• சாணு புத்திரன்

குரு கானம்


குரு கானம்

பெரியவா சரணம்.

கலிதனிலே கைலாயத்துக்கும் வைகுண்டத்துக்கும் ஈடான சபரிபீடத்திலே குத்திட்டு அமர்ந்து அண்டிவந்த பக்தர்களுக் கெல்லாம் அருள் புரியும் ஆசார்யத் தெய்வமாம் ஹரிஹரபுத்திரனை அன்போடு பாஇப் போற்றுகின்ற ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சபரி மலையில் வண்ண சந்த்ரோதயம்... சங்கரா... நம் சந்திரசேகரம் எனும் சந்த்ரோதயம் காஞ்சியிலே மட்டுமா என்ன? அகில உலகெங்கினிலும்... ஒவ்வொரு ஜீவராசிகளிலும்... க்ஷணத்திற்கு க்ஷணம்... அந்த சர்வேச்வரனைப்ன்பாஇப்ன்புலம்ப எத்தணித்த மனதோடு இதோ விரல்கள் தடதடக்க முகலூனில் ர்ந்தன் தலைவாயிலில் உங்கள் முன்பாக....!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

#ஸ்ரீகுருகானம் கருணை வடிவுடைய காரூண்யனை - நாளும் கும்பிட்டு பணிந்தோர்க்கு குறையுமுண்டோ தேடிச் சரண் புகுந்த அடியவர்க்கு என்றும் நிறையாவும் பொங்கிடுநல் வாழ்வமையும் (கருணை...) மாயனின் மருகோனின் திருநாமம் கொண்ட மா'தவ சங்கரனின் திருப்பாதம் பார்புகழ் மதிரதனைத் தொழும் நேரம் இந்தப் பாருடை உயிர்களெலாம் உறவாகும் தென்னகச் சீர்திரு காஞ்சியிலே உறை சங்கரா தேவரும் மூவரும் ஓர் உருவில் சசிசேகரா சங்கரா - காஞ்சி சங்கரா சங்கரா - ஸ்ரீசந்த்ரசேகரா (கருணை...) நாடி நலம் தரவும் தவக்கோலம் - கண்டு நாடாதவர்க் கருளும் திருக்கோலம் சாலச் சிறந்ததென் மறைவேதம் எங்கும் நா நலம் பொங்க அருள் தரும் கோலம் தென்னகச் சீர்திரு காஞ்சியிலே உறை சங்கரா தேவரும் மூவரும் ஓர் உருவில் சசிசேகரா சங்கரா - காஞ்சி சங்கரா சங்கரா - ஸ்ரீசந்த்ரசேகரா (கருணை...) உள்ளத்தில் உண்மைநெறி கொண்டோரும் - தினம் கள்ளமிலா மனதில் நிறைவேகும் நல்லதும் நாடிடவும் அருட்கோலம் எங்கள் நான்மறை போற்றும் திரு இறையாகும் தென்னகச் சீர்திரு காஞ்சியிலே உறை சங்கரா தேவரும் மூவரும் ஓர் உருவில் சசிசேகரா சங்கரா - காஞ்சி சங்கரா சங்கரா - ஸ்ரீசந்த்ரசேகரா (கருணை...)

எந்த உள்ளத்தில் கள்ளமில்லையோ, எந்த மனதில் வஞ்சமில்லையோ, எந்த ஜீவனுள் கபடமில்லையோ அங்கே நிறைந்திருக்கும் சதாசிவமான ஸ்ரீசந்த்ரசேகரத்தை சதாசர்வகாலமும் த்யானித்து வருவோமே! ஓர் நாள் நம்மிலும் நிறைவார். ஆம். தர்மம், நியாயம், உண்மை நெறி என பல நல்லதுகள் நம்முள்ளே நிறையச் செய்து தாமும் நிறைவாரே அந்த தீனதயாளன். சங்கரம் போற்றி! இந்த நொடியினிலே விவாஹ ப்ராப்தம் வேண்டுவோர்க்கும், ரிக நிவாரணம் வேண்டுவோர்க்கும், புத்திர பாக்யம் வேண்டுவோர்க்கும், நிம்மதி ஆனந்தம் தேடியலைவோர்க்கும், திருமணமான தம்பதுகளுக்குள்ளே அன்யோன்யம் வேண்டுவோர்க்கும், உறவுகளுள்ளே ஏற்பட்ட விரிசல்கள் நீங்கி ஒற்றுமை வேண்டுவோர்க்கும் அவர்கள் பிரார்த்தனைகள் பலிதமாகி ஐயனைன் அருளோடு நலமோடு ஆனந்தமாக வாழ பிரார்த்திப்போமே!

பெரியவா சரணம் பெரியவா சரணம் ஸ்ரீமஹாபெரியவா அபயம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


30 views