• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046

பிரதி புதன் கிழமை தோறும்

அடையபலம் ராமகிருஷ்ண தீக்ஷதர்

நமக்கெல்லாம் தெரிந்தது மஹாபெரியவா ஒரு தம்பதிகளுக்கு குழந்தையாக பிறந்து வளர்ந்து பால்யத்தை எட்டும் முன்னே காஞ்சி மடத்தின் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியாக பதவி ஏற்றார் என்பதுதான்.

ஆனால் ரககிருஷ்ண சாஸ்திரிகள் சொல்லுகிறார். அந்த பிரம்மமமே மஹாபெரியவா வடிவத்தை எடுத்துக்கொண்டு கலி காலத்தில் துன்பத்தில் அல்லல் படும் ஆத்மாக்களையும் மறைந்து கொண்டிருக்கும் வேதங்களையும் பரிபாலனம் செய்வதற்கு எடுத்த அவதாரம் என்று. அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.

வயது ஆகி விட்டாலும் மாமா உச்சரிக்கும் வார்த்தைகள் நறுக்கு தெறித்தாற் போல் இருப்பதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகத்திற்கே தெரிந்த அப்பய்ய தீக்ஷதர் பரம்பரையில் வந்தவர்.

மாமா பெரும்பாலும் மஹாபெரியவா எப்படி வயதிற்கு ஏற்றாப்போல் புராணங்களையும் இதிகாசங்களையும் சொல்லிக்கொண்டு வருவார் என்று சிலாகித்து பேசி இருக்கிறார்.

ஒரு முறை இராமாயணத்தில் தசரத சக்கரவர்த்திக்கு ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. இராமாயணத்தில் தர்மத்தின் படி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தான் அரச பட்டம் ஏற்க வேண்டும். ஆனால் தன்னுடைய மனைவி கைகேயிக்கு திருமணத்திற்கு முன் ஒரு சத்தியம் செய்து கொடுத்து விட்டார். கைகேயிக்கு பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு அரச பட்டம் கொடுக்கிறேன் என்று .

இப்பொழுது தசரத சக்கரவர்த்திக்கு முன் இருக்கும் இரண்டு விஷயங்கள்:

தர்மத்தின் படி செல்வதா? இல்லை கைகேயிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதா? இறுதியில் தர்மம் காப்பாற்றப்பட்டது. எப்படி என்பதை இந்த காணொளியில் காணுங்கள்.

இதே போல் மஹாபெரியவா எப்படி தர்மத்தை காப்பாற்றினார் என்பதை ஒரு நிகழ்வு மூலம் மாமா சொல்கிறார்.. மாமசொன்னது இதுதான் கேளுங்கள்.

ஒரு முறை மஹாபெரியவா திருமலைக்கு செல்கிறார்.. திருமலையில் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு என்று முன்னுரிமை உண்டு. சில சலுகைகளும் உண்டு. மஹாபெரியவாளுடன் பதினைந்து பேருக்கு மேல் சென்றிருந்தனர்.

அப்பொழுது அங்கே ஒரு செக்யூரிட்டி நின்று கொண்டு இருந்தார். மஹாபெரியவா அவரிடம் எத்தனை பேர் உள்ளே செல்லலாம் என்று கேட்டார்.. அதற்கு உங்களுக்கு ஒரு கட்டுப்படும் கிடையாது. நீங்கள் எல்லோருமே உள்ளே சென்று தரிசிக்கலாம் என்று செக்யூரிட்டி சொன்னார்.

அதற்கு மஹாபெரியவா அதெல்லாம் வேண்டாம்.. உள்ளே ஒரு சமயத்தில் இந்த சிறப்பு நுழை வாயிலில் எவ்வளவு பேர் செல்லலாம் என்று சொல். நான் தர்மத்தை காப்பாற்ற வேண்டும்.

உன்னை தர்மத்தின் படி நடக்க நான் இடையூறாக இருந்தால் உன்னை தர்மத்தின் படி நடக்காதபடி செய்த பாவம் எனக்கு.. நீயும் பாவம் செய்கிறாய். நானும் உன்னை பாவம் செய்ய தூண்டுகிறேன். அது தப்பு என்று சொல்லிவிட்டு,

தன்னுடன் புது பெரியவா இன்னும் நன்கு பேரை மட்டும் உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டு மற்றவர்களை அங்கேயே வெளியே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே தரிசனத்திற்கு சென்றார். எப்படி மஹாபெரியவா காப்பாற்றிய தர்மம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=QfIWym3b6-4

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்