• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச திருத்தலம் திருவாழி-திருநகரி கோயில்கள்


எங்களை ஆளும் ஈசா குரு பூஜை வேண்டுதல்களுக்கு கேட்டதையும் தாண்டி கொடுக்கிறாயே நாங்கள் என்ன கொடுக்கமுடியும் உனக்கு உன் தாள் பணிந்து நமஸ்காரம் செய்கிறோம் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொள் ஈஸ்வரா

திவ்ய தேச திருத்தலம்

திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி கோவில் கோபுரம்

திருவாழி-திருநகரி கோயில்கள் தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இது ஒரு ரெட்டை கோவில்கள் ஆகும். வைணவ நூற்றி எட்டு வைணவ தலங்களில் இந்த கோவில்களும் அடக்கம்.

பெருமாள் தாயாருடன்

இந்தக்கோவில்கள் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்து.

திருவாழி கோவிலில் அழகியசிங்கபெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

திருநகரியில் கல்யாண ரங்க நாத பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

பெருமாள் தாயார் திருமஞ்சனம்

திருவாழி திருத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது இங்கு தாயார் பூர்ணவல்லி நாச்சியார். திருநகரி ஸ்தலம் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்றது. திருமங்கையாழ்வார் இங்கு தான் அவதரித்தார். பெருமாள் பெயர் வேத ராஜன் தாயார் பெயர் அமிர்த வள்ளி நாச்சியார்..

கோவில் விழாக்களில் பவனி வரும் பெருமாள் தேர்

திருவிழாக்கள் : இங்கு ஆண்டு தோறும் தேவராஜ புரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழி மறித்து மந்திர உபதேசம் பெற்ற விழா நடைபெறும்..தை மாதத்தில் திருநாங்கூர் திவ்ய தேசத்தில் பதினோரு திவ்ய தேசங்களில் இருந்து உற்சவர் கருட வாகனத்தில் இங்கு சேவை சாதிப்பது வழக்கம்..இதை திருநாங்கூர் கருட சேவை என்பார்கள்..

இந்த சமயத்தில் திருமங்கையாழ்வாரையும் அவரது நாச்சியாரான குமுதவல்லி தாயாரையும் ஒரு பல்லக்கில் ஏற்றி திருநாங்கூர் பதினோரு கோவில்களுக்கும் அழைத்து செல்வது வழக்கம்.அப்பொழுது நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடுவர்..

திருவாழி திருநகரி பெருமாள்

திருவாழி திருநகரின் அருகே உள்ள திருநாங்கூர் ஸ்தலத்தில் வருடம் தோறும் நடக்கும் கருட சேவை மிகவும் விசேஷமாகும்.இங்குள்ள எல்லா திவ்ய தேசங்களுமே ஒரு மனதை கொள்ளை கொள்ளும் கிராமியசூழலில் அமைந்துள்ளது.

உங்கள் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் இங்கு வேண்டிக்கொண்டால் பிரார்த்தனைகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கும்.. ஒரு முறை உங்கள் குடும்பத்துடன் இந்த கோவில்களுக்கு சென்று வாருங்கள். வாழ்க்கையில் இன்னல்கள் அகன்று மனம் தெளிவு பெற்று குறையாத வளத்தோடு வாழுவீர்கள்.

பயணம் இனிதே அமைய மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்