• சாணு புத்திரன்

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி ஐயனின் எந்தவொரு தரிசனமும் அடியவனின் மனத்திலிருந்து உணர்வுகளை அள்ளியெடுத்து வலிக்கொணர்ந்து ஆனந்தத்தைத் தந்துவிடுகிறது. எழுத்தும் சரி; கானமும் சதி; புதியதாக உருவாகமுடியுமோ? அதே ஏழு ஸ்வரம்.. அதே ராகங்கள்; தாளங்கள்... எப்போதோ-எங்கேயோ கேட்டது தாம்... அதன் தாக்கத்திலே உருவாவதே அமுதகானமாகிறது. அவ்வண்ணமே அடியேனின் எழுத்துக்களும். இப்படியாக ஒரு புதியது உருவாக ஏதோ ஓர் பழையது உதவுகிறது எனலாமோ? ஆக்கம் ஐயனின் அனுக்ரஹத்தினால் தாமே! இயங்குவது கடையேன் எனினும் இயக்குவது ஐயன் தானே! சங்கரா! இதனையே பெரியோர்கள், அவனருளால் அவன் தாள் வணங்கி என்றனரோ! மஹாபிரபு! அனைவருக்காகவும் அனைத்தும் கேட்க எண்ணினேன்...அதுவாக வந்தது ஓர் ப்ரார்த்தனை. இதனை அள்ளி ஏற்றுக்கொண்டு எம்மவர் யவரையும் அனுக்ரஹியுங்கள் ஸ்வாமீ! ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர... தேன்பாயும் பாலாற்றங் கரையில் மூர்த்தம் தீராதநோய் தீர்க்கும் புனிதத் தீர்த்தம் திருவான பேரிறையாள் மேவுந் தீர்க்கம் உருவேறிப் பக்தியினால் உன்னைச் சுற்றும் ஏராளம் பக்தர்களும் போற்றிப் பாடும் எழிலான பட்டுமணற் கோட்டம் மேவுந் திரிசூல நாயகனின் திருஆன அவதாரீ! சேமமுற யாம்வாழ அருட்பொழியும் குருநாதா! மூர்த்திதலம் தீர்த்தமெனும் மூன்றும் ஒன்றாய் மூவருக்கும் மேலான இறையோள் உருவே! அறிவுதந்தே ஆற்றலுடன் அழகுந் தாராய்! ஆடையணி யாபரணப் பொருளுந் தாராய்! செறிவுடனே நிறைவான செல்வந் தாராய்! சீரான வாழ்வமைத்துச் சிறப்புந் தாராய்! அணுபொழுதும் உனைமறவா எண்ணமுந் தந்தெமக்குத் துதிபாடி யுனைபோற்றும் வரம்பலவும் கூட்டித்தாராய்! உனதருளால் உம் தாள் வணங்கிப் போற்றுகின்றோம் பெருமானே! என அனைவருமாக ஒன்றுகூடி ப்ரார்த்திப்போம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


76 views