• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-046


பேசும் தெய்வம் மஹாபெரியவா

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-046

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

நாம் பேசினால்

மஹாபெரியவாளும் நம்மிடம் பேசுவார்

அவருக்கு தேவை நம்முடைய உருகும் பக்தியும்

அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டுமே

தன்னுடைய பக்தனின் நியாயமான கோரிகைகள் எதுவாக இருந்தாலும் மஹாபெரியவா கருணையுடன் காது கொடுத்து கேப்பார் என்பது சத்தியம் என்பதற்கு இந்த அற்புதம் ஒரு உதாரணம். வாருங்கள் இனி உங்களை அற்புதத்திற்குள் அழைத்து செல்கிறேன்.

மும்பையில் கணபதி ராம் என்னும் ஒரு பக்தர். இவர் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். இவர் எப்பொழுதும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் மஹாபெரியவாளிடம் சென்று உடனே பேசிவிடுவார். காஞ்சிக்கு வந்து அல்ல. அவர் வீட்டிலேயே இருக்கும் மஹாபெரியவாளிடம். இவர் பேசி அடுத்த சில நிமிடங்களில் இவர் மனது லேசாகிவிடும். பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்து விடும்.

ஒரு முறை கணபதி ராம் அவர்கள் தன்னுடைய மனைவியின் உடல் நிலையை சரி செய்யவும் தன்னுடைய வியாபார பிரச்சனைகளுக்கும் ஒரு மாதம் சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தம்.

கணபதி ராம் தினமும் உலர்ந்த திராட்சை பழங்களை வைத்து மஹாபெரியவாளுக்கு நேவேத்யம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஒரு மாதத்திற்கு தன்னால் நிவேத்யம் செய்ய இயலாது என்பதால் மொத்தமாக ஒரு மாதத்திற்கு வேண்டிய உலர் திராக்ஷைகளை ஒரு பத்திரத்தில் வைத்து மஹாபெரியவாளிடம் கொண்டு சென்றார்.

இந்த நிவேத்திய பாத்திரத்தை மஹாபெரியவா முன் வைத்து விட்டு பேச ஆரம்பிக்கிறார்.

"பெரியவா அடுத்த ஒரு மாதத்திற்கு நான் இங்கு இருக்கமாட்டேன். ஆகவே என்னால் உங்களுக்கு அன்றாடம் நேவேத்யம் செய்ய இயலாது. அதற்காக ஒரு மாதத்திற்கு உங்களுக்கு தேவையான நேவேத்ய திராட்சைகளை இந்த பாத்திரத்தில் வைத்து இருக்கிறேன். பெரியவா. நீங்கள் தினம் இந்த திராட்சைகளை நான் நேவேத்யம் செய்ததாக தினமும் நினைத்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் சீக்கிரம் திரும்ப வந்து விடுவேன்.நான் செல்லும் பிரயாணம் நல்ல முறையில் அமைந்து என் மனைவியின் உடல் நலமும் நன்றாக தேற வேண்டும். எனக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ பெரியவா என்று சொல்லி கிளம்பி விட்டார்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து மனைவியின் உடல் நலமும் நன்றாக தேறி மும்பையில் தன் வீட்டிற்கு வந்து விட்டார் கணபதி ராம். வந்தவுடன் தன்னுடைய பூஜை அறைக்கு சென்று மஹாபெரியவாளிடம் எல்லாம் பேசிவிட்டு நான் வைத்த பிரசாதத்தை சாப்பிட்டர்களா என்று கேட்டுக்கொண்டே பிரசாதம் வைத்த பாத்திரத்தை திறந்து பார்த்தால் ஒரு திராக்ஷை கூட இல்லை.

கணபதி ராம் கண்களில் கண்ணீருடன் “நான் பேசியதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தீர்களா பெரியவா. உங்களுக்கு நேவாத்தியம் சரியாக இருந்ததா பெரியவா” என்று கேட்டார். இதை நாமும் சற்று யோசிக்கலாமே.

இதில் இருந்து ஒன்று புரிகிறது நம்முடைய உண்மையான பக்திக்கும் நம்பிக்கைக்கும் மஹாபெரியவாசெவி சாய்ப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய செயல்கள் மூலம் நமக்கு பதில்களையும் அளித்து கொண்டிருக்கிறர் என்பதற்கு இந்த ஒரு அற்புதம் உதாரணம்.

உலகத்திற்கு வேண்டுமானால்

மஹாபெரியவா சித்தி ஆகியிருக்கலாம்

ஆனால் பக்தனை பொறுத்த வரை

இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்