• சாணு புத்திரன்

குருப்புகழ்


பெரியவா சரணம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். மூகபஞ்சசதீ கடாக்ஷ சதகத்திலே ஸ்ரீமூகாச்சார்யாள் அம்பாளை ஸ்மரித்த ஸ்லோகமே நினைவுக்கு வருகிறது.

காமாக்ஷி கோர பவரோக சிகித்ஸனார்த்தம் அப்ப்யர்த்த்ய தேசிக கடாக்ஷ பிஷக் ப்ரஸாதாத் | தத்ராபி தேவி லபதே ஸுக்ருதீ கதாசித் அத்யந்த துர்லபம் அபாங்க மஹௌஷதம் தே ||

இதன் பொருளானது, "ஹே தேவீ! காமாக்ஷீ! கோரமான பிறப்பு இறப்புத் தொடராகிய நோயின் சிகிச்சைக்காக, வழிகாட்டியான குருவின் கடாக்ஷமாகிற வைத்தியரின் அருளால், நற்பணி புரிந்த புண்ணியவான் மிகவும் துர்லபமான உன் கடைக்கண் பார்வையாகிய சிறந்த பெருமருந்தை எப்போதாவது பெறுவான்" என்பதாம். எப்போதாவது என்ன, இப்போதே.. இங்கேயே.. இந்தத் தரிசனங்களிலே, காமாக்‌ஷி, ஆதிசங்கரர், ஸ்ரீசரணாளின் தரிசனங்களிலே பெறலாமே! குஞ்சிதசங்கரனின் க்ருபா கடாக்ஷத்திலே மஹா ஔஷதம் பெற்று ரோக நிவாரணம் பெறுவோமே! ஸ்ரீசக்ர சாம்ராஜ்ய நாயகியான அன்னையின் கருணையிலே ருணவிமோசனம் பெறுவோமே! மும்மூர்த்திகளின் ஒரே ஸ்வரூபம்... மூன்று சக்திகளின் ஒரே ஸ்வரூபம்... தேவாதி தேவர்களின் ஒருமித்த ஸ்வரூபமான ஸ்ரீசரணரின் அனுக்ரஹத்திலே நம் ப்ரார்த்தனைகள் பலிதமாகட்டும். இங்கே பகிர்ந்துள்ள குருப்புகழுக்கான திருபுகழ் சந்தத்தை அளித்து இந்த் குருப்புகழை எழுதுடா கண்ணான்னு எனக்கு ஊக்கமளித்த அன்பான Saraswathi Thiagarajan அம்மாவுக்கும் நன்றி. நமஸ்காரங்கள்.

ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர #குருப்புகழ் அண்டர்உல குந்துதிக்க அசுரருல குந்துதிக்க் அகிலவுல குந்துதிக்கவே அலைபுரளி யுந்துதிக்க சலவுயிர்க ளுந்துதிக் சகலதிசை யுந்துதிக்கவே மண்டல நிறைந்தபதி மாஹேச னாதியிறை கண்மலர வந்துதிக்கவே தண்டமுட னுங்கதிரி னுள்ளொளிரு மாகிபுவி வந்ததுற வாகியிருந்தே சந்ததமுந் தந்தருளு சோதியனு பூதியென கொண்டதல காலடியிலே வந்ததொரு வாசியென வந்தமையு மோருறவு மாகவுரு கொண்டகுருவே தந்தநன தானனன தந்ததன வெம்பதமுந் தந்துவுனை போற்றிடவுமே கந்தகுரு நாமமொடு சங்கரனு மானவுந்தன் சேவடியுங் காக்குந்தினமே! சொற்பொருள்:

அண்டர் – சங்ககால இடையர் குடியினர்; அண்டம் – நிலவுலகு அண்டர் – நிலவுலகினர்; அலைபுரளி – அலைகடல்; சலவுயிர் – நீரிலே வாழும் உயிரினங்கள்; மண்டலம் – அனைத்துலகமும்; கதிரினுள்ளொளி – ஒளிக்கு ஒளிசேர்க்கும் காரணி; வாசி – ப்ராணசக்தி; கந்தகுரு நாமம் – சுவாமி நாதன்; சேவடி – திருப்பாதம்; சசிசேகர சங்கரன் – சசி-சந்திரன் – சசிசேகரன் என்பது நம் ஸ்ரீமஹாஸ்வாமிகளைக் குறிப்பதாம். அகில உலகங்களும் போற்றிடும் சர்வசக்தியான பரமேஸ்வரனின் அவதாரமாக காலடியிலே உதித்த சங்கர வம்சத்திலே சங்கர சங்கர அம்சமாக ப்ராணசக்தியாக உருவெடுத்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கரனான ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதியான ஸ்ரீமஹாஸ்வாமிகளைப் பணிந்து போற்றும் எவர்க்கும் அவருடைய பாதாரவிந்தங்களின் அருள் காக்கும் துணையாகும் என்பதான பொருளுடனே வந்தமைந்த குருப்புகழிதனைப் பாடிப் போற்றும் ஒவ்வொரு அடியார்க்கும் அவருடைய கருணை கிட்டி நல்லன பெறுவர் என்பது மஹா சத்தியமல்லவோ! எல்லாம் வல்ல எம்பெருமானின் அருட்கடாக்ஷத்திலே அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்தித்துக் கொண்டு, அன்னைக்கும் நமஸ்கரித்து, அன்பான உங்கள் யாவருடனுமாக இந்தக் குருப்புகழினை ஸ்ரீமஹாஸ்வாமிகள் திருப்பாதங்களிலே சமர்ப்பிக்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


52 views