• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046

பிரதி புதன் கிழமை தோறும்

திருமதி திரிபுரசுந்தரி

நமெக்கெல்லாம் நன்கு அறிமுகமான பெயர் கீ..வ. ஜெகநாதன்.. தன் வாழ்க்கையே தமிழுக்காக அர்ப்பணித்தவர் என்பது நாடே அறிந்த விஷயம்... இவர் தமிழுக்காக செய்த தொண்டு அளப்பற்கரியது.. கீ.வா.ஜா அவர்களின் மருமகள் தான் திருமதி.திரிபுர சுந்தரி.

மாமியின் வீட்டிலும் எல்லோரும் மஹாபெரியவா பக்தர்கள்.. கீ.வா.ஜா அவர்களும் மஹாபெரியவாளும் பக்தர் ஜகத் குரு என்ற உறவையும் தாண்டி மஹாபெரியவாளையும் கீ வா ஜா வாயும் நெருக்கமாக இணைத்தது தமிழ் மொழி தான்... இருவரும் பல நாட்கள் நேரம் போவது தெரியாமல் விடிய விடிய பேசிக்கொண்டிருந்த நாட்களும் உண்டு.

இனி திரிபுரசுந்தரி மாமியின் அனுபவங்களை கேட்போம்.

மாமி திருமணம் முடிந்து கீ வா ஜா வின் வீட்டிற்கு மருமகளாக வந்த பின்பும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் காஞ்சிபுரத்திற்கு சென்று மஹாபெரியவாளை தரிசனம் கண்டு விட்டு வருவது வழக்கம்..

ஒரு முறை ஒரு மாலை ஏழு மணி. சுமாருக்கு மாமி மடத்திற்குள் நுழைகிறாள். மஹாபெரியவா ஜாடையில் காண்பித்து கீ வா ஜா வின் மருமகள் வந்திருக்கிறாளா? என்று கேட்கிறார்.

அவளை உடனே வர சொல் என்று ஜாடையில் காண்பிக்கிறார்.. மாமி வந்தவுடன் உட்கரசொல்லி விட்டு கேள்வி கேட்கிறார்." ஆமாம் நீ நெனச்ச மாத்திரத்தில் மடத்திற்கு ஓடி வந்து விடுகிறாயே.. உன்னை ஆத்தில் திடமாட்டாளா? என்று கேட்கிறார்.. அதற்கு மாமியின் பதில்

“திட்டுவாளா இருக்கும்.. என்னை எதுவும் பாதிக்காது . நீங்கள் தான் எல்லாத்தயும் எனக்காக வாங்கிக்கறேளே”. என்று சொல்லி விடுவார்.

மஹாபெரியவா தன்னிடம் யார் அபிமானமாக இருந்தாலும் அவர்களை மிகவும் நெருக்கமாக வாஞ்சையுடன் விசாரிப்பது வழக்கம்.

ஒரு முறை கீ வா ஜா மஹாபெரியவாளை தரிசனம் காணச்சென்றார். அப்பொழுது மஹாபெரியவா கீ வா ஜா விடம் கேட்கிறார்.. நீ வேலை செய்யற கலைமகள் பத்திரிகையில் உனக்கு போதியசம்பளம் கொடுக்கறாளா?

நீ ஒவ்வொரு இடத்திற்கும் போகும் பொழுதும் எப்படிப்போறே?. என்று கேட்கிறார் மஹாபெரியவா... அதற்கு கீ வா ஜா அவர்கள் " நான் ஒரு சைக்கிள் ரிகாஷாவை பிடித்து கொண்டு சென்று விடுவேன் என்றாராம்..

அப்பொழுது மஹாபெரியவா தன்னுடைய கண்களில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே சொன்னாராம்.”உனக்கு என்னாலே ஒண்ணுமே செய்ய முடியல்லையே என்று சொன்னாராம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

மஹாபெரியவா ஆசிர்வாதத்தைதயும் தாண்டி பல வழிகளில் ஆசிர்வாதமும் அனுகிரஹமும் செய்துள்ளார்... இத்தனை செய்தும் தான் ஒண்ணுமே செய்யலை என்று கண் கலங்கி கண்ணீர் விட வேண்டுமானால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

இதைத்தான் கருணை என்பார்களோ?. இன்றைய கால கட்டத்தில் கோவிலுக்கு ஒரு குழல் விளக்கு உபயம் செய்தாலும் விளக்கின் வெளிச்சம் வெளியே தெரியாதபடி தன்னுடைய பெயர் இன்னாருடைய மகன் இன்னாருடைய பேரன் முகவரி எல்லாவற்றையும் எழுதி விட்டு உபயம் செய்த பலனே இல்லாமல் செய்து விடுகின்றனர். மஹாபெரியவாளுக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் எவ்வளவு வித்யாசம்.

எனக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் நேரம் காலம் கருதி இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்..என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த காணொளி உங்கள் சிந்தனையை தூண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை பெருகும். கல் இதயம் கூட கரையும்.

இந்த காணொளியை காணுங்கள்.. அடக்கம் பண்பு பக்தி தெய்வ நம்பிக்கை போன்ற பல விஷயங்கள் உங்கள் இதயத்தை தைத்து உள்ளே சென்று விடும்.. வாழ்க்கையில் சிலவற்றை தவறவே விடக்கூடாது என்ற சில விஷயங்களில் இந்த காணொளியும் ஒன்று... காலம் தாழ்த்தாமல் இந்த காணொளியை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=eJgwkYOTlbk

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்