பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027 Dr.பத்மா  சுப்ரமணியம்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027 Dr.பத்மா சுப்ரமணியம் “மஹாபெரியவா” என் இதயம் எத்தனை முறை கலங்கினாலும் உங்கள் நினைவை என் இதயத்தில் இருந்து அகற்ற முடியாது ஏன் தெரியுமா என் இதயத்திற்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும் இந்த பக்தையை பற்றி ஒரு சிறிய அறிமுகம்: பத்மா சுப்ரமணியம் டாக்டர் பட்டம் பெற்றது நாட்டியத்தில். நாட்டியம் என்பது இவரது ஒரு முகம். இவர் ஒரு பன்முக விற்பன்னர். நாட்டியத்தை தவிர இவருடைய மற்ற முகங்கள் உங்களுக்காக இதோ:: நாட்டியத்தில் ஆராய்ச்சி நாட்டிய அமைப்பாளர் பாடல் ஆசிரியர் இசை அமைப்பாளர் எழுத்தாளர் நல்ல ஆசிரியர் சிந்தனையாளர் இவனுடைய தாயார் திருமதி மீனாட்சி தந்தை கே.சுப்ரமணியம். தந்தை சர்வதேச அளவில் ஒரு இடத்தை பிடித்த திரைத்துறை இயக்குனர், சுதந்திர போராட்ட வீரர், இந்திய கல

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-037

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-037 பிரதி செவ்வாய் கிழமை தோறும் மதம் கடந்த மஹாபெரியவா பாரதியின் அன்றைய பாடல் வரிகள் ஜாதிகள் இல்லையடி பாப்பா மஹாபெரியவாளின் இன்றைய அனுபவ வரிகள் மதங்களே இல்லையடா மனுடர்களே மதங்களை காட்டிலும் மாந்தர்கள் மேன்மையானவர்கள் மஹாபெரியவாளின் அற்புதங்களையும் மிக எளிமையான மனித குணங்களையும் இறைவனுக்கே உண்டான பரத்துவ குணங்களையும் நாமெல்லாம் நன்கு அறிவோம். பக்தர்களுக்குள்ளே ஒரு அபிப்பிராயமும் உண்டு. மஹாபெரியவா குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே அருள் பலிப்பார் என்று. ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் பொய்க்குமாறு பல நிகழ்வுகளின் மூலம் உலகத்திற்கு தன்னை ஒரு ஜகத் ரக்ஷகன் என்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் குரு என்றும் தன்னை நிலைநாட்டிக்கொண்ட சம்பவங்கள் ஏராளம். இன்று நாம் காணப்போவத

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி”

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி” பிரதி திங்கள் தோறும் கொடிது கொடிது வாழ்க்கையில் வறுமை அதனினும் கொடிது இளமையில் வறுமை வறுமைக்கே வறுமையை கொடுத்த மஹாபெரியவா அற்புதமே நமக்கு விஸ்வரூப தரிசனம் எல்லோருக்குமே வாழ்க்கை என்றால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. முப்பது வருடம் வாழ்ந்தர்வர்களும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவர்களும் இல்லை.இது தான் நாம் கண்ட வாழ்க்கை. கெட்ட நேரத்தில் கோவிலுக்கு செல்வதும் நல்ல நேரத்தில் லௌகீக உலக விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதும் யாருக்குமே வழக்கமான ஒன்றுதான். ஆனால் தமிழகத்தின் எல்லையில் ஒரு குடும்பம் அன்றிலிருந்து இன்று வரை கோவில் ஒன்றே கதி என்று இருக்கிறார்கள்.நமக்கு தெரிந்த வாழ்க்கை, ஏற்ற தாழ்வுகள்

என் வாழ்வில் மஹாபெரியவா-084 சரணாலயம் பிறந்த கதை.

என் வாழ்வில் மஹாபெரியவா-084 சரணாலயம் பிறந்த கதை. மஹாபெரியவா என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் நம்முடைய சம்பாஷணைகள் நிசப்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் அற்புத நிகழ்வுகள் சமயத்தில் என்னுடைய இதயம் கூட இடம் மாறித்துடிக்கும் சரணாலயம் பிறந்த ;பொழுது என் இதயம் இடம் மாறித்துடித்தது. சரணாலயம் பூர்ண கும்பம் சென்ற பதிவில் நான் மஹாபெரியவாளிடம் கதறி அழுததை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள்..சென்ற வாரத்தின் சுருக்கம் முதல் முறை வாசிப்பவசர்களுக்கு. . நான் என்னுடைய இல்லத்தில் குரு பூஜை வேண்டி தங்களுடைய பிரச்சனைகளை எடுத்து சொல்லி அவைகளை நான் மஹாபெரியவா பாதங்களில் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்குவது வழக்கம். வழக்கமாகவே கூட்டம் சமாளிக்கும் அளவிற்கு தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எ

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026 தியாகு தாத்தா

சரணாலய பெரியவா பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026 தியாகு தாத்தா வெற்றி என்பது எவ்வளவு முறை விழுந்தாலும் எழுந்து நிற்கிறீர்களா அதுதான் வாழ்க்கைக்கே வெற்றிவாழ்க்கைக்கே வெற்றி தாத்தாவை பற்றி ஒரு சிலவரிகள்: குடும்பத்தில் தியாகு தாத்தா தான் முதல் தலை முறை மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு. இந்தப்பதிவு முழுவதும் நாம் இனிமேல் தியாகு தாத்தாவை தாத்தா என்றே அழைப்போம். இன்றைய நாளில் தியாகு தாத்தாவிற்கு என்பதுக்கு மேல் இருக்கும். தன்னுடைய பதினைந்தாவது வயதில் தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் முடிகொண்டான் என்னும் கிராமத்தில் தன்னுடைய தாயருடன் வசித்து வந்தார். அப்பொழுது ஒரு நாள் அங்குள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக மஹாபெரியவா வந்துகொண்டிருந்தார். மஹாபெரியவாளுக்கு தியாகுவை

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-036

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-036 இன்றைய திருமணங்கள் இருவர் அருகில் இருந்தாலும் இதயங்கள் தூரத்தில் இருக்கின்றன மஹாபெரியவாளின் இறை அற்புதங்களை நாம் ஒவ்வொரு வாரமும் அனுபவித்து வருகிறோம். மஹாபெரியவாளின் இறை சக்தி மட்டுமா அற்புதம். மஹாபெரியவாளின் எண்ணங்களும் செயல்களும் இன்னும் அற்புதம். நாமெல்லாம் கடவுளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் கடவுளையும் தாண்டி இப்படியொரு கருணையா?. நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அப்படியொரு நிகழ்ச்சி தான் இந்த வாரத்தின் அற்புதம். மக்களிடத்தில் பொதுவாவே ஒரு எண்ணம் இருக்கிறது.. என்ன தெரியுமா அது?. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட ப்ராமண ஜாதியினருக்கு மட்டுமே குரு. அவர்களுக்கு மட்டுமே அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ணுவார் என்ற எண்ணம் தான் அது. நீங்கள் ஒரு முக்கியமா

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-III- சாருகேசி

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-III- சாருகேசி பிரதி திங்கள் தோறும் விளையாட பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட தன்னோடு விளையாடும் அப்பாவைதான் குழந்தைகளுக்கு பிடிக்கும் மஹாபெரியவா பக்தர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற வாரம் கணவரின் அன்புக்காகவே ஏங்கி மஹாபெரியவா குரு பூஜை செய்து கணவன் மனைவி இருவருமே ஆத்மார்த்தமான அன்பை பரஸ்பரம் தரிசனம் செய்து சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம். சென்ற வார பதிவுகளுக்கு பிறகு ஏராளமான வாசகர்கள் தொலை பேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை சாருகேசிக்கு தெரிவித்தார்கள். குரு பூஜை செய்யும் முறை பற்றியும் என்னிடம் கேட்டார்கள். நானும் அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தேன். நான் இந

உங்கள் .G.R மாமா மீண்டும் உங்களிடம்

சரணாலயம் பெரியவா என் சொந்தங்களே, உங்கள் .G.R மாமா மீண்டும் உங்களிடம்.. என் உடல் நிலை காரணமாக சில நாட்கள் நம் சந்திப்பு தடைப்பட்டிருந்தது.. இந்த இடைவெளி எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. இத்தனை நாளும் உங்கள் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன், இந்த சில நாட்கள் இடைவெளியில் நீங்கள் அனைவரும் இந்த G.R.மாமாவின் உடல் நலத்திற்கு பிரார்த்தனை செய்தீர்கள். எப்படி உங்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறியாதோ அதுபோல நீங்கள் எனக்காக செய்த பிரார்த்தனைகளும் நிறைவேறியது.. ஆம் நான் பூரண குணமடைந்து விட்டேன். .மீண்டும் என் பதிவுகளை வரும் திங்கள் கிழமையில் இருந்து நீங்கள் அனைவரும் வாசிக்கலாம்.. இந்த சிறு பிரிவு நமக்கிடையே இருக்கும் பாசத்தையும் பந்தத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ள

என் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும் என் சிட்டு குருவிகளே

என் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும் என் சிட்டு குருவிகளே குரு பூஜை சரணாலயம் இது கோவில் அல்ல சாந்தி நிலையம் நான் பேச நினைப்பதை எல்லாம் நான் பேசிவிட்டேன் இது நீங்கள் பேசி நான் கேட்க வேண்டிய தருணம் இன்று நாம் பேசும் இதமான வார்த்தைகள் நாளை உறவுக்கு இலக்கணம் படிக்கும் இதய காவியமாக பேசப்படும் உங்கள் G.R. மாமா கடந்த திங்கட்கிழமையன்று .(1/7/19) குரு பூஜை )குரு பூஜை சரணாலயத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் கால் இடறி கீழே விழுந்து விட்டேன். நெஞ்சு பகுதியில் விலா எலும்பில் அடி பட்டு சிகிச்சையில் இருக்கிறேன். என்னுடைய உடல் ஊனத்தையும் தாண்டி உங்களுக்காக உழைப்பதில் நான் என்றுமே சோம்பேறித்தனமாக இருந்ததில்லை.. எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது மஹாபெரியவாளின் சித்தம் போலும். இப்பொழு

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-கணபதி மாமா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-025 Every Wednesday கணபதி மாமா பிறக்கும் பொழுது நாம் அனைவருமே நல்ல குழந்தைகள்தானே குழந்தை என்ற பருவம் மாறலாம் “நல்ல” என்ற குணங்கள் ஏன் மாறவேண்டும் இறுதிவரை நல்லவர்களாகவே இருக்கமுடியதா முயன்றால் முடியமே கணபதி மாமாவை பற்றி ஒரு சில வார்த்தைகள்: மாமா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள T..குளத்தூர் என்னும் சிற்றூரை சேர்ந்தவர். மாமாவின் தந்தைக்கு மஹாபெரியவாளிடமும் ஸ்ரீ மடத்துடனும் நெடு நாளைய தொடர்பு உண்டு. இருந்தாலும் மாமா தன்னுடைய பதினான்காவது வயதில் தான் மஹாபெரியவாளிடம் வந்தார். மாமா ஒரு முறை மஹாபெரியவாளை தரிசனம் செய்ய போட் மெயில் என்னும் ரயில் ஏறி திருவிடைமருதூர் வந்தார். ஏனென்றால் திருவிடைமருதூர் அருகில் உள்ள வசந்த கிருஷ்ணா புரத்தில்தான் மஹாபெரியவா முகமிட்டிருந்தார்.

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-035

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-035 கண்ணுக்கு தெரியாத பக்தியும் மனதுக்கு புரியாத அனுகிரஹமும் நம்முடைய மஹாபெரியவா உறவும் என்றுமே அழகுதானே அப்பொழுது மலர்ந்த தாமரை போல அன்றைய தினம் காஞ்சி மடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம் அன்று ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை.சாட்ஷாத் பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா நடு நாயகமாக வீற்றிருக்க வித விதமான பழங்களும் பூக்களும் பெரிய மூங்கில் தட்டுகளில் குவிக்கப்பட்டிருந்தன. தொடுத்து கட்டிய பூக்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அன்று பெண்கள் அஹிம்சா பட்டுபுடவைகளை கட்டிக்கொண்டு கண்ணாடி வளையல்களை இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டு வளைய வந்தது. சங்கரமடமே மங்களகரமாக இருந்தது. குறிப்பு: அஹிம்சா பட்டு என்றால் என்ன? பட்டுப்பூ

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-II- சாருகேசி

பிரதி திங்கள் தோறும் இருவர் அருகில் இருந்தாலும் இதயங்கள் தூரத்தில் இருக்கின்றன இதுதான் கலிகால இல்லறமா? இந்தப்பதிவு சற்று நீண்டு இருக்கும்.இதன் காரணத்தை நேற்றைய ஒரு சிறு பதிவு "உங்கள் கவனத்திற்கு" என்ற தலைப்பில் விளக்கியிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் அதை பார்த்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். பார்க்காதவர்கள் நேற்றைய பதிவை படித்து விட்டு இந்தப்பதிவை படியுங்கள். சாருகேசியின் முதல் பிரார்த்தனை தன்னுடைய கணவர் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான். திருமணம் ஆன புதிதில் எல்லா பெண்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். முதலாவது எந்தப்பெண்ணும் ஒரு ஆணும் திருமணத்திற்கு முன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்துவிட்டுதான் திருமண மேடையில் வந்து அமர்வார்கள். ஓராயிரம் கனவுகள். இன்னும் சில நிமிட