• காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி


திவ்ய தேச திருத்தலம்

திருக்கண்ணங்குடி

லோகநாயகப்பெருமாள் தாயாருடன்

செல்லும் வழி: தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் சிக்கில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது திருக்கண்ணங்குடி.. .நூற்றி எட்டு வைணவஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று..நாகப்பட்டினத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சிக்கலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

மூலவர் லோகநாயகப்பெருமாள்

கோபுரம்: பரந்த வெளியில் ஐந்து அடுக்கு நிலைகளை கொண்ட கோபுரம்

மூலவர்: லோகநாதப்பெருமாள்.. இவருக்கு ஷ்யாமளமேனி பெருமாள் என்றபெயரும் உண்டு. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி நின்று தரிசனம் கொடுக்கிறார்.

தாயார்: லோகநாயகி தாயார்

ஸ்தல விருக்ஷம்: மகிழம்

தீர்த்தம்: ராவண புஷ்காரனி தீர்த்தம்

திருக்கண்ணங்குடி கோவில் கோபுரம்

ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் வசிஷ்ட முனிவர் இங்கு வெண்ணையால் ஒரு கிருஷ்ணர் விகிரஹம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியால் வெண்ணை உருகாமல் எப்பொழுதும் கிரிஷ்ணராகவே இருந்தது.

ஒரு நாள் உண்மையாகவே கிருஷ்ணர் வசிஷ்டர் இல்லத்தில் புகுந்து வெண்ணை விகிரஹத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு வெளியில் ஓடினார். அந்த சிறுவனை துரத்தி சென்றார் வசிஷ்டர். கிருஷ்ணர் ஓடிய வழியில் சில முனிவர்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் ஓடி வந்தவர் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்பொழுதான் வசிஷ்டரும் அந்த சிறுவன் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார். பிறகு கிருஷ்ணரை அவர்கள் நமஸ்கரிக்க உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றவுடன் அந்த ரிஷிகள் எல்லோரும் நீங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அன்றில் இருந்து கிருஷ்ணரும் அந்த இடத்திலேயே லோகநாதப்பெருமாளாக கோவில் கொண்டார்.

பஞ்ச கிருஷ்ணஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று.

பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்கள்

லோகநாதப்பெருமாள் திருக்கண்ணங்குடி

கஜேந்திர வரத பெருமாள் கபிஸ்தலம்

நீலமேகப்பெருமாள் திருக்கண்ணபுரம்

பக்தவத்சலப்பெருமாள் திருக்கண்ணமங்கை

உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்

திருக்கண்ணங்குடி கோவில் குளம்

பிரார்த்தனை: குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் திருமண தடை தம்பதிகளிடையே புரிதலின்மை உறவுகளில் பிரிவு நீண்ட நாள் வேலையில்லாமல் இருக்கிறீர்களா நீண்ட நாள் தீர்க்கப்படாத உடல் கோளாறுகள் மற்றும் மன நிம்மதி வாழ்க்கையில் பயம் போன்றவைகளுக்கு இங்கே வேண்டிக்கொள்ளலாம்.

வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்குள்ள பெருமாளுக்கு வெண்ணை வாங்கி சாத்தலாம் தயிர் சாதம் செய்து பிரசாதம் செய்யலாம் புளியோதயரை வெண்பொங்கல் போன்றவைகளையும் இங்கு பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யலாம்.

உங்கள் பயணம் சிறக்கவும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறி வாழ்க்கையில் மனஅமைதியும் சகல ஐஸ்வரங்களும் பெற்று வாழ நான் மஹாபெரியவளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்