• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச திருத்தலம் தில்லை நகர் திருச்சித்ரகூடம் கோவில்


திவ்ய தேச திருத்தலம்

தில்லை நகர் திருச்சித்ரகூடம் கோவில்

சிதம்பரம்

கோவிந்தராஜப்பெருமாள் தம்பதி சமேதராய்

பெருமாள்: கோவிந்தராஜன்

தாயார் : புண்டரீகவல்லி

விமானம்: சாத்வீகம்

கோவிந்தராஜப்பெருமாள்

தீர்த்தம்: புண்டரீக புஷ்காரனி

ஸ்தல புராணம்: நாரத மகரிஷிக்கு சிஷ்யரான புண்டரீக மகரிஷி இங்குள்ள புஷ்காரனையில் உள்ள ஏராளமான தாமரை மலர்களை பறித்து கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்பதால் அதன் கரையிலேயே அமர்ந்து ஸ்ரீமன் நாராயணனை நோக்கி தவம் செய்தார். தவத்திற்கு மனம் இறங்கி ஸ்ரீமன் நாராயணன் மகரிஷிக்கு தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

தில்லை நடராஜர் கோவில் உட்புறம்

மகரிஷியும் தனக்கு எந்த வரமும் வேண்டாம். ஆனால் இங்கு உன்னை தரிசனம் செய்ய வருபவர்களுக்கு பூர்ணமாக அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.நீ பக்தர்களுக்காக தவம் செய்து வரங்களை பெற்றதால் இந்த ஸ்தலம் உன் பெயரிலேயே புண்டரீக புரம் என்றும் இந்த புஷ்காரனி புண்டரீக குளம் புஷ்காரனி என்று அழைக்கப்படும்.என்று அருள் செய்தார்

செல்லும் வழி: சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி பிறகு அங்கிருந்து பேருந்தில் செல்லலலாம். பேருந்து வசதிகள் நிறையவே இருக்கிறது.

தில்லை நடராஜர் கோவில் குளம்

சிறப்புக்கள் : நூற்றி எட்டு தெய்வ தேசங்களில் திரு சித்திரகூடமும் அடங்கும். சிதம்பரம் தில்லை நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் கோவில் சித்ரகூடம் .பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கும் ஸ்தலம் சிதம்பரம்.

சுதர்சனர்

வழிபாட்டு: காலை 6. 00 முதல் 12.00 வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை.

தொலை பேசி : +91-4144-222552 – 9894069422

பிரார்த்தனைகள் : உங்கள் மனத்தூய்மைக்கும் ஆத்மார்த்தமான எண்ணங்களுக்கும் புனிதமான செயல்களுக்கும் இங்கு வேண்டிக்கொள்ளலாம் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறி நீங்கள் ஒரு புனித ஆத்மாவாக மிளிர கோவிந்தராஜ பெருமாளையும் மஹாபெரியவாளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

உங்கள் பயணம் இனிதே நிறைவேற என் வாழ்த்துக்கள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்