• சாணு புத்திரன்

குரு கவிதை


பெரியவா சரணம். உயர்ந்த.மனிதமொன்றின் ஓயாத தவக்கோலம். உள்ளிருக்கும் ஆன்மாவை ஒளிவிளங்கக் காட்டும் உன்னதத் திருக்கோலம். வாழ்க்கைச் சக்கரம் வளையாது சுழலவென குவித்தக் கரங்களில் குவலயம் சிறக்கவென சக்கரத்து நிழலனில் சக்கரம் ஏந்தாத மா'தவம். உலகோர் வாழ்வுக்காய் தரணியெங்கிலும் தருமம் ஓங்கிட நடையாய் நடந்த நடைராசப் பெருந்தெய்வம். அண்டிவந்தோர்க் கெல்லாம் அருள்வதற்கெனவே ஆசார்ய ரூபம் கொண்டு அவதரித்த சிவப்பேரருள். அம்பிகையாள் ஒருபாதி அங்கையன் மறுபாதி இருவளமும் ஒன்றாகி இருவினை போக்கி நலமளிக்க வந்த நந்தவனப் பேராண்டி. சங்கம் வளர்த்து சந்ததி விளங்கச் செய்த சங்கமேச்வர திருவருட்சோதி. தஞ்சமென சரண்புகுந்தோர் அஞ்சலதைப் போக்கி நன்செய் நறுவளமீயும் நங்கைத் தலப் பேராசான். நிந்திப்பவர்க்கும் கூட நின்றருளும் நிலைத்த அருட்தெய்வம். நின்னுரு ஸ்மரிப்பதற்காய் பொன்னெழுத்துக்களீந்த புன்னகைப் பொன்னகையாள் தமிழன்நைத் தாள் பணிந்து கச்சியம்பதி மேவி கனியருளைப் புரிகின்ற நின் கழலடியில் தஞ்சம் என சரண்புகுந்தோம் தயாபரா! பஞ்சம் நீங்கிடவும் நெஞ்சம் மகிழ்ந்திடவும் நல்லாசி அருளோடு நயமான நல்வாழ்வும் அருள்வாய் கச்சி நாயகனே! பெரியவா சரணம். பெரியவா சரணம். ஸ்ரீமஹாபெரியவா அபயம். எல்லோருக்கும் விளம்பி வருடத்திய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காதங்களுடன் சாணு புத்திரன்.