• சாணு புத்திரன்

ஸ்ரீகுருப்புகழ்


பெரியவா சரணம்.

சிவ ஸ்வரூபி நம் மஹாபெரியவா என்று அனேகம் மஹானுபாவர்கள் நமக்கு உணர்த்துவதோடு நாமும் நம் அன்றாட வாழ்வுதனிலே உணர்த்தும்படியான பற்பல நிகழ்வுகளையும் சந்திக்கின்றோமே! நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு விஷயம் மனதிற்குப் புலப்படும். நமது இதிகாச புராணங்களிலே ஸ்ரீமன் மஹாவிஷ்ணு சதாசர்வ காலமும் சிவசிந்தனை உடையவனாக, சர்வம் சிவமயம் என்று சொல்வதற்கொப்ப, சதாசர்வகாலமும் உள்ளுறை சிவத்தோடு தம்மையே பிரார்த்தித்து வரும் தம் அடியார்களைப் பற்றிய சிந்தனையாகவே இருப்பதாகச் சொல்கிறது. அவ்வாறே ஸ்ரீபரமேஸ்வரனோ, எப்பொழுதும் நாராயணன் நினைவாகவே தியானத்திலே இருப்பதாகவும் போதிக்கின்றது. நம் பெரியவா என்னதான் சிவஸ்வரூபி என்றாலும், சதாசர்வ காலமும் “நாராயண நாராயண…” என்றே ஜபித்தார்கள் என்பதையும் அறிவோமே! சிவமும் சக்தியும் ஒன்று எனும் பட்சத்திலே சிவமும் ஹரியும் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியம் என்பதைப் புலப்படுத்துவதற்காகத் தானே ஹரிஹரபுத்திரனின் அவதாரமும். சங்கரா! அந்த ஹரிஹரபுத்திரனும் நமக்கெல்லாம் தன்வந்திரி மூர்த்தி தாம்; குருநாதன் தாமே! இப்படி மஹாபெரியவா என்றால் நமக்குத் தெரிந்திருக்கின்ற பற்பல விஷயங்களுக்கும் அவரே மிகப் பெரும் சான்றேனத் திகழ்கின்றனரே! அப்படிப்பட்ட ஒரு மனிதவுருத் தெய்வத்தை நாமெல்லாம் அன்றாட வாழ்வினிலே ஸ்மரிக்கின்றோம்; தொழுகின்றோம் எனச் சொன்னால் எப்பேர்ப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள் நாமெல்லாம். இப்படியாக உள்ள இந்த புண்ணிய ஆத்மா கொண்ட இப்பிறப்பிலே அவர் கூறியபடியான நல்லறங்களைச் செய்து நல்வாழ்வு வாழ்வோமே! இன்றைய குருப்புகழ் மூலமாக இந்த புண்ணிய வாழ்விலே ஆனந்தமாகிய முக்தியை நாம் எல்லோரும் பெறவேண்டி பிரார்த்திப்போமே!

ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர

#ஸ்ரீகுருப்புகழ் ......... சந்தம் ......... தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான ......... பாடல் ......... கங்கையுந் திங்களும் கொண்டையி லொம்பிடும் மங்கலம் சுந்தரம் …… உடையோனே அங்கையும் தந்தருள் செந்திறம் பொங்கிடும் சந்ததம் சொல்லிடும் …. பெருமானே கச்சியம் உள்ளுறை மெச்சியள் பொன்னருள் கொண்டொரு சங்கரன் ….. திருவாளா நித்தமும் நெஞ்சமுள் சித்தெனும் புண்ணியம் பெற்றுநல் வாழ்வருள் …. பெறுவோமே! கங்கையும் பொங்குநற் செஞ்சடை வெந்திறம் தந்தருட் புங்கவன் ………. அருளாலே அஞ்சொடும் முன்பிலும் அஞ்சுகம் நல்லறம் இல்லறம் இஞ்சுகம் ……… பெறலாமே சங்கரன் அம்பதம் நெஞ்சகம் கொள்அறம் சங்கடம் நீக்கிடும் …… உணர்வோமே தண்டமும் கொண்டருள் சங்கரன் முன்னமும் நித்தமும் தாழ்பணிந் …… தொழுவோமே!

ஆம்! குவலயத்தில் குருவடித் தொழுதோர்க்கு குறையெல்லாம் குன்றாத நிறைவாகி குதூகலமாக வாழ அருள்புரியுமன்றோ! நித்தமும் குருவடித் தொழுது சித்தம் தூய்த்து நல்லறம் பேணி இன்புற வாழ்வோமே! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.