• சாணு புத்திரன்

ஸ்ரீகுருகானம்


பெரியவா சரணம். ஜன கண மன... மெட்டில் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களால் முருகன் பெயரில் எழுத பட்ட பாடல் ஒன்றை படித்தேன்... அடியேனின் மகன் படிக்கும் பள்ளியிலே ஓர் விழாவுக்குச் சென்றிருந்த போது தேசிய கீதத்தினைக் கேட்டு இன்புற்று, அடியேனும் நின்று தேசத்தை வணங்கிப் போறறிப் பாடி மரியாதை செலுத்தினேனல்லவோ... அதன் தாக்கமாக இந்தக் குழந்தையின் மனம் அந்த பெறாது பெற்ற பெற்றோனாம் அம்மையப்பன் ஆனந்த வரத மூர்த்தி உம்மாச்சீயைப் பாடத் தொடங்கிட விழைகிறதாம்... படித்து இன்புற்றவர் வாழ்த்தைப் பெறுகின்ற பொழுதிலே, எவரேனும் இம்முயற்சியை தவறாகக் கொண்டு இந்த பித்துக்குளியைத் திட்டினாலும் ஏற்கும் மனோபாவத்தோடு பகிர்கின்றேன். சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம். #ஸ்ரீகுருகானம் ஜய ஜய சங்கர காஞ்சிய மா'தவ சசிசே கரகுரு நாதா! செந்தாள் பணிந்து வேண்டுவ ரெவர்க்கும் சிறப்புர வாழ்ந்திட வரம் தா! விந்திய ஹிமாசல கங்காதாரா! கருணா சாந்தஸ்வ ரூபா! குருபர காஞ்சிய நேயா! குவலயம் காத்தருள் தேவா! தவ முனி வரர் பணி தீரா! ஹர ஹர சந்திர சேகர குருவே பதம் பணிந்தோம் எமை கா! வா! நிதமே... ஜயமே... சிவமே... சந்திர சேகர வரமே! பேச்சே சரிவர வராத வயதிலே, ஓட்டாஞ்சில்லிக்கு அபிஷேகம் பண்ணி, சந்தன குங்குமம் இட்டு, கிழிச்சு வச்ச பேப்பர் துண்டுகளாலே அர்ச்சனை செய்கிறேன் பேர்வழின்னு, "ஓங் குண்டாய நமகா.. பாசாய நமகா..." ந்னு பக்தி பண்ணிய நாட்களுக்கு அடியேனை இன்றைய கானம் இட்டு சென்றது. உங்களுக்கு..?!!! பெரியவா... பெரியவா... அவர் அருளாலே அவர் தாள் வணங்குகிறோம். Periyava Anthem-க்கு வெகு இனிமையாக பாடலைப் பாடிய Lohitha Swaminathan மற்றும் மிக நேர்த்தியாக அபினயம்.பிடித்துக் காட்டி நம்மை மனம் நெகிழச் செய்து ஐயனின் ஸ்மரணையை அகந்தனிலே நிறைவித்த Miruthula Jegadesan அவர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் ஆசிகளையும் வழங்குவோமே! குருவுண்டு - பயமில்லை : நிச்சயம்! குறையேதும் இனியில்லை: சத்தியம்!

https://www.youtube.com/watch?v=-6AVcrFQomQ&feature=youtu.be

பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


106 views