• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-033

பிரதி புதன் கிழமை தோறும்

N.L..ராஜா –வழக்குரைஞர்

மஹாபெரியவா தரிசனம்

இன்றும் சாத்தியமே

இந்த அற்புதத்தை படியுங்கள்

மஹாபெரியவா தரிசனம் காணுங்கள்

மஹாபெரியவா சிறு வயதில் கல்வி கற்ற மகேந்திர மங்களம் காவிரி ஆற்றங்கரை

மஹாபெரியவா அற்புதங்களை பல கோணங்களில் பல்வேறு காலகட்டங்களில் நடந்தவற்றை அனுபவித்து வருகிறோம். இதோ மேலும் இன்னுமொரு அற்புதம் உங்களுக்காக..

இந்த அற்புதத்தை அனுபவித்த பக்தர் ஒரு வழக்குரைஞர். இவரது பெயர் N.L. .ராஜா. இவருடைய தாத்தா காலத்திலிருந்தே காஞ்சி ஸ்ரீ மடத்திற்கும் மஹாபெரியவாளிடத்தில் பக்தர் என்ற முறையில் நல்ல ஈடுபடும் தொடர்பும் இருந்தது.

இவருடைய சொந்த ஊர் மஹாபெரியவா இளமையில் கல்வி பயின்ற இடமான மகேந்திர மங்களம் என்னும் ஒரு சிறிய கிராமம்... இந்த கிராமம் காவேரி கரையின் மேல் அழகான தோப்புகளுடன் கூடிய சோழ நாட்டில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்..

இந்த பக்தரின் முன்னோர்கள் இந்த மஹேந்திர மங்களம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் குமரமங்கலத்தை சொந்த ஊரக கொண்டவர்கள்.. ஒரு சமயம் மஹாபெரியவா குமரமங்கலத்திற்கு வந்தார்.

அப்பொழுது நித்ய அனுஷ்டானத்திற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தை காண்பித்து அங்கே சில முருகர் விக்கிரஹங்களும் பெருமாள் விக்கிரஹங்களும் இருக்கிறது.. அந்த நிலத்தை தோன்றுமாறு கட்டளையிட்டார். நிலமும் தோண்டப்பட்டது. மஹாபெரியவா சொன்ன படியே முருகர் விக்கிரஹங்களும் பெருமாள் விக்கிரஹங்களும் கிடைத்தது.

அந்த விக்கிரஹங்கள் சோழர் மன்னர்கள் காலத்திய விக்கிரஹங்கள்.. அங்கேயே மஹாபெரியவா உத்தரவிட்டார் இங்கு இந்த முருகர் விகிரஹத்தை வைத்து ஒரு கோவில் கட்டி கும்பாபிஷகம் பண்ணுமாறும் அதுவரை தான் அந்த கிராமத்திலேயே தங்கப்போவதாகவும் சொன்னார்..

முருகர் கோவிலும் கட்டிமுடிக்கப்பட்டது

கும்பாபிஷகமும் நடந்து முடிந்தது

இந்த சமயத்தில் ராஜா குடும்பத்தினர் மஹாபெரியவாளிடம் கேட்டனர். "பெரியவா உங்களுக்கு ஏதாவது எங்கள் சார்பில் செய்யணும் என்று நினைக்கிறோம்.நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் பெரியவா என்று கேட்டுக்கொண்டனர்.

மஹாபெரியவா சொன்னார் "நான் ஒரு சன்யாசி. எனக்கு என்ன வேணும். இருந்தாலும் நீங்கள் ஒன்னு செய்யுங்கோ என் மேலே இருக்கிற பாசத்தாலும் நம்பிக்கையினாலும் ஒவ்வொரு ஆத்துலேயும் ஐந்து வயது ஆறு வயது குழந்தைகளை வேதம் படிக்க அனுப்பறா. அந்த குழந்தைகள் எல்லாம் வேத பாடசாலையில் இருந்து அவா அதுக்கு கூட போகாம வேதம் படிக்கறா.

அந்த குழந்தைகளுக்கு எல்லாம் பண்டிகைக்கு ஆத்துலயே பக்க்ஷ்ணம் பண்ணி நேரா ஒவ்வொரு வேத பாடசாலைக்கும் போய் இந்த பக்ஷணங்களை விநியோகம் பண்ணுங்கோ.

என் சந்தோஷத்திற்கு எதாவது பண்ணனும்னு நினைக்கிறேள். இதை பண்ணுங்கோ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று சொன்னாராம். அதற்கு ராஜாவின் தாத்தா பாட்டி எல்லோரும் அந்த காலத்திலே இருந்து வேத பாடசாலை குழந்தைகளுக்கு ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பக்ஷணங்களை விநியோகிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இன்றும் வழக்குரைஞர் ராஜாவும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த வருடமும் வழக்குரைஞர் ராஜா அவர்கள் வீட்டிலேயே பக்ஷணங்கள் செய்து கொண்டு தன்னுடைய காரில் ஓட்டுனருடன் காஞ்சிபுரம் வந்தார். அப்பொழுது தன்னுடைய காரை சற்று தள்ளி நிறுத்தி விட்டு மடத்திற்குள் சென்றார்.

மஹாபெரியவா தரிசனம்:

ஓட்டுநர் கார்த்திக் மட்டும் காரை பூட்டி விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார். வழக்குரைஞர் ராஜா வரும் நேரமாகி விட்டதால் காருக்கு அருகில் சென்று நின்று கொள்ளலாம் என்று நினைத்து காரை நோக்கி நடக்கலானார்.

அப்பொழுதான் காருக்குள் யாரோ ஒரு வயதானவர் அமர்ந்திருப்பதை பார்த்தார். ஓட்டுநர் கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. பூட்டிய காருக்குள் எப்படி ஒருவர் சென்று அமர முடியும் என்று நினைத்தார். இவர் காருக்கு அருகில் செல்ல செல்ல தான் இவருக்கு புரிந்தது உள்ளே அமர்ந்திருப்பது நம்முடைய மஹாபெரியவா என்று. உடனே இவருக்குள் ஒரு பொறி தட்ட தன்னுடைய செல் போனை எடுத்து அதில் உள்ள கேமராவில் மஹாபெரியவாளை போட்டோ எடுத்து விட்டார்.

நம்முடைய காஞ்சி மடத்தில் இருக்கும். இரண்டு பெரியவாளும் அந்த செல் போனில் இருக்கும் படத்தை பார்த்து விட்டு எல்லோரையும் அழைத்து நம்முடைய மஹாபெரியவாளை பாருங்கோ என்று காண்பித்தர்களாம்

உங்களுக்கு எல்லாம் இப்பொழுது புரிகிறதா. நான் எப்பவுமே எழுதுவேன் மஹாபெரியவா சித்தியாகி விட்டாலும் இன்றும் நம்மிடையே சூஷ்மமாக வாழ்ந்து கொண்டு நமக்கெல்லாம் இன்றும் ஆசி வழங்கி கொண்டிருக்கிறார் என்று. அது உண்மையென இந்த அற்புதம் உறுதிப்படுத்திகிறது.

இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் மஹாபெரியவா இந்தநொடி கூட நம்முடன் இருக்கிறார். நீங்களும் இந்தஅற்புதத்தை பாருங்கள். நீங்களும் காருக்குள் அமர்ந்திருக்கும் மஹாபெரியவாளை பார்த்து தரிசிக்கலாம்.

மஹாபெரியவா வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்து ஒரு முறை கூட தரிசனம் காணவில்லையே என்ற ஏக்கம் இனியும் வேண்டாம். மஹாபெரியவாளை மனம் உருக த்யானம் செய்யுங்கள்.

நிச்சயம் உங்கள் அருகில் வந்து அமர்ந்து ஒரு பாசமுள்ள தாய் போல தடவிக்கொடுத்து நான் இருக்கிறேன் என்று சொல்வார். ஒவ்வொருவரும் இந்த தாய் பாசத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.இன்னும் என்ன தயக்கம்.மஹாபெரியவாளை தியானித்து அழையுங்கள். அடுத்த வினாடி உங்கள் அருகில் இருப்பார்.

பணக்கஷ்டம் மனக்கஷ்டம்

உடல் கஷ்டம் எல்லாவற்றிற்கும்

மஹாபெரியவாளை தியானித்து அழையுங்கள்

அடுத்த வினாடி உங்கள் அருகில்

மஹாபெரியவா

காலம் தாழ்த்தாமல் காணொளியை கண்டு களியுங்கள்

https://www.youtube.com/watch?v=VfwbZWyeMoE

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்