• செந்தில் நாதன்

திருப்புகழ் -3


திருப்புகழை பாடிய அருணகிரி நாதர் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் சகோதரர் செந்தில் அவர்கள் அருணகிரி நாதர் பாடிய திருப்புகழை இன்றும் அதன் சுவை குன்றாமல் மனம் மாறாமல் நமக்கு வாரம் ஒரு திருப்புகழ் என்ற வகையில் தருகிறார். அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வினை தீர்க்கும் முருகன் எல்லா செல்வங்களையும் மன அமைதியையும் நாளும் அருளட்டும் என்று உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி

சரணம்.

திருப்புகழ்- 3

மகா பெரியவா முருகா சரணம் மகா கருணைக்கு ஒரூ வடிவம் இருந்தால்

அதுவே மஹாபெரியவா. அதுவே நம் முருகன் குகன் குமரன், நம்மை நாளும் காக்கும் தெய்வம்.

தை மாதம் பிறந்தது நம் வாழ்விற்க்கும் ஒளி பிறந்தது கணபதியை துதி செய்ய

திருப்புகழ் மாலை தொடுப்போம்

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 3 உம்பர் தரு (விநாயகர்)

பாடல்

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி      ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்      என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே      தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே      ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே உம்பர் தரு

விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் தேனுமணி 

காமதேனு, சிந்தாமணி கசிவாகி

(இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒண்கடலிற் தேனமுது 

ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்ற உணர்வூறி 

உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பரசத்தே பருகிப் பலகாலும் 

இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே 

என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பிதனக்காக 

தம்பியின் (முருகனின்) பொருட்டாக வனத்(து) அணைவோனே 

தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை வலத்தால் 

தந்தை சிவனை வலம் செய்ததால் அருள்கைக் கனியோனே

கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்தமக் கான 

அன்பர்களுக்கு வேண்டிய நிலைப் பொருளோனே

நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரத்து 

ஐந்து கரங்களையும் ஆனைமுகப் பெருமாளே

யானைமுகத்தையும் உடைய பெருமானே.

என்றும் உங்கள் செந்தில்நாதன்


0 views