• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை அற்புதங்கள் -17 புதிய அற்புதம் சங்கரன்- வசந்த கல்யாணி


எவருக்கும் எதுக்கும் கருணை காட்டும் மஹாபெரியவா

குரு பூஜை அற்புதங்கள் -17புதிய அற்புதம்

சங்கரன்- வசந்த கல்யாணி

வாழ்க்கையில் நீங்கள் தோற்கலாம்

ஆனால் நியாயமும் தர்மமும்

தோற்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

நீங்கள் வெற்றியின் பாதையில் பயணிப்பது உறுதி

சங்கரன் ஒரு வாழும் உதாரணம்.

இருபது வருடமாக படிப்பிருந்தும் புத்திசாலித்தனம் இருந்தும் வறுமையில் வாடிய குடும்பம் சங்கரன் வசந்த கல்யாணி குடும்பம் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்... அந்த வறுமையை ஒரே இரவில் குரு பூஜை மூலம் மஹாபெரியவா எப்படியெல்லாம் தீர்த்தார் என்பதை நாமெல்லோரும் அறிவோம்.

சங்கரன் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிர்வாகத்தை கொண்ட கம்பெனி... எப்படி மிகப்பெரிய சம்பளமோ அப்படி மிகப்பெரிய வேலை பளு.. நான் கூட நினைப்பேன். மஹாபெரியவா என்னுடைய தொந்தரவு பொறுக்கமாட்டாமல் குருவி தலையில் பனங்காயை தூக்கி வைத்து விட்டாரோ என்று.

ஒவ்வொரு வாரமும் சங்கரன் என்னை தொடர்பு கொண்டு தான் எதிர் கொள்ளும் பிரச்னையை பற்றி சொல்வான்.. நானும் மஹாபெரியவாளை வேண்டிக்கொள்வேன்.. மறு நாள் காலையில் அந்தப்பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் ஒவ்வொரு வாரமும் பிரச்சனைகள் தீர்ந்து போனாலும் அதுவரை உயிர் போய் உயிர் வரும்.. நாம் என்ன ஞானிகளா சாதாரண மனிதர்கள் தானே.

முதல் நாள் அழுது கொண்டே இருப்பான்.. மறு நாள் கம்பெனிக்கு சென்று பிரச்சனைகள் நல்ல முறையில் கழிந்தவுடன் அவனுடைய நம்பிக்கை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்..

ஆனால் ஒரு சங்கரனிடம் ஒரு பொறுப்பு உணர்வு இருந்தது...ஒரு புறம் பயமிருந்தாலும் மற்றொரு புறம் அதே வேலையை ஒரு சவாலாக எடுத்து முடிக்கும் திறமை இருந்தது..இது அந்த நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.

ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணிநேரமென்றால் சங்கரன் அதில் பதினெட்டு மணி நேரம் கம்பெனிக்காக உழைப்பான்.. சங்கரன் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டன.

ஒவ்வொரு முறையும் இரவு சங்கரன் எனக்கு தொலை பேசியில் அழைத்து தன்னுடைய பிரச்சனைகளை இமாலய உயரத்திற்கு சொல்லும்பொழுதே எனக்கும் கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கும்.. இருந்தாலும் இரவு எத்தனை நேரமானுலும் மஹாபெரியவாளிடம் சென்று அவர் காலடியில் போட்டுவிட்டு வந்து படுத்து விடுவேன்.

இந்த மாதம் நான்காம் தேதி ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொண்டான் சங்கரன்..அன்று இரவு நான் படுக்க செல்வகற்கு முன் என்னிடம் அந்த பிரச்னையை எடுத்து சொல்லி மஹாபெரியவாளிடம் ஒரு நல்ல தீர்வை கேளுங்கள் மாமா என்றான். நானும் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து யோசித்தேன்.

மஹாபெரியவாளிடம் இந்த பிரச்னையை எப்படி சொல்ல வேண்டும் என்று. யோசித்து முடித்து நான் உறங்க சென்று விட்டேன். மறு நாள் காலையில் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் அன்று மட்டும் முதல் பிரார்த்தனையாக சங்கரன் பிரார்தனையையை வைத்தேன்.வைத்து பின்வருமாறு வேண்டினேன்:

"பெரியவா சங்கரன் ஒரு பிரச்னையை எதிர்கொண்டு முழிக்கிறான்.. இந்த வேலை மட்டும் அவனுக்கு நிரந்திர வேலையாக மாறிவிட்டால் சங்கரனுடைய அறுபதாவது வயது வரை கவலை இல்லாமல் கழிக்கலாம்..

அவனுக்கு இப்போதான் இருபத்தி ஐந்து வயது ஆகிறது. அவன் சொந்த வீடு வாங்க வேண்டும். அதற்கு அப்புறம் கல்யாணம் பண்ணிண்டு குழந்தை குட்டிகளை பெத்துண்டு சௌக்கியமா இருக்கனும் பெரியவா.... அவனுக்கு இந்த பிரச்னையை முடிச்சு கொடுங்கோ பெரியவா என்றேன்.,. வழக்கம் போல் ஒரு சிறிய அமைதி. பின்னர் எனக்கு பின்வருமாறு பதில் கொடுத்தார்.

“ஏண்டா ஒரு பிரச்சனைன்னு சொன்னே. அப்புறம் வீடு கல்யாணம் கார்த்திகை குழந்தை எல்லாம் சொல்லறே. அதெல்லாம் இப்போ எங்கடா வந்தது..முதலே பிரச்னையை சரி பண்ணுவோம். அவன் கேக்காட்டி கூட கூட நீயே நீளமான பட்டியல் போடறயே.. எல்லாம் நான் பார்த்துகிறேன் என்றார்.சரி பெரியவா என்று சொல்லி மற்ற பிரார்த்தனைகளை முடித்தேன்”...

மறு நாள் காலையில் என்னுடைய பிரார்த்தனைகள் முடிந்தவுடன் என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். இங்கு உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்.

என்னுடைய வேலையே உலகத்தில் உள்ள பக்தர்களின் பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வை வேண்டி மஹாபெரியவா முன் கை கூப்பி நிர்ப்பதுதான் . இவ்வளவு பேருடைய பேருடைய பல விதமான பிரச்சனைகளுக்கு பல விதமான கோணங்களில் இருந்து பார்த்து ஆராய்ந்து மஹாபெரியவாளிடம் சமர்ப்பிக்கும் பொழுது குழப்பமில்லாமல் சொல்லி தீர்வு வாங்க வேண்டும்..

நான் சொன்னால் தான் மஹாபெரியவாளுக்கு தெரியுமா? அவருடைய ஞான திருஷ்டியில் தெரிந்து விடாதா. இருந்தாலும் என்னுடைய மன சாந்திக்கு சரியாக சொல்லிவிடுவேன்..

நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னைக்கே துவண்டு விடுகிறோம், நான் ஒருவனே இவ்வளவு பேருடைய பிரச்சனைகளை தீர்வு கிடைக்கும் வரை என் தோளில் சுமந்து மனம் தளராமல் பதிவுகளை எழுதுவதும் தொலை பேசியில் ஆலோசனைகளும் அறிவுரைகளும் சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய மனமும் தலையும் அப்பொழுது மலர்ந்த தாமரை போல இருக்க வேண்டும்..

மஹாபெரியவாளும் அப்படித்தான் என்னை வைத்திருக்கிறார்.. என்னுடைய நாள் ஒன்றுக்கு பதினேழு மணி நேரம் மற்றவர்கள் நலனுக்கு உழைக்க வேண்டுமென்றால் என் உடலை விட என் மனது உற்சாகமாக இருக்க வேண்டும். இருக்கிறேனே இதுவே ஒரு அற்புதம்தானே!.

இனி சங்கரனுடைய பிரச்சனைக்கு வருவோம்..மறு நாள் இரவு சங்கரன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் வருமாறு கூறினான்

"மாமா மஹாபெரியவா என்னுடைய பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டார். என்னுடைய கவலை முடிந்தது மாமா என்றான். என்னுடைய மன அழுத்தமும் குறைந்தது.

மறு நாள் காலையில் மஹாபெரியவாளிடம் நான் முதலில் என் நன்றியை தெரிவித்துகொண்டடேன். அதற்கு மஹாபெரியவா என்னிடம் சொன்னார்.

"பிரச்சனைகள் இல்லாத வாழக்கை ஒரு பகல் கனவுடா. அதெல்லாம் ஒன்னும் இல்லை மனுசனா பொறந்தா பாவம் பண்ணுவான். பாவம் பன்னவன் தான் மறுபடியும் மறுபடியும் மனுஷனா பொறுப்பான். பிரச்சனைகளை எதிர்கொள்வான்.

ஆனால் எந்த சமயத்திலும் நீ தோற்கலாம்.ஆனால் நியாயமும் தர்மமும் தோத்து போகக்கூடாது. நீ தர்மத்தின் வழியில் போய்க்கொண்டே இரு. உன்னை பிரச்சனைகளும் ஒன்னும் பண்ணாது. மனுஷாளும் உன்கிட்டே நெருங்க முடியாது. இதை நீ எல்லாருக்கும் எழுது அவாளும் தெரிஞ்சுக்கட்டும். என்றார் நானும் எழுதி விட்டேன்.நீங்களும் சுவீகரித்து கொள்ளுங்கள்.

நானும் என் நன்றியை சொல்லிவிட்டு விடை பெற போனேன். மஹாபெரியவா என்னிடம் சொன்னார். டேய் உன்னோட சங்கரனுக்கு ஒரு நல்ல விஷயம் காத்துண்டு இருக்கு. உனக்கு சீக்கிரமே தெரியும் என்றார். நான் கேட்டேன்

என்ன நல்ல விஷயம் பெரியவா என்றேன். அதெல்லாம் வரும்பொழுது உனக்கு தெரியும். இன்னும் ரெண்டு மூணு நாளிலே வரும். அப்போ நீயும் தெரிஞ்சுக்கோ.என்றார். நானும் விடை பெற்றேன்.

இந்த விஷயத்தை நான் சங்கரனிடம் சொல்லவேயில்லை.. எனக்கு என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்வது என்று. பேசாமல் இருந்து விட்டேன்.

நாள் இந்த மாதம் ஆறாம் தேதி. மஹாபெரியவா சொன்ன அந்த நல்லசெய்தி சங்கரனை நெருங்கி விட்டது. அன்று நிர்வாகம் முடிவு செய்து அறிவித்தது. சென்ற வருடத்திய நிர்வாகத்தின் சிறந்த பணியாளர் (Best Employee) சங்கரன் என்று. இந்த விஷயத்தை சங்கரன் என்னிடம் சொன்னபோது நான் மஹாபெரியவாளை பார்த்துக்கொண்டே பேசினேன். என் கண்களில் வழிந்த இரு சொட்டு ஆனந்த கண்ணீரை மஹாபெரியவாளுக்கு காணிக்கையாக்கி விடை பெற்றேன்.

குருவருள் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் சாத்தியமே

சங்கரன் ஒரு வாழும் உதாரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்