• சாணு புத்திரன்

மஹாபெரியவா குரு புகழ்


சாணு புத்திரன் அவர்களின் முதல் பதிவு

நான் அருணகிரி நாதரின் திருப்புகழை கேட்டிருக்கிறேன். அவர் தாடி ஜடா முடியுடன் கூடிய தோற்றம். அவருடைய மொழி ஆளுமை எல்லோரையும் அசரவைக்கும் வகையில் வார்த்தைகளும் வாக்கியங்களும் இருக்கும். ஒரு திருப்புகழை படிக்கும் பொழுதே பக்தியையும் பரதத்தின் ஜதியையும் நாம் அனுபவிக்கலாம்.

சாணு புத்திரன் இருபதாம் நூற்றாண்டின் அருணகிரி நாதர் என்று சொன்னால் அது மிகையல்ல. இவரின் சொற்களின் கட்டமைப்பை கேட்டால் குன்றலிருக்கும் குமரனே நன்று நன்று என்று இறங்கி வந்து ஆசி வழங்குவான்.

உங்கள் சார்பிலும் என் தனிப்பட்ட சார்பிலும் வருக வருக என்று வரவேற்கும் அதே வேலையில் சாணு புத்திரன் அவர்களின் எழுத்து பணி இந்த இணைய தளத்திலும் தொடர வேண்டும் என்று உங்கள் சார்பிலும் என் சார்பிலும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

வேண்டும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


45 views