• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-044


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-044

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மஹாபெரியவா கருணா சாகரன் என்பதற்கு

பல நிகழ்வுகள் உதாரணம்

இதோ மேலும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய

மற்றுமொரு உதாரணம்

காஞ்சி மடம்.இளம் காலைப்பொழுது. மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்க்ஷ வந்து நிற்கிறது. ரிக்ஷனாவை ஓட்டி வந்தவர் கலைந்த தலையுடன் லுங்கி கட்டிக்கொண்டு இறங்கினார். ஒரு வயதான முதியவரை பிடித்து கைத்தாங்கலாக இறக்கினார்.

தன்னுடைய அலங்கோல நிலையில் மடத்திற்கு போவதை தவிர்க்கும் பொருட்டு மடத்தில் உள்ள கைங்கர்யம் செய்பவர்களில் ஒருவரை அழைத்து பெரியவரை உள்ளே அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்...

மடத்து சிப்பந்தியும் பெரியவரை உள்ளே அழைத்து சென்று மஹாபெரியவா இருக்கும் இடத்திற்கு அருகில் உட்காரவைத்தார்.. ரிக்க்சா ஓட்டுனரும் மடத்திற்கு வெளியே பெரியவர் திரும்ப வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

பெரியவர் தன்னுடைய வலது கையால் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு கண்களை குழித்துக்கொண்டு பார்த்தார். அவனுக்கு மஹாபெரியவா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு மஹாபெரியவாளே எழுந்து அந்த பெரியவரின் அருகே செல்கிறார்.. மடத்து கைங்கர்யம் செய்யும் மனுஷாளுக்கு இது ஒரு ஆச்சரியமான செயலாக பட்டது. மஹாபெரியவா எப்பவும் இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து போய் ஒருவருக்கு தரிசனம் கொடுத்தது கிடையாது. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

மஹாபெரியவா பெரியவர் அருகில் போய் நின்று கொண்டு இப்பொழுது தெரிகிறதா என்று கேட்கிறார்.. பெரியவர் தெரியவில்லை என்கிறார். பெரியவா இன்னும் சற்று செருகில் சென்று ஓர் ரோஜா மாலையை தலையில் வைத்துக்கொண்டு இப்பொழுது தெரிகிறதா என்று கேட்கிறார்.. தெரியவில்லை என்று சொல்கிறார் பெரியவர்..

அங்கு இருப்பவர்களுக்கு எதுவும் புரியவில்லை.மஹாபெரியவா என்ன கேட்கிறார். பெரியவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை..கடைசியாக மஹாபெரியவா ஒரு ருத்ராக்க்ஷ மாலையை தலையில் வைத்து கொண்டு இப்பொழுது தெரிகிறதா என்று கேட்கிறார்..

அந்த பெரியவர் கண்கள் குளமாக தெரிகிறது சாமி.. அந்த கைலாசத்தில் பரமேஸ்வரனை பாப்பது போலவே தெரிகிறது என்று சொல்லவும் மஹாபெரியவா பெரியவரிடம் கேட்கிறார் சந்தோஷமா என்று..

பெரியவரும் கைகூப்பி வணங்கி விட்டு ரொம்ப சந்தோஷம் சாமி என்று சொன்னவுடன் மடத்து சிப்பந்தி ஒருவரை அழைத்து பெரியவரை ரிக்ஷவில் ஏற்றி அனுப்புமாறு சொல்கிறார். பெரியவரை ஏற்றிக்கொண்டு வந்த ரிக்ஷ ஓட்டுநர் வந்து பெரியவரை மீண்டும் ரிக்ஷவில் உட்காரவைத்து அழைத்து சென்றார்.

மறு நாள் காலையில் காஞ்சி மடத்திற்கு ஒரு செய்தி வருகிறது. மஹாபெரியவாளை தரிசித்த பெரியவர் காலமாகி விட்டதாக.

உங்களுக்கு புரிகிறதா பிரியப்போகும் ஆத்மா கைலாசத்தையும் பரமேஸ்வரனையும் பார்க்கும் ஏக்கத்தில் மஹாபெரியவாளை தரிசனம் செய்ய வந்தது. பெரியவர் உருவில் வந்த...ஆத்மாவின் ஏக்கத்தை புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் ஆத்மா பிரியப்போகும் நேரத்தையும் தெரிந்து கொண்டு ஒரு ஆத்மாவின் ஏக்கத்திற்காக தானே பரமேஸ்வரன் என்பதை பெரியவருக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கும் சொல்லாமல் சொல்லிவிட்டார்.மஹாபெரியவா.

தான் ஒரு காருண்ய மூர்த்தி என்னும் சொல்லுக்கு மேலும் வலு சேர்த்துவிட்டார்

மஹாபெரியவா இன்றும்

நம்முடனே இருக்கிறார்

அழைத்து பாருங்கள்

அடுத்த நொடி உங்கள் முன்

பிரசன்னமாவார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்