• காயத்ரி ராஜகோபால்

அறிமுகம் லட்சுமி என்னும் லட்சுமி வராகன்


ஈரேழு புவனத்தின் சக்கரவர்த்தி மஹாபெரியவா ​

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் எனக்கு மஹாபெரியவா அதிஷ்டானத்தில் இருந்து எனக்கு பிரசாதம் அனுப்பிய லட்சுமி என்னும் பக்தரின் அறிமுகத்தை அவருடைய சம்மதத்துடன் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அறிவித்திருந்தேன். இதோ உங்களுக்கு அந்த லக்ஷ்மியின் அறிமுகம்.. லட்சுமி என்னும் லட்சுமி வராகன் ஐரோப்பிய நாடுகளில் அழகான ஒரு நகரத்தில் குடி உரிமை பெற்று பல ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பக்தர்..

மஹாபெரியவா பக்தர் லட்சுமி என்னும் லட்சுமி வராகன் சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் அழகான ஒரு நகரத்தில் குடி உரிமை பெற்று பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு பெண் பிள்ளை. ஒரு ஆண் பிள்ளை. பெண் மருத்துவ படிப்பை முடித்து விட்டு புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார். இவருடைய மகன் அந்த நாட்டிலேயே ஒரு பள்ளியில் படித்து கொண்டிருக்கிறார்.

நமக்கு எந்த ஒரு மனிதரை பார்த்தவுடனே நமக்கு அவருடைய படிப்பு நம் கண் முன்னே நிற்கும். இல்லை அவருடைய சமூக அந்தஸ்து நினைவிற்கு வரும். இதுபோல் இன்னும் எத்தனையோ விவரங்கள் நம் மனக்கண் முன்னே நிற்கும்.

ஆனால் லட்சுமி வராகன் பொறுத்தவரை இவர் ஒரு நல்ல ஆத்மா என்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். எனக்கு அப்படித்தான் மனக்கண்ணில் தோன்றியது. என்னை பொறுத்தவரை பக்தியின் உச்சம் எது தெரியுமா.

மஹாபெரியவா என்னும் அந்த அற்புத வார்த்தையை கேட்டவுடன் யாருக்கு கண்கள் கலங்குகிறதோ அதுதான் பக்தியின் உச்சம்..இவருடைய .கண்கள் கலங்குவதை நானே பல முறை கண்டிருக்கிறேன்.

இவருக்கு அடிக்கடி வரும் சொப்பனம் எது தெரியுமா. கடவுளும் பழைய கோவில்களும். இவர் அந்த கோவில்களுக்கு செல்வது போல கனவு வரும்.

இவர் வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வரும்பொழுது கனவில் கண்ட கோவில்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் இவரை அந்த கோவில்களுக்கு அழைத்து போவார். கனவில் வருவது நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது என்றால் அது கனவில்லையே. எதோ ஒரு இறை காரணத்திற்காக இவரை இறைவன் வழி நடத்துகிறான் என்றுதானே அர்த்தமாகிறது.

வெளி நாட்டில் வாழ்ந்தாலும் இந்தியா வரும் பொழுதெல்லாம் மஹாபெரியவா நமக்கு சொல்லிக்கொடுத்து விட்டு போன வேத ஸம்ரக்ஷிணம்., பசு பாதுகாப்பு, கோவில் புணரைப்பு போன்றவற்றை சிரமேற்கொண்டு செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆத்மாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் உண்மையிலேயே ஆத்மா சந்தோஷத்தை அடைகிறேன். இவர் தன்னுடைய பதிவுகளை "லட்சுமி " என்ற பெயரில் எழுதி வருகிறார்.

உங்கள் சார்பிலும் என் சார்பிலும் நான் மஹாபெரியவாளை இவர் குடும்பத்திற்கு சகல ஐஸ்வரங்களையும் மன நிம்மதியையும் கொண்ட ஒரு நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்க்கையும் அமைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்