• காயத்ரி ராஜகோபால்

இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி


அத்வைதம்

அன்று 68 வது பட்டம் 69 தாவது பட்டத்திற்கு உபதேசம்

இந்த இணைய தளத்தின் இதய அஞ்சலி

69 வது பட்டம் ஜகத் குரு ஜெயேந்திர சரஸ்வதி

ஜெயேந்திர பெரியவா என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டு எல்லோர் இல்லத்திலும் ஜகத் குரு மஹாபெரியவளாவே பார்க்கப்பட்டு வந்த பெரியவா இன்று ஸ்தூலத்தில் இருந்து சூஷ்மத்திற்கு உயர்ந்து விட்டார்.

சன்யாச கோலத்தில் இருந்தாலும் எண்ணங்களில் சமுதாய சிந்தனையே மேலோங்கி இருந்தது.. எவ்வளவு கனவுகள் எத்தனை நினைவுகள்.. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் ஹிந்து மிஷன் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் இந்து மத ஸ்தாபனங்கள் மத ஆராய்ச்சி கோவில் நிர்மாணங்கள் கோவில் புணருத்தாரணங்கள் கோ சாலைகள் இன்னும் எவ்வளவோ நினைவு கூறலாம்.

ஸ்தூலத்தில் இருந்து சூஷ்மத்திற்கு உயர்ந்த ஜகத் குரு புது பெரியவா

மஹாபெரியவா போட்டுக்கொடுத்த வேதத்தின் பாதையில் இறுதி மூச்சு வரை பயணித்த புது பெரியவா ஜகத் குரு இன்று காலத்துடன் கலந்து விட்டார். இந்த இணைய தளமும் அதன் அங்கத்தினர்களும் கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அதே வேளையில் நானும் தனிப்பட்ட முறையில் என் கண்ணீர் அஞ்சலியை பெரியவாளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவருக்கு நாம் செலுத்தும் ஒரே அஞ்சலி பெரியவா காண்பித்து கொடுத்த ஆன்மீக பாதையில் அடி பிறழாமல் நாமும் பயணிப்பதே ஆகும். பாலபெரியவாளின் கையை பிடித்துக்கொண்டு நம்முடைய பயணத்தை தொடர்வோம்.

இன்று . 69 வது பட்டமும் 70 வது பட்டமும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்