• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச தரிசனம்-008 கோவிலடி


திவ்ய தேச தரிசனம்-008

கோவிலடி

கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலின் முகப்பு தோற்றம்

மூலவர்: அப்பக்குடத்தான் தாயார்: கமலவல்லி தாயார்

அப்பக்குடத்தான் தாயாருடன்

கோவிலடி அப்பால ரங்கநாதர் கோவில் நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டு பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் புராண பெயர் திருப்பேர் நகர் என்பதாகும்....பஞ்ச ரங்க ஸ்தலங்களில் கோவிலடியும் ஒன்றாகும். தினமும் இரவில் பெருமாளுக்கு அப்பம் செய்து படைப்பதால் இந்தப்பெருமாளுக்கு அப்பகூடத்தான் என்று பெயர் வந்தது.

பஞ்ச ரங்க ஸ்தலங்கள்:

  1. ஸ்ரீரங்க பட்டினம்

  2. ஸ்ரீரங்கம்

  3. அப்பால ரங்கம்

  4. சாரங்கன் (கும்பகோணம் )

  5. பரிமள ரங்கனின் (மாயவரம் )

மேற் கூறியஅனைத்தும் பஞ்ச ரங்க ஸ்தலங்கள் ஆகும்.

விஷேஷ அலங்காரங்களுடன் பெருமாள் தாயார்

மங்களா சாசனம்:

மங்களா சாசனம் என்பது பன்னிரு அழவர்களில் ஒருவராவது அந்த கோவில் மூலவர் பெருமாளை பற்றியும் பெருமாள் கோவில் கொண்டுள்ள ஸ்தலத்தையும் ஒரு பாசுரத்திலாவது பாடியிருந்தால் அந்த கோவில் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்று அர்த்தம்.

நம்மாழவார் திருமிழலிசை அழவார் திருமங்கை அழவார் பெரியாழவார் ஆகியோரால் மங்கள சாசனம் செய்யப்பட்டது. பஞ்ச ரங்க ஸ்தலங்களில் கோவிலடி தலமும் ஒன்று.

கோவிலடியின் சிறப்பு:

கோவிலடியின் சிறப்பு என்னவென்றால் இங்கு பிதுர்களுக்கு ப்ரீதியான அப்பம் தினமும் செய்யப்பட்டு பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பிதுர்களின் சாபத்திற்கு ஆளானவர்கள் இங்கு பெருமாளை உருகி வழிபட்டால் பிதுர் சாபம் நீங்கும்...கொள்ளிட நதியும் காவிரி நதியும் ஸ்ரீரங்கம் போல் கோவிலடியையும் சூழ்ந்துள்ளதால் இங்கு பிதுர் காரியங்கள் செய்ய ஏற்ற இடமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் வைகாசி ஆவணி கார்த்திகை மாசி ஆகிய நான்கு மாதப்பிறப்புகளில் வருவது விஷ்ணுபதி பண்டிகை..இந்த நாட்களில் தொன்னூற்றி ஆறு திதி கொடுக்கும் நாட்களில் இந்த நாட்களும் அடங்கும்.

கோவில் செல்லும் வழி:

சென்றவாரம் நாம் தரிசித்த அன்பில் கோவிலில் இருந்து கொள்ளிடம் ஆற்றை கடந்தால் மூன்றாவது மைல் தூரத்தில் வருவது கோவிலடி...தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி பேருந்திலும் வரலாம்.இங்கு கோவிலடி என்று கேட்டால்தான் எல்லோருக்கும் புரியும்... புராண பெயரான திருப்பேர் நகர் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது..கோவிலுக்கு மிக அருகாமையில் பேருந்துகள் நிற்கிறது.

மூலவர்:

அப்பக்குடத்தான் அப்பால ரெங்கநாதர் புஜங்க சயனம் என்று பெயரில் அழைக்கப்படுகிறார்.பெருமாளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் உபமன்யு முனிவருக்கு பெருமாளின் வலது கரம் ஒரு அப்பக்குடத்தையும் அனைத்திருப்பது இங்கு விஷேஷம் ஆகும்..மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார்: இந்திரா தேவி கமலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.

தீர்த்தம்: இந்திர தீர்த்தம் -கொள்ளிடம்

விமானம் : இந்திர விமானம்

தரிசனம்: உபமன்யு முனிவருக்கும் பராசரர் முனிவருக்கும் தரிசனம் கிடைத்தது.

ஸ்தல விசேஷங்கள் : இந்த சேக்ஷத்ரத்தில் இருந்துதான் நம்மழவர் மோக்ஷம் சென்றதாக கூறப்படுகிறது..நம்மாழவார் கடைசியாக இந்த கோவிலை பாடியதால் இங்கிருந்து மோக்ஷம் அடைந்ததாக ஐதீகம்.

பெருமாளுக்கு தினந்தோறும் அரவணையாக அப்பம் நெய்வேத்தியம் செய்யப்படுகிது. பூலோகத்தில் அப்பம் நெய்வேத்தியம் செய்யப்படும் ஒரே கோவில் கோவிலடி.. இங்கு தங்கும் வசதி குறைவு அதனால் திருச்சியிலோ அல்லது திருக்காட்டு பள்ளியிலோ தங்கி தரிசனம் காணலாம்.

இந்த பெருமாளை வேண்டி அத்தனை பிதுர் சாபங்களும் நீங்கி உங்கள் குடும்பம் மங்காத வளமும் குன்றாத மன நிம்மதியும் பெற்று பல்லாண்டு வாழ அப்பால ரங்கநாதரை வழிபடுங்கள். நானும் உங்களுக்காக மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்..

கோவிலடி விஷேஷ காலங்களில் வேத விற்பன்னர்கள்

ஹர ஹர சக்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


43 views