• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச தரிசனம்-009 தேரெழுந்தூர்


திவ்ய தேச தரிசனம்-009

தேரெழுந்தூர்

தேவாதி ராஜன் செண்பகவள்ளி தாயார்

பெருமாள் கர்பகிரஹ தோற்றம்

திருவழுந்தூர் (தேரெழுந்தூர்)

ஆமருவியப்பன் கோவில்

செல்லும் வழி: மாயவரத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது. இங்கு அஹோபில மடம் உள்ளது.

மூலவர்: தேவாதி ராஜன் நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இடது புறம் கருடாழ்வாரும் வலது புறம் ப்ரஹலாதனும் இருக்கிறார்கள்.இடது கையில் ஊன்றிய கதை.இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்டு சேவிக்கிறாள்.

உற்சவர்: உபய நாச்சியாருடன் ஆமருவியப்பன் அருகில் அழகான பசுவும் கன்றும்.

தாயார்: செங்கமலவல்லி

தீர்த்தம்: தர்சன புஷ்காரணி காவேரி

விமானம்: கருட விமானம்

தரிசனம் பெற்றவர்கள்: தர்ம தேவதை காவேரி கருடன் அகஸ்தியர்

கோபுரத்தின் உட்புறம் கம்பனும் அவரது மனைவியும் நிற்கிறார்கள்

தேரெழுந்தூர் நுழை வாயில்

இது கம்பன் அவதார ஸ்தலம் கோவிலுக்கு தென் மேற்கே அரை மைல் தூரத்தில் கம்பன் மேடு என்ற இடத்தில கம்பர் வாழ்ந்ததாக சொல்கிறார்கள். இங்கு வருடம் தோறும் கம்பன் விழா கொண்டாடப்படுகிறது.மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்திருக்கிறார். திருமங்கையழுவார் மங்களா சாசனம் செய்துள்ளார்.

தேவாதிராஜன் தாயாருடன்

விசேஷங்கள்:கோவிலின் உட்புறம் கம்பனும் அவர் மனைவியும் சிலா ரூபமாக காட்சி தருகின்றனர். எதிரில் தெளிந்த நீருடன் கூடிய புஷ்காரணி. இது கம்பன் அவதார ஸ்தலம்.கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தென் கிழக்கே கம்பன் மேடு என்ற இடத்தில் கவி சக்கரவர்த்தி வாழ்ந்ததாக சொல்லபடுகிறது. மனவள முனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பதை போலவே இங்கும் கருடனுடன் பெருமாள்

ஆமருவியப்பனை பிரார்தித்துக்கொண்டால் உங்கள் சோதனையான காலகட்டங்களில் நல்ல நிவர்த்தி கிடைக்கும். திருமணம் குழந்தை பேறு மற்றும் கடன் தொல்லைகள் நாள் பட்ட உடல் நோய்கள் சத்துரு சம்ஹராம் ஆகியவற்றிற்கு இங்கு வேண்டிக்கொண்டால் உடனே நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறி நீங்கள் எதிர்கொள்ளும் வாழ்கை பயமற்ற வாழ்கையாகவும் நிம்மதியான வாழ்க்கையாகவும் இருக்க தேவாதி ராஜனையும் மஹாபெரியவாளையும் பிரார்த்தனை செய்து கொள்ளவோம்.

தேரெழுந்தூர் கோவில்குளம்

ஹர ஹர சக்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்