• காயத்ரி ராஜகோபால்

பெரியவா பார்வையில்


குருவே சரணம்

பெரியவா பார்வையில்

புதிய தொடர்

நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. எனக்குள் ஓடிக்கொண்டிருந்த சிந்தனை ஓட்டம் என்னை தூங்க விடவில்லை .என்னசிந்தனை என்று கேட்கிறீர்களா? எல்லாம் என்னுள் கோவில் கொண்டுள்ள மஹாபெரியவாளை பற்றித்தான்..

முதலில் மஹாபெரியவா அற்புதங்களில் கவனம் செலுத்தினேன். பிறகு மஹாபெரியவாளின் மனித நேயத்தின் மீது கவனம் செலுத்தினேன். இந்த இரண்டு கோணங்களையும் பல்வேறு பதிவுகள் மூலம் எழுதி உங்களுக்கு சமர்பித்திருக்கிறேன் இதுவே இன்னும் இது தீர்ந்தபாடில்லை. நான் இதுவரை உங்களுக்கு கொடுத்தது ஒரு சிறு துளி மட்டுமே..

இந்த இடத்தில தான் எனக்குள் ஒரு பொறி தட்டியது. மஹாபெரியவா என்னும் கற்பக விருக்ஷத்திற்கு காமதேனு பசுவிற்கு இருக்கும் கோணங்கள் எத்தனை எத்தனை. என் ஆயுள் முடிவதற்குள் அத்தனை கோணங்களையும் தொட்டுவிட முடியுமா?. ஆயுள் என்பது நாம் தீர்மானிப்பதல்லவே. இறைவன் முடிவு செய்வது.. நாளை காலையுடன் என் ஆயுள் முடிகிறது என்று கொண்டால் என்னுடைய பதட்டம் இன்னும் அதிகரிக்கிறது.

பதப்பட்டு செயலற்று போவதை விட ஒரு சிறு முயற்சியாவது மேற்கொண்டால் ஆரம்பித்து விட்டோம் என்ற ஒரு திருப்தி கிடைக்கும். பிறகு வேகமெடுத்து தண்டவாளத்தில் உருள்வது உங்கள் கையிலும் என் கையிலும் தானே இருக்கிறது.

பிறகு என்னுடைய மஹாபெரியவா பயணத்தை தோண்ட ஆரம்பித்தேன். தோண்ட தோண்ட நான் பிரமித்தேன்.ஒன்றா இரண்டா. கொட்டி கிடக்கிறது.

என் ஒரு கையால் எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளி உங்களுக்கு அமுது படைக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டு வழக்கம் போல் என்னை வழி. நடத்துங்கள்.

முக்கியமாக இந்த புதிய தொடரில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை பற்றிய மஹாபெரியவா சிந்தனைகள் எப்படி இருக்கின்றன.. பாவ புண்ணியங்கள் கர்மாக்கள் பல்வேறு லோகங்களை பற்றிய தெளிவான விளக்கங்கள் பாவங்கள் அற்ற வாழ்க்கைக்கு எப்படி வாழ்வது போன்ற எண்ணில் அடங்கா விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல பெரியவா பார்வையில் இருந்து நாம் தெளிவு பெறப்போகிறோம்.

என்னால் இந்த தொடர் இந்தக்கிழமை வரும் இந்த நாள் தான் வரும் என்று அறுதியிட்டு கூற முடியாது. இருந்தாலும் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தினமும் பெரியவா பார்வையில் என்ற தலைப்பு வருகிறதா என்று பாருங்கள். இந்த தலைப்பு உங்கள்கண்ணில் பட்டால் நேரம் தாழ்த்தாமல் உடனே படித்து உள்வாங்கிக்கொண்டு உங்கள் சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இந்த தொடர் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கருதினால் உங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கைத்தட்டல்களையும் என்னுடைய மானசீக ஆசான்களாகிய பேச்சாளர்கள் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு கொடுங்கள்.

இதில் என்னுடைய பங்கு என்பது கேட்டதையும் படித்ததையும் எழுதுகிறேன் அவ்வளவுதான்.. முக்கியமாக எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் பேச்சில் இருந்து என் கவனத்தை ஈர்த்தவைகளை உங்களுக்கு எழுதி பரிமாறுகிறேன்..

முதலில் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக்கொள்வேன். பிறகு சிறிது நேரம் ஆசை போடுவேன்.பிறகு உள்வாங்கிய விஷயங்களை என்னுடைய சொந்த நடையில் எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய பங்கு இதில் அவ்வளவுதான்

நான் என் எழுத்துக்கள் மூலம் உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் உங்கள் ஆதரவுடனும் வாழ்த்துகளுடனும் கமெண்டுகள் மூலம் எனக்கு ;உதவுங்கள். நாம் இருவரும் சேர்ந்து வரும்தலை முறையினருக்கு நம்முடைய சீதனமாக மஹாபெரியவா பார்வையை கொடுத்து உதவுவோம்..

நாளையே நீங்கள் இந்த புதிய பதிவை எதிர்பார்க்கலாம். பதிவின் பெயர்

" பெரியவா பார்வையில்”

வாழ்வோம் வளர்வோம் மற்றவர்களையும் வாழவைப்போம் வளர வைப்போம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்