• mahaperiyava

இந்து மதம் ஒரு வாழும் முறை-010


ஆத்ம அழகு

இறைவனின் படைப்பில் மிகஅற்புதமான படைப்பு மனிதபிறவி. மனிதனுக்கு மட்டும் தான் சிந்தித்து செயல் பட முடியும். மேலும் பிறப்பின் நோக்கமும் குறிக்கோளும் நன்கு அறிந்தவன்.

இந்த உன்னத மனித படைப்பில் மற்றுமொரு அற்புதம் அக அழகு புற அழகு என்று இரண்டு அழகை ஒவ்வொரு மனிதனுக்கும் வைத்தான் இறைவன். அக அழகு நம்முடைய ஆத்மாவிற்கு தொடர்பு உடையது. புற அழகு என்பது கண்ணுக்கு தெரியும் உடலுடன் சம்பந்தப்பட்டது.

புற அழகு பூத உடலுக்கு தொடர்பு உடையது. அக அழகு கண்ணுக்கு தெரியாது புறஅழகு கண்ணுக்கு நன்றாக தெரியும். அக அழகுக்கு சூஷ்ம உடல் என்று பெயர். கண்ணுக்கு தெரியும் உடலுக்கு ஸ்தூல உடல் என்று பெயர்.இதை ஒரு அட்டவணை மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.


சூஷ்ம உடல் நம்முடைய ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும். ஸ்தூல உடல் நம்முடைய லௌகீக வாழ்க்கைக்கு வழிகாட்டும். இன்னும் எத்தனையோ விவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். .நீங்கள்செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஸ்தூல அழகுக்கு கொடுக்கும்முக்கியத்துவத்தில் ஒரு சிறிய சதவீதம் ஆத்ம அழகுக்கு கொடுங்கள். உங்களுக்குபுரிந்து விடும் ஆத்ம அழகு எவ்வளவு அழகானது என்று. ஆத்ம அழகு இன்னும் தொடரும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்