• காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-047


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-047

பிரதி புதன் கிழமை தோறும்

திருமதி லட்சுமி சுப்ரமணியம்

திருமதி லட்சுமி சுப்ரமணியம் கோவையை சேர்ந்த ஒரு பெண்மணி. இந்த அம்மையாரையும் இவரது குடும்பத்தாரையும் மஹாபெரியவளிடம் கொண்டு சேர்த்தது அறுபத்தி நான்காம் நாயன்மார் என்று மஹாபெரியவளால் அழைக்க பட்ட பிரதோஷம் மாமாதான்...

ஒரு முறை மாமி பிரதோஷ மாமாவின் இல்லத்திற்கு சென்று மஹாபெரியவாளை தரிசித்து விட்டு கிளம்பும் பொழுது மாமா இந்த மாமியிடம் அங்கிருந்த ஒரு மாமரத்தை காண்பித்து இதில் மஹாபெரியவா இருக்கிறார் இந்த மரத்தை சேவித்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் மாமியும் விழுந்து சேவித்தார்..

பிறகு மாமா மஹாபெரியவாளின் அக்ஷதையை கொடுத்து பத்திரமாக ஊருக்கு கிளம்புங்கள் என்று வழியனுப்பி வைத்தார். அந்த சமயம் பார்த்து மாமி ஏராளமான நகைகளை பெட்டியில் வைத்து எடுத்து கொண்டு வந்திருந்தார்.

மாமா கொடுத்த அக்ஷதையை பெட்டியில் வைத்து பூட்டி விட்டு ரயிலில் கோவைக்கு கிளம்பி விட்டார். ரயிலில் பெட்டி காணாமல் போய் பிறகு ஒரு வாரம் கழித்து ஒரு பைசா கூட காணாமல் போகாமல் மாமா கொடுத்த அக்ஷதையுசுடன் எப்படி கிடைத்து என்பதை இந்த காணொளியில் பார்த்தும் கேட்டும் அறிந்து அதிசியுங்கள்..

அற்புதம் இரண்டு

ஒரு முறை மஹாபெரியவா மாமியின் கனவில் வந்து ஒரு நீல நிறத்தில் ஒரு சிறிய மோதிரத்தில் வைக்கும் கல்லை காண்பித்து உன்னுடைய கணவருக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருப்பதால் இந்த நிறக்கல்லை வைத்து மோதிரம் செய்து போடு என்று சொன்னாராம்.

அதே போல் மாமியும் இந்த நீல நிறத்தில் கல் வைத்து மோதிரம் செய்து கணவருக்கு போட்டாராம். பிறகு அந்த ஏழரை வருடமும் கணவருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததாம். ஏழரை ஆண்டுகள் முடிந்ததும் அந்த மோதிரமும் விரலில் இருந்து காணாமல் போய் விட்டதாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. மஹாபெரியவா கனவில் வந்தால் அது கனவு அல்ல. அது மஹாபெரியவா உங்களுக்கு கொடுக்கும் தரிசனம் என்பது புரிகிறதா?

சிறிது நேரமே ஓடக்கூடிய இந்த காணொளியில் அதிசயிக்கும் அற்புதங்கள் ஏராளம் . காலம் தாழ்த்தாமல் காணொளியை பார்த்து மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=TxpWcY4-NTM

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்