• சாணு புத்திரன்

குரு ஸ்துதி


பெரியவா சரணம். எண் என்றாய்... எழுத்தென்றேன்... எழுதென்றாய்... என்னிலே நீ நிறைந்தாய்! எதுகையும் மோனையும் கூட எடுபடாத எந்தன் எழுத்தினிலே நிறைவதும் நீயானாய்! ஏங்கினேன்... எதற்கென்றாய்... தேடினேன்.... எங்கிலும் நீயாக தெரிகின்றாய்... எதனிலும் நீயே வியாபித்திருக்க வேண்டி எழுதியே ஸ்மரிக்கின்றேன்! வேத வேந்தா! வேதியர் தொழும் ஈசா! வேங்குழலின் ஓசை நயம் கூட ஒரு நேரம் ஓய்ந்திடலாம்... என்னிலே விஸ்தரிக்கும் நின் பிம்பங்க்ளே ப்ரஞ்சமாய் என்றுமே நிலைத்திருக்க வரம் ஒன்று மட்டும் நிறையவே தந்தருள்வாய் ஸ்ரீசுவாமிநாதா! முழுமுதல் மூலமாய் மூலந்தனில் தோன்றியவா! முகாரி தென்படா முத்தமிழை என்றைக்கும் என்னிலே இருக்கத் தா! மூலை முடுக்கெல்லாம் நின் ஸ்மரணைகள் இருக்கத் தா! காலையும் மாலையும் கூடவே இரவு எனும் கோலங்கள் மாண்டு தினம் கோமளமாய் பிறப்பதுவே! கோபால ராகவனே கோமகளே குலமகளே குலங்காத்து மனிதமிதை தர்மமொடு வாழத் தா! எண்ணிலே பிறக்கின்ற எந்தவொரு சிந்தையிலும் ஏகமாய் தர்மம் அதை நிச்சயமாய் இருக்கத் தா! வேண்டியதும் யாமறியோம்... வேண்டாடதை களைத்து வேண்டுவன சிறக்கத் தா! வேதமறை விளங்கட்டும்! வேதியர்கள் வாழட்டும்! வேண்டாத மனிதருந்தான் வேய் விலகி வாழட்டும்! விழிப் பார்வை சிறக்கட்டும்! சிந்தையுந்தான் தூயட்டும்! சித்தமதின் நிறைவாய் நின் சந்ததமும் விளங்கட்டும்! இன்னும் பல கேட்க உண்டாம் அவற்றையெல்லாம் தந்தருளே! மனமார த்யானித்தே மண்டியிட்டு வணங்கிறோம்! மாஹேசா! மருந்தீசா! மருண்டதெல்லாம் ஓடிடட்டும்! காஞ்சீ பதீ! காலகண்டா! காப்பாற்றுவாய் கருணாகரா! எங்கள் தத்தித் தாவும் மனத்தினூடே சித்தம் தெளிவிக்க வேண்டி நந்தி வாகனத்திலே வந்தமர்ந்த வாகீசா! வரமருள்வாய் வேதநாயகா! வேண்டிப் பணிகின்றோம் வேதத்தேவன் நின் சரணத்திலே! பெரியவா சரணம் பெரியவா சரணம் ஸ்ரீமஹாபெரியவா அபயம்!

என்பதான ப்ரார்த்தனையோடு இனி பிறக்கும் பொழுதெல்லாம் இனிய பொழுதாக பிறக்க ப்ரத்க்ஷ பரமேஸ்வர சங்கர மஹாகுருவை, சசிசேகர சங்கர குருவை சதா சர்வ காலமும் போற்றிப் பணிவோம்! உங்கள் கருத்தூட்டலின் வாசம் எந்தன் ஸ்வாசத்திலே சங்கர கோஷத்தை இன்னமுமாய் சிறக்கச் செய்யட்டும்!

சங்கரம் போற்றி! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


28 views