க முடியவில்லை. .கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த என் வாழ்வில் மஹாபெரியவா அற்புதம் கடந்த சனிக்கிழமை பதினைந்தாம் தேதிதான் நிறைவடைந்தது. இந்த அற்புதத்தின் பெயர் "மஹாபெரியவா குரு பூஜை சரணாலயம் இது கோவில் அல்ல சாந்தி நிலையம்" இதுவரை என் வாழ்க்கையில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் இந்த அற்புதம் அமைந்துள்ளது. வரும் சனிக்கிழமைக்குள் இந்த பதிவை எழுதி முடித்து உங்களுக்கு சமர்பிக்கிறேன். இதில் உங்களை விட எனக்குத்தான் ஏமாற்றம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்றும் உங்கள் நலன் நாடும

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா

அற்புதத்தின் சுருக்கம்: ஒருவரது உள்ளத்தை புரிந்துகொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையில் பிரச்னைகளுக்கே வழியில்லையே. கணவன் மனைவி உறவுகளின் உறவுகள் நட்புகளின் நட்புகள் எங்கும் ஒரு புரிதலோடு உறவு முறைகள் சீரடைந்து வாழ்க்கையும் சீராக இருக்கும் அல்லவா. அப்படி மற்றவர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடையே யாருக்கும் இல்லையே. ஆனால் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா லக்ஷ்மணன் மாமாவின் உள்ளத்திலிருக்கும் திருமண பிரச்சனைக்கு மாமாவின் உள்ளத்தை படித்து புரிந்து பிரச்சனைக்கு ஒரு தீர்வை நல்கிய அற்புதம் அற்புதம் மட்டுமல்ல. நமக்கும் ஒரு பாடம். என்ன படம் என்பதை புரிந்து கொள்ள இந்த அற்புதத்தை படியுங்கள். ********* லக்ஷ்மணன் மாமாவின் திருமண பிரச்சனை திருவானைக்காவல் கோவிலில் தான் மஹாபெரியவா முன்னிலையில் பே

108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள்

மஹாபெரியவா உன்னை மஹாவிஷ்ணு என்று அழைக்கவா உன்னை ஈஸ்வரன் என்று அழைக்கவா உன்னை காமாட்சி என்று அழைக்கவா எப்படி அழைத்தால் என்ன நீ ஒரு பிரபஞ்சம் பரம்பொருள் நாங்கள் உடலால் வாழ்கிறோம் நீ பிறப்பில் இருந்தே உணர்வாலும் உள்ளத்தாலும் எங்களுக்கு வாழ்ந்து காட்டிய இற்றை அவதாரம் அணைத்து திவ்ய தேசங்களும் நீ 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என் இனிய உறவுகளே இதோ உங்களுக்காக இன்று காலை மஹாபெரியவா எனக்கிட்ட மற்றும் ஒரு கட்டளை.. கட்டளையின் சம்பாஷணை இதோ உங்களுக்காக. பெரியவா: ஏண்டா போன வாரம் சக்தி பீடங்களை பற்றி எழுத சொன்னேன். நீயும் எழுதினே. நானும் பார்த்தேன். நன்னாவே எழுதி இருக்கே. நான் இன்னும் ஒன்னு சொன்ன பண்ணுவியா.? நான்: நிச்சயம் பண்ணறேன் பெரியவா. பெரியவா: நீ இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழ

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-033

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-033 பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் உங்களின் இதயத்துடன் என் எழுத்துக்கள் உரையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் தெரியுமா? நான் உங்களிடம் கொண்டு சேர்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இலக்கண வரையைத்தாண்டி உங்களுக்குள் விதைகளாக விழுகின்றன நான் தூங்கலாம் நீங்களும் தூங்கலாம் ஆனால் விழுந்த விதைகள் தூங்காது நாம் கண் விழித்தபின் கையை பிடித்து கொண்டு மஹாபெரியவா பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை சாகித்ய சிரோன்மணி பாலகிருஷ்ணா ஐயர்.. இவர் தில்லை நடராஜர் எழுந்தருளி இருக்கும் சிதம்பரத்தில் மெய்யப்ப செட்டியார் சமஸ்க்ருத கல்லுரியில் வியாகரணம், தர்க்கம், சாகித்யம், மீமாம்சை எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார். அவர் படித்த வருடம் 1944 முதல் 1949 வரை. ஒரு முறை மஹாபெரியவா சி

குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-III- பர்வதவர்த்தினி

குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-III- பர்வதவர்த்தினி உனக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் பொழுது தாய் தந்தை என்று இரு உயிர்கள் கரைகின்றன எப்பொழுதும் இதை கவனத்தில் கொள்ளவும் பர்வதவர்த்தினியின் குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற பிரார்த்தனையை மஹாபெரியவா இன்னும் ஆசிர்வதிக்காததால் இந்த மூன்றாவது வார அற்புதத்தை குழந்தை பாக்கியம் பிரார்த்தனை ஈடேறிய பிறகு வரும் வாரங்களில் வெளி வரும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவது என் கடமை. ஆகவே இந்தபதிவு. இதன் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பிரார்த்தனைகள் ஈடேறிய பிறகு தான் இந்த குரு பூஜை அற்புதங்களில் எல்லா மஹாபெரியவா அற்புதங்களும் இடம் பெறும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்கிறது. நான் முதலிலேயே சொல்லியிருந்தேன் பர்வதவர்த்தினியின் குழந்தை வரம் இன்னும்

சக்தி பீடம் இரண்டு காஞ்சி காமாட்சி காஞ்சி காமாட்சி கோவில் வரலாறு

சக்தி பீடம் இரண்டு காஞ்சி காமாட்சி காஞ்சி காமாட்சி கோவில் வரலாறு காமாட்சி அவதாரம் மஹாபெரியவா காம என்றல் அன்பு கருணை அட்ச என்றால் கண். காமாட்சி என்றால் அன்பும் கருணையும் கொண்ட கண்களை உடையவள் என்று பொருள். அகிலங்கள் அனைத்தையும் அருளாட்சி செய்யும் நாயகியாக திகழும் காமாட்சி அம்பாள் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ளாள்.தன் அருட்கருணை பொங்கும் கண்களால் தன்னை நாடி வந்து வரம் வேண்டும் பக்தர்களின் துயர் துடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி தருபவள் காஞ்சி கட்சி அம்பாள். அன்னை பராசக்தியின் அருள் நிறைந்து விளங்கும் திருத்தலங்கள் மூன்று: அவைகள் காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாக்ஷி.இந்த மூன்றில் காஞ்சி காமாட்சி அம்மனின் சக்தி பீடம் மிகவும் சக்தி பெற்று விளங்குகிறது.. பாரதத்தில் உள்ள ஐம்பத்தியொரு சக்

என் வாழ்வில் மஹாபெரியவா-080

என் வாழ்வில் மஹாபெரியவா-080 மஹாபெரியவா சத்தியத்தின் உறைவிடம் நீ அன்பின் பிறப்பிடம் நீ பாசத்தின் பாசறை நீ சொல்லின் செல்வன் நீ புனிதமே நீ எளிமையின் எளிமை நீ இறைவனின் மொத்த உருவம் நீ இருந்தாலும் எனக்குள் நீ உனக்குள் நான் மஹாபெரியவா என் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் வரை எல்லோரையும் போல் இந்த உலகத்தில் நானும் ஒருவனாக தான் இருந்தேன். மஹாபெரியவா என்னை ஆட்கொண்ட பிறகு உங்களில் ஒருவனாக மாறி இருக்கிறேன். என் பூர்வீக வாழக்கையில் உலகத்தின் மீது எனக்கு இருந்த பார்வை ஒரு சராசரி மனிதனுக்குண்டான பார்வையாகத்தான் இருந்தது. .மஹாபெரியவா என்னை ஆட்கொண்ட பிறகு உலகத்தின் மீது எனக்கிருந்த பார்வை மாறியது. விளைவு உலகம் என்னை பார்க்கும் பார்வையும் மாறியது. இங்கு நான் அனுபவித்து கொண்டிருக்கும் ஒரு ரகசியத்தை உங்கள

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-023 அறு சுவை அரசு நடராஜன் மாமா

அற்புதத்தின் சுருக்கம்: நாம் எப்படி பிறக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வின் முடிவில் எப்படி ஒரு இடத்தை நமக்கென்று பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். எண்ணங்களில் தூய்மையும் பேச்சில் இறைத்தன்மையும் செயலில் ஒரு புனிதமும் இருந்தால் இறைவன் நம்மை ஒரு மஹானிடத்தில் கொண்டு சேர்ப்பார். அல்லது ஒரு மஹான் நம்மை தேடி வருவார். அறுசுவை மாமாவை மஹாபெரியவாளிடத்தில் இறைவன் கொண்டு சேர்ந்தாரா அல்லது மஹாபெரியவாளே மாமாவை தன்னிடம் அழைத்து கொண்டாரா தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் எண்ணத்தில் ஒரு புனிதம் இருந்தால் நமக்கு இறை சம்பந்தம் ஏற்பட்டுவிடும் என்பது சத்தியமான வார்த்தை. காணொளியை காணுங்கள். வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள் ****** பக்தர்கள் வாழ்வில் மஹாபெரி

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-031

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-031 “நேற்றைய பொழுது நிஜமில்லை நாளைய பொழுது நிச்சயமில்லை இன்று மட்டுமே நிஜம் ஏன் தெரியுமா அது நம் கையில் இருக்கிறது” பாரத பிரதமர்களும் ஜனாதிபதிகளும் காஞ்சி ஸ்ரீ மடம் வந்து மஹாபெரியவளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கமாக இருந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதில் மத்திய அமைச்சர்களும் மாநில முதலமைச்சர்களும் மற்ற அமைச்சர்களும் அடக்கம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடவுள் அன்று அவர்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மஹாபெரியவா தரிசனம் சாத்தியம். இந்தியாவின் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி ஒரு முறை வந்து நாள் முழுவதும் காத்திருந்து தரிசனம் கிடைக்காமல் திரும்பிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஏமாற்றம் யாருக்கும் கோபமாக மாறவே மாற

குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-II- பர்வதவர்த்தினி

குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-II- பர்வதவர்த்தினி கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் தண்ணிழல் பார்த்து தானே குறைக்கும் இந்தப்பதிவு எழுதும் வரை பர்வதவர்த்தினி கருவுற்ற செய்தி எனக்கு கிடைக்கவில்லை. ஊர்ஜிதமாகாத எந்த தகவலும் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களில் இடம் பெறாது என்பதால் சிறிது காத்திருக்கலாம் என்று நினைத்து பர்வதவர்தினியின் கணவருடைய வேலைக்கான பிரார்த்தனையை பார்ப்போம். பர்வதவர்த்தினி என்னிடம் கொடுத்த பிரார்த்தனைகள் பட்டியலில் இந்த கணவர் வேலை விஷயமும் ஒன்று. நானும் பர்வதவர்தினியிடம் குரு பூஜை மகிமைகள் பற்றி சொல்லி நம்பிக்கையுடன் பூஜை செய்யுமாறு சொன்னேன்.அவளுடைய சார்பில் நானும் மஹாபெரியவாளிடம் பின் வருமாறு பிரார்த்தனையை சாம்ப்பித்தேன். "பெரியவா பர்வதவர்த்தினியின் கணவருக்கு அவருடைய படிப்