• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச திருத்தலம் நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்)


திவ்ய தேச திருத்தலம் நாதன் கோயில்

(நந்திபுர விண்ணகரம்)

நந்திபுர விண்ணகரம் கர்ப கிரஹம்

செல்லும் வழி: நாதன் கோவில் என்ற திரு நந்திபுர விண்ணகரம் கும்பகோணத்திற்கு தெற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.புராண காலத்தில் இந்த கோவில் செண்பகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி நாதன் கோவில் முடியும் வரை உள்ள பகுதியே அந்தக்காலத்தில் செண்பகாரண்யம் என்று அழைக்கப்பது.

நந்திபுர விண்ணகரம் பெருமாள் தாயாருடன்

மூலவர் : வீற்றிருக்கும் கோலத்தில் ஜெகநாதர்

தாயார்: அமர்ந்த திருக்கோலத்தில் செண்பக வள்ளி தாயார்

தீர்த்தம்: நந்தி தீர்த்த புஷ்காரணி

விமானம்: மந்தார விமானம்

கோவில் சிறப்பு: காளமேகப்புலவர் இந்த ஊரில்தான் பிறந்தார். இந்தக்கோவில் தக்க்ஷிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்தலவரலாறு: ஒருமுறை பூதங்களின் தலைவர் நந்தி தேவன் ஸ்ரீவைகுண்டத்திற்குள் நுழைய முற்பட்டார். அப்பொழுது அங்கு காவலுக்கு இருந்த துவாரபாலகர்கள் தடுத்தும் கேட்காமல் உள்ளே நுழைந்தார் நந்தி தேவர். கோபம் கொண்ட துவாரபாலகர்கள் உங்களுடைய உடம்பில் வெப்பம் ஏறி அந்த சூட்டினால் துன்புறுவாய் என்று சாபம் இட்டனர். நந்தி தேவர் துடித்து போனார்.

உண்டனே இதற்கு பரிகாரம் வேண்டி சிவபெருமானை அணுகினார். சிவபெருமானும் செண்பகாரண்யம் சென்று அங்கு மஹாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து சாபம் தீர்த்துக்கொள் என்று சிவ பெருமான் சொல்ல நந்தி தேவரும் செண்பகாரண்யம் சென்று விமோச்சனம்பெற்றார்.

நந்திபுரவிண்ணகரம் தாயார்

தான் இங்கு வந்து மஹாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து தனக்கு சாப விமோச்சனம் கிடைத்ததால் தன்னுடைய நினைவாக இந்த செண்பகாரண்யத்திற்கு நந்திபுரம் என்ற பெயரும் இங்குள்ள தீர்த்தம் நந்தியின் பெயரால் நந்தி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிது.

பிரார்த்தனை: முன்னோர்கள் சாபம் பிதுர் சாபங்கள் கடன் தொல்லை நாட்பட்ட நோய்கள் குடும்பம் ஒன்று சேர கோபம் தனியவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரங்கள் வாங்கி சாத்தலாம். சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை தயிர் சாதம் செய்து பெருமாளுக்கும் தாயாருக்கும் நிவேத்யம் செய்து மற்றவர்களுக்கும் விநியோகம் செய்யலாம்.

உங்கள் பயணம் சிறக்கட்டும். வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் மங்காத செல்வம் பொங்கட்டும். நானும் உங்களுக்காக மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்