• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-036


பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-036

பிரதி புதன் கிழமை தோறும்

டாக்டர். திருமதி சுஷ்மா சந்திர மௌலி

டாக்டர். திருமதி சுஷ்மா சந்திர மௌலி

டாக்டர் திருமதி சுஷ்மா . இவர் ஒரு அமெரிக்கா வாழ் தமிழர். இவர் தமிழ் நாட்டை சேர்ந்த திருவிடைமருதூரை என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு மனநோயாளிகள் மருத்துவ மனையில் வேலை செய்கிறார்.

இவரது குடும்பம் மஹாபெரியவாளை குருவாக ஏற்ற ஒரு குடும்பம். எந்த ஒரு சோதனை ஆனாலும் இவர் வாயில் முதலில் வரும் வார்த்தை மஹாபெரியவா காப்பாத்துங்கோ. ஒவ்வொரு முறையும் மஹாபெரியவா சோதனையான கால கட்டங்களில் வந்து விடுவார்.

மற்றவர்கள் வாழ்வில் நாலைந்து அற்புதங்கள் மறக்க முடியாமல் இருக்கும். ஆனால் இவரது வாழ்வில் நடந்த ஒரு அற்புதம் என்றுமே மறக்க முடியாது. அப்படியொரு அற்புதம் அது.

அந்த ஒரு அற்புதத்தை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்:

அன்று ஒரு நாள் அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு. சாலையில் எங்கு பார்த்தாலும் வெண்மையாக பனி படர்ந்திருந்தது.சாலை எது நடை பாதை எது என்று தெரியாத நிலை. டாக்டர் சுஷ்மா வேலை பார்க்கும் மருத்துவமனை ஒரு சிறிய கிராமம். அங்கு சாலையும் வயல் வெளியும் ஒரு போலத்தான் இருக்கும்.

அந்த சாலையில் வாகனங்கள் வருவது மிகவும் அபூர்வம். அன்று அதிகாலை டாக்டர் தன்னுடைய காரை எடுத்துத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர் தானே காரை ஓட்டிச்சென்றார்.

ஓட்டுநர் முன் இருக்கும் தடுப்பு கண்ணாடியில் பனி படர்கிறது. பனியை விலக்கும் தானியங்கியும் செயலற்று போய் விட்டது. அந்த சமயத்தில் பின்புறம் இருந்து அந்தக்காரையே விழுங்கிவிடும் அளவிற்கு ஒரு பெரிய வாகனம்.காது கிழியும் படி ஹார்ன் சப்தம் கொடுக்கிறான்.டாக்டருக்கு முன்னால் எதுவும் தெரியவில்லை.

டாக்டர் முடிவு செய்து விட்டார் தன்னுடைய ஆயுள் இன்றுடன் முடிந்தது என்று. ஆனால் காரில் உடையாளூர் கல்யாணராமன் அவர்கள் பாடிய அபராகருணாசிந்தும் பாடல் பாடிக்கொண்டிருக்கிறது. டாக்டர் மயக்கம் அடைந்து விட்டார்.

மஹாபெரியவாளை பற்றி பாடிக்கொண்டிருந்த அபரா கருணாசிந்தும் பாடல் திரும்ப திரும்ப அதையே பாடிக்கொண்டிருகிறது. டாக்டர் சற்றே மயக்கம் தெளிந்த நிலையில் பார்க்கிறார்.ஓட்டுநர் இருக்கையில் மஹாபெரியவா. பக்கத்து இருக்கையில் டாக்டர். சற்று தூரம் கார்சென்றபின் மீண்டும் மயக்கம்.

மருத்துவமனைக்கு ஐநூறு அடி தூரத்தில் மயக்கம் தெளிகிறது. மீண்டும் ஓட்டுநர் இருக்கையில் டாக்டர். ஐஸ் காணாமல் போய் விட்டது. டாக்டரும் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தார்.

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. மஹாபெரியவா எப்படி இருந்தார் என்பதுதானே. நீங்களே கேளுங்கள் டாக்டர் சுஷ்மா சொல்வதை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கை காணுங்கள். டாக்டர் மரணத்தை சந்தித்து மஹாபெரியவா கருணையால் உயிருடன் மீண்டு வந்த கதையை நீங்களே கேளுங்கள்










https://www.youtube.com/watch?v=ugUWCIxU0nc&t=2029s

கீழே உடையாளூர் கல்யாணராமன் மாமா பாடிய அபராகருணாசிந்தும்

பாடல் லிங்கை கேளுங்கள். உங்களை நீங்கள் மறந்து உங்கள் மனக்கண்ணில் மஹாபெரியவாளை தரிசனம் காணுங்கள்










https://www.youtube.com/watch?v=9EkqN-0X3zc

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

l

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்