• காயத்ரி ராஜகோபால்

பொங்கல் வாழ்த்துக்கள்


பெரியவா உங்களை நினைத்தாலே

உள்ளம் பொங்குகிறது

பொங்கல் திருநாள்

எங்கள் நன்றி

பஞ்ச பூதங்களே உங்களுக்கு எங்கள் நன்றி பூபாளம் பாடி வரும் கதிரவா உனக்கு எங்கள் நன்றி கார்முகில் மேகங்களே உனக்கு எங்கள் நன்றி நினைவுகளை தாலாட்டும் தென்றலே உனக்கு எங்கள் நன்றி ஓடும் ஆறுகளே உங்களுக்கு எங்கள் நன்றி மண்ணின் தேவையை விண்ணில் இருந்து கொண்டே கர்பம் சுமந்து பிரசவிக்கும் ஆகாயமே உனக்கு எங்கள் நன்றிகள்

பெரியவா நீங்கள் பஞ்ச பூதங்களின் இருப்பிடம்

நீங்கள் எங்களுடன் இருந்தால்

நாளும் பொங்கல் தான் பொங்கலோ பொங்கல்

இயற்கை அன்னையே உனக்கு எங்கள் நன்றி

உங்களுடன் நானும் காயத்ரி ராஜகோபால்