• காயத்ரி ராஜகோபால்

குரு பூஜை புஷ்பங்களே உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்


குரு பூஜை புஷ்பங்களே

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

என் உள்ளத்திலும் இல்லத்திலும் கோவில் கொண்டிருக்கும்

நமது பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா பாதுகையுடன்

இன்று உங்கள் வாழ்வில்

ஒரு திருப்புமுனை நாள்

ப்ரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து நீங்கள் செய்யும் மஹாபெரியவா குரு பூஜை உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையும் இனிமையான வாழ்க்கை அனுபவத்தையும் அத்தியாயத்தையும் துவங்கட்டும்.... பிரும்மனுக்கு மட்டுமா இது முஹூர்த்தம்.. உங்களுக்கும் தான் இது ஒரு சுப முஹூர்த்தம்.

மஹாபெரியவாளும் உங்களை தாராளமாக ஆசிர்வதிக்கட்டும்.. நீங்கள் என்னென்ன பிராத்தனைகளை முன் வைத்து மஹாபெரியவாளை உங்கள் இல்லத்திற்கு அழைக்கிறீர்களோ உங்கள் அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும்..

சென்ற நொடி வரை உங்கள் வாழ்க்கை எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் இந்தநொடியில் இருந்து உங்கள் வாழ்வில் ஒரு ஆகாச அமைதியும் ஆத்ம சந்தோஷமும் உங்களிடம் குடி கொள்ளட்டும்..

இந்த நொடியில் இருந்து உங்கள் வாழ்க்கையில் தென்றல் வீசட்டும். இல்லம் மல்லிகை தோட்டங்களாகட்டும். வாழ்கையில் பயம் அகன்று நம்பிக்கை ஒளி வீசட்டும்.. அன்னங்கள் நடை போடும் அழகு நந்தவனம் ஆகட்டும்... குளிர் நிலவின் குளிர்ச்சி உங்கள் இதயத்தையும் குளிர்விக்கட்டும்.

அண்ணபூரணி தேவியும்மஹாலக்ஷ்மியும் காளி தேவியும் ஒரு சேர வாசம் செய்யும் இறை சாம்ராஜ்யமாக மாறட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்