• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041

பிரதி புதன் கிழமை தோறும்

K.G.கிருஷ்ணமூர்த்தி மாமா

நானும் பல பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவாளின் அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரம் தவறாமல் புதன் கிழமை தோறும் வாசித்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு சிலஅற்புதங்கள் உள்ளத்தை நெகிழச்செய்ததுண்டு சில அற்புதங்கள் கண்களில் கண்ணீரை வெளிக்கொணர்ந்ததும் உண்டு.

வெகு சில அற்புதங்கள் நம் இதயத்துடன் கைகோர்த்து ஆத்ம சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததும் உண்டு.. ஒரு சில அற்புதம் மட்மே மஹாபெரியவாளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்வும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு “பக்தரின் வாழ்வில் மஹாபெரியவா” தொடரில் கிருஷ்ணா மூர்த்தி மாமாவின் அனுபவமும் ஒன்று. இதைத்தான் இன்றைய தொடரில் அனுபவிக்கப்போகிறோம்.

கிருஷ்ணமூர்த்தி மாமா கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ராஹாரத்தில் வசித்து வருகிறார். மாமாவிற்கு எண்பத்தி ஏழு வயதாகிறது. மாமாவின் அப்பா கோபால ஐயர் அதே ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.

நம்முடைய மஹாபெரியவா சன்யாசம் ஏற்கும் பொழுது அவருக்கு வயது ஏறத்தாழ பதிமூன்று.. சட்டப்படி மஹாபெரியவாளுக்கு வயது பதினெட்டு ஆகும் வரை சட்டப்படி கணக்கு வழக்குகளில் எந்தக்கையெழுத்தும் போட முடியாது.

அப்பொழுது மடத்தில் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த மேனஜர் அவர்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது. மஹாபெரியவாளும் மைனர். ஆகவே நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கணக்கு வழக்குகளை மாமாவின் தந்தை கோபால ஐயர் பார்த்துக்கொண்டிருந்தார்..

வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ கோபால ஐயர் மஹாபெரியவாளிடம் கணக்குகளை காண்பிப்பது வழக்கம். மஹாபெரியவா கத்துவாராம் கோபாலா என்னிடம் கணக்குகளை சொல்லாதே. நீ பார்த்துக்கோ என்பாராம்.. ஆனால் கோபால ஐயர் பிடிவாதமா எல்லாக்கணக்குகளையும் படித்து விடுவாராம்.

மஹாபெரியவாளுக்கு பதினெட்டு வயது முடிந்தவுடன் மடத்தின் எல்லா கணக்குகளையும் மஹாபெரியவளிடம் ஒப்படைத்தாராம். இதனால் மஹாபெரியவாளுக்கு கோபால ஐயர் என்றாலே ஒரு தனி பாசமும் நன்றி உணர்வும் வந்து விடும்.

இன்று மடத்தில் உள்ள அத்தனை கருங்கல் கட்டிடங்களும் கோபால ஐயரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது.

ஒருமுறை கோபால ஐயருக்கு ஒரு விபத்தில் கால்கள் செயல் இழந்து விட்டது. இது மஹாபெரியவாளுக்கும் தெரியும். ஒருமுறை மஹாபெரியவா கும்பகோணம் வந்திருந்த பொழுது கோபால ஐயர் நடந்து வரமுடியாது என்பதை உணர்ந்து மஹாபெரியவா இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரே அடங்கிய பிறகு இரண்டு கைங்கர்ய மனுஷாளை அழைத்துக்ண்டு கோபால ஐயர் வீட்டு வாசலில் நின்று கொண்டு கோபாலா பெரியவா வந்திருக்கேன் கதவை திறடா என்று அழைக்கவும் கிருஷ்ணமூர்த்தி மாமா ஓடோடி வந்து கதவை திறந்தார்.

எல்லோர் படுக்கைகளும் விரிக்கப்பட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். மஹாபெரியவா யாரையும் எழுப்ப வேண்டாம். என்று சொல்லிவிட்டு கோபால ஐயருக்கு அருகில் தண்டத்தை வைத்து அமர்ந்து கொண்டு. "ஒனக்கு ரொம்ப வலிக்கறதடா கோபாலா . பொறுத்துக்கோடா எல்லாம் சரியை போயிடும். என்றாராம்.

சிறிது நேரத்தில் கும்பகோணம் மடத்தில் மஹாபெரியவாளை காணவில்லை என்ற செய்தி தீ போல பரவ ஆரம்பித்தவுடன் இறுதியில் மஹாபெரியவா இருக்குமிடம் தெரிந்து கொண்டு கோபால ஐயரின் வீட்டிற்கு முன்னாள் யானைகள் திருச்சின்னம் ஊதுபவர்கள் எல்லோரும் வந்து விட்டனர்.

இப்படிப்பட்ட கோபால ஐயர் ஒரு நாள் சிவலோக பதவி அடைந்து விட்டார். இந்தச்செய்தியை மஹாபெரியவாளிடம் சொன்னபொழுது மஹாபெரியவா கண்களில் கண்ணீருடன் "என் கோபாலன் போய்ட்டானா” என்று அழ ஆரம்பித்து விட்டாராம்.

ஒரு சன்யாசி அத்தனை இந்திரியங்களையும் நிக்கிரஹம் செய்த பிறகு அழலாமா ஆனால் அழுது விட்டார். ஒன்று புரிகிறதா உண்மையான பாசத்திற்கு சன்யாசி தெரியுமா சன்யாச இலக்கணம் தெரியுமா. தெரிந்ததெல்லாம் அன்பும் பாசமும் மட்டுமே. காலம் தாழ்த்தாமல் இந்த காணொளியை காணுங்கள்.

நான் இங்கே உங்கள் முன்னால் தெளித்திருப்பது ஒரு சிறு துளி மட்டுமே இது சாகாரத்தின் ஒரு துளி மட்டுமே. சாகரத்தில் மூழ்க வேண்டுமா காணொளியை காணுங்கள்

https://www.youtube.com/watch?v=VHecn1T7qKY

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்