• சாணு புத்திரன்

ஸ்ரீகுருகானம்


பெரியவா சரணம்

சென்னைக் கபாலீச்சுரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ள இந்த பொன்னான நேரத்தில் காஞ்சிப் பொக்கிஷமாம் கருணாகரனின் மஹிமைதனை ஸ்மரணை செய்யப் போகின்றோம் என எண்ணுகையில்... மனம் ஆனந்தமாக கானம்.

பாடத் துவங்குகிறதாம். "நீலக்கடலின் ஓரத்தில் நீதான் இன்பக் காவியமாம்.." என்ற கானத்தைக் கேட்டதாலோ மனம் அதே ராகத்திலே பாடலை பாடுகிறதோ..?!!!

சங்கரம் போற்றி! #ஸ்ரீகுருகானம் காஞ்சித் திருநகர் மகுடத்தில் காம கோடி பீடத்தில் கருணைத் தேவன் உறைகின்றான் கனிவாய் அருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) மனமும் தூயந்தே மகிழ்வுய்ய மறைசேர் பொருளாய் அருள்கின்றான் மன்றம் வந்தோர் துயர்களைந்தே மகிழ்வாம் அருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) நிலையா வாழ்வும் நிறைவுய்ய சிலையாய் இருந்தே அருள்கின்றான் சிறப்பாய் வாழ்வும் அமைந்திடவே சிவமாய் அருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) திருவைந் தெழுத்தில் உறைபவனாய் திரையோர் வாழ்ந்திட அருள்கின்றான் விந்தை வாழ்வில் வளம்புகவே எந்தை அருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) செஞ்சடை மதியன் சிவரூபன் செகத்குரு சந்திர சேகரனாம் அம்பிகை போலே அதிரூபன் அடியார்க் கருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) மேதினி வெம்பகை மறந்திடவே வேனிற் குளிரென அருள்கின்றான் சீர்மிகு செவ்வறம் ஓங்கிடவே சேயோர்க் கருளைப் பொழிகின்றான் (காஞ்சி…) இன்னல் போக்கிடும் ஈசனுமாய் இறையோன் அருள்தர வேண்டுதலாய் இனிதாய் கானம் பாடிடவே இங்கெமக் கினியருள் பொழிகின்றான் (காஞ்சி…) ஆம். அருள்வதற்காகவே அவதரித்த கருணாகரானந்தமூர்த்தியாச்சே! அவர் அருளாலே அவர் தாள் வணங்கி அவருடைய கருணையாலே ஆனந்தமாக வாழ்வோமே! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


47 views