• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-039 - நடிகர் விணு சக்கரவர்த்தி


குருவே சரணம் குரு பாதமே சரணம்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-039

நடிகர் விணு சக்கரவர்த்தி

பிரதி புதன் கிழமை தோறும்

மஹாபெரியவா திருப்பாதங்களை

இரு கைகளாலும் இருக்க பற்றிய

அனுவம் உண்டா உங்களுக்கு.

இல்லையா இந்த பதிவை கேளுங்கள்

இந்த பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா என்னும் தொடரில் இதுவரை நாம் பார்த்தது வைதீகத்தில் உள்ளவர்களின் அனுபவங்களையும் மருத்துவ துறையில் உள்ளவர்களின் அனுபவங்களையும் இன்னும் பல வேறு துறைகளில் உள்ளவர்களின் மஹாபெரியவா அற்புத அனுபவங்களை அனுபவித்து வந்தோம்.

ஆனால் இந்த தொடரில் நடிப்பு துறையில் இருந்து ஒரு பிரபலமான நடிகர் ஒருவரின் மஹாபெரியவா அற்புதங்களை கேட்டு அனுபவிக்கப்போகிறோம்.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான நடிகர் பல்வேரு கதாபாத்திரங்களை ஏற்று மிகவும் சிறப்பாக வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்புத்திறனை காண்பித்து பல்வேறு விருதுகளை வாங்கி நம் மனதிலும் இடம் பிடித்த நடிகர் ஸ்ரீ விணு சக்கரவர்த்தி அவர்களின் மஹாபெரியவா அற்புதங்களை கேட்டு அனுபவிக்கப்போகிறோம்.

இந்த காணொளியை உங்களுக்கு சமர்ப்பிக்க கரணங்கள் பல உண்டு இருந்தாலும் என்னை கவர்ந்த சில விஷயங்கள் உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் இந்தப்பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்:

முதல் காரணம் விணு சக்கரவர்த்தி ஆன்மீகத்திற்கு கொடுக்கும் விளக்கம் மிகவும் ஒரு வித்யாசமான அணுகு முறையில் இருந்தது. மனசுக்கும் மனசாட்சிக்கும் இடையே நடக்கும் போராட்டமே ஆன்மிகம் என்ற கோணத்தில் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார். நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு புரியும்.

இரண்டாவது காரணம் விணு சக்கரவர்த்தி பகவான் ரமணா மகரிஷிக்கு வயது அறுநூறு என்றும் நம் மஹாபெரியவளுக்கு வயது ஆயிரம் என்கிறார். இவர் கொடுக்கும் விளக்கத்தை கேளுங்கள்.

மூன்றாவது காரணம் : ஒரு முறை விணு சக்கரவர்த்தி காஞ்சிபுரம் சென்றிருந்த பொழுது அங்கு தன்னுடைய நண்பர் நடனம் என்பவருடன் காஞ்சி அக்ராஹாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மஹாபெரியவா காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு திருப்ப வந்து கொண்டிருந்தார்.

மஹாபெரியவா நடக்கும்பொழுது எல்லோருமே ஒரு ஐந்து அடி தள்ளித்தான் நடந்து வருவார்கள்.மஹாபெரியவா வேகமாக நடந்து வந்துகொண்டிருந்த பொழுது விணு சக்கரவர்த்தியின் கண்களுக்கு மஹாபெரியவா அம்பாள் காமாட்சியாக தெரிந்திருக்கிறார்.

உடனே விணு சக்கரவர்த்தி தான் கட்டியிருந்த காவி உடையுடனேயே தெருவில் சாஷ்டாங்கமாக விழுந்து மஹாபெரியவா திருப்பாதங்களை இரு கைகளாலும் இரு பாதங்களையும் பிடித்து விட்டார். அந்த நொடி விணு சக்கரவர்த்தி அனுபவித்த இன்பம் சொல்லி மாளாது. அவர் நிறைய சொன்னாலும் நான் சுருக்கமாக அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்து உங்களுக்கு தருகிறேன்." என்னுடைய ஆத்மாவை சுத்தமாக அலசி எடுத்ததை உணர்ந்தேன்.உலகம் அவருக்கு வித்தியாசமாக தெரிந்ததாம்.

இதற்கு பிறகு விணு சக்கரவர்த்தி தனக்கு உதை விழுமோ என்று காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு மஹாபெரியவா அழைப்பின் பேரில் பயந்து கொண்டே சென்றார். அவருக்கு அங்கே நடந்தது என்ன. இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்.

https://www.youtube.com/watch?v=5_UzGDzzBuY&t=1587s

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்