• சாணு புத்திரன்

மஹாபெரியவா புஷ்பாஞ்சலி


பெரியவா சரணம்

சென்ற வாரம் நடந்த மஹாபெரியவா புஷ்பாஞ்சலியை காண தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு நம்முடைய பிரார்த்தனையிலே தர்மம் நிறையுமானால் அதனை பகவான் அழகுற நிறைவேற்றி ஆனந்தத்தை அருள்வான்; செய்யும் எத்தகைய செயல்களிலும் தர்மம் நிறைந்திருக்க வேண்டியது அவசியம்; பகவானிடம் பிரார்த்திக்கும் போது லோகத்துல இருக்கறவா எல்லாருக்குமா பிரார்த்திக்கனும் என்பதாகத் தானே நம்மை அன்புற பண்புற ஒற்றுமையோடு வாழவைத்து வழி நடத்திவரும் நம் ஆசார்ய ச்ரேஷ்டர்கள் திருவாக்கு அருள்கின்றனர். அது சத்யமன்றோ! எல்லோருமாக ஒன்று சேர்ந்து எல்லோருக்குமாக நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கர மஹாபிரபுவான ஸ்ரீமஹாபெரியவாளுக்கு விசேஷ அனுஷ பூஜைதனைச் செய்து இன்றைய தை பொழுதினை வரவேற்றிருக்கின்றோம் என்றால் அது நம் ஆசார்யர்களின் அவ்யாஜ கருணையன்றோ! இந்த ஹேவிளம்பி வருஷத்திலே நடைபெற்ற ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜையிலே கலந்து கொண்டு கைங்கர்யங்களைச் செய்த அனைத்து சத் ஆதமங்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். அதிகாலையில் ஸ்ரீபுஷ்பாஞ்சலி பெரியவாளை விக்ரஹ ரூபத்திலே வரவேற்று, பூஜா மண்டபத்திலே சக்ரவர்த்திகளாக அமர்த்தி, கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், கோ பூஜையுடனாக, ஸ்ரீமஹாந்யாஸம், ஸ்ரீருத்ர சமக பாராயணங்களுடனாக, ஸ்ரீருத்ரஹோமம், சஹஸ்ரநாம பாரயணங்கள் (ஸ்ரீவிஷ்னு, ஸ்ரீலளிதா) செய்து, ஏகாதஸ ருத்ராபிஷேகம் செய்து, அத்புதமான அலங்காரத்திலே அதிகாரநந்தி வாகனத்திலே நம் சக்ரவர்த்திகள் அருளாசிக் கரத்தோடு, ஸ்ரீஸ்வாமிநாத குருவாக வேலுடனும் தண்டத்துடனுமாக, ஸ்ரீபரமேஸ்வர பார்வதி ஸ்வரூபமாக அமர்ந்திருக்க, சகல தேவதைகளும் அவர்களுக்குள்ளே வ்யாபித்திருக்க, பக்தர்கள் தம்பதிகளாக சம்பிரதாய உடையிலே அனுஷ்டானங்களைச் செய்தவர்களாக, லோக ஜீவர்களுக்கென ப்ரார்த்தனை செய்து, ஸ்ரீசரணாரவிந்த அஷ்டோத்தர அர்ச்சனைகளைச் செய்து, உபநிஷத்துக்கள் பாராயணத்தோடு நடைபெற்ற ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி மஹோத்ஸவத்தினை ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞ பீடத்திலே 68-வது ஆசார்ய ச்ரேஷ்டராக உதித்து ஒரு நூறு ஆண்டுகள் நமக்கென நம்மோடு வாழ்ந்து இன்றும் சூக்ஷமமாக இருந்து நம்மை ஆட்கொண்டு அருளும் வேதத்தெய்வத்தை பிரார்த்தனை செய்த புண்ணியப் பொழுதினை இங்கே எல்லோரும் காண வேண்டி இன்புற வேண்டி அனுக்ரஹம் பெறவேண்டி swasthik tv செய்த நேரடி ஒளிபரப்பின் லிங்கினைத் தொடர்ச்சியாக பதிவிடுகிறேன். மொத்தம் ஐந்து லிங்க்குகள். எல்லோரும் கண்டு களித்து தாங்கள் அறிந்த அனைவருக்கும் இதனைப் பகிறுமாறு வேண்டுகிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=1605915962820195&id=496320130446456 https://m.facebook.com/story.php?story_fbid=1605937009484757&id=496320130446456 https://m.facebook.com/story.php?story_fbid=1606029719475486&id=496320130446456 https://m.facebook.com/story.php?story_fbid=1606182252793566&id=496320130446456 https://m.facebook.com/story.php?story_fbid=1606214629456995&id=496320130446456

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்


208 views