• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -IV-ப்ரியா சுதாகர் தம்பதியினர்


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34

பாகம் -IVப்ரியா சுதாகர் தம்பதியினர்

பிரதி திங்கட்கிழமை தோறும்

கண் இமைக்கும் நேரத்தில்

ஒரு நீண்ட அற்புத காவியத்தை

நிகழ்த்த கூடியவர் மஹாபெரியவா

ப்ரியா சுதாகர் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதும்

ஒரு வாழ்க்கை காவியம் தானே.

சென்ற வாரம் தடைகளையும் தாண்டி மஹாபெரியவா எப்படி தன்னுடைய அற்புதங்கள் மூலம் ப்ரியாவிற்கு வேலையயை வாங்கிக்கொடுத்தார் என்பதை பற்றி பார்த்தோம்.

இந்த வாரம் வேலையில் சேருவதற்கு முன் ப்ரியா எதிர்கொண்ட மற்றுமொரு பிரச்னையை மஹாபெரியவா எப்படி கையாண்டார் என்பதை பார்ப்போம்.

ப்ரியா சேரவிருக்கும் அலுவலகம் ப்ரியாவை தன்னுடைய விசாவை ரத்து செய்வதற்கு அந்த நாட்டின் விசா அலுவலகத்தில் கொடுத்து ரத்து செய்து விட்டு தெரிவிக்குமாறு சொன்னார்கள்.. காரணம் பிரியவின் விசாவை ரத்து செய்தால் தான் தாங்கள் தங்கள் அலுவலகத்தின் மூலம் புதிய விசாவுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இது அந்த அலுவலகத்தின் விதி.

ப்ரியாவும் விசாவை ரத்து செய்ய கொடுத்து விட்டாள். விசா ரத்தும் ஆகி விட்டது.இப்பொழுது தனது அலவலகத்தில் இருந்து புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதுவும் விரைவில் வர வேண்டும்.

இங்குதான் பிரியா சற்று பொறுமை இழந்தாள். காத்திருந்து காத்திருந்து நாட்கள் கடந்தன.. கடைசியில் தன்னுடைய பழைய விசா முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன.. பதட்டம் தொடங்கி விட்டது. விசா முடிவடைந்து விட்டால் அடுத்த நொடி இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்.. அதற்கு மேலும் அங்கு தங்கினால் அது சட்ட விரோதமாகி விடும்.

பிரியவும் சுதாகரும் அன்று மாலை என்னை அழைத்து மேற்கூறிய விவரங்களை சொல்லி மஹாபெரியவாளிடம் என்னை வேண்டிக்கொள்ள சொன்னார்கள்..நானும் சரியென்று மறு நாள் காலை மஹாபெரியவாளிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லி வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.

அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே இல்லை.. ஒரு பிரச்சனை இரண்டு பிரச்சனைகள் என்றால் மனிதர்களாகிய நாம் தாங்கலாம். அடிமேல் அடி விழுந்தால் எப்படி தாங்குவது?. எங்கு போவது?. யாரிடம் முறையிட முடியும்?.

மறு நாள் காலை என்னுடைய வழக்கமான பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா முன் நின்று மற்றவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருந்தேன்.இறுதியில் மஹாபெரியவாளை அழைத்தேன் இனி சம்பாஷணை வடிவில் உங்களுக்காக.

G.R.: பெரியவா, உங்களிடம் எனக்கு ஒரு விங்யபானம். பிரியா சுதாகருக்கு ஒரு பிரச்சனை பெரியவா.

பெரியவா: என்னடா பிரச்சனை அவாளுக்கு.

G.R.: ப்ரியாவிற்கு தான் பிரச்சனை பெரியவா. பிரியா சேரவிருக்கும் அலுவலகத்தில் ப்ரியாவின் விசாவை ரத்து செய்து விட்டு தெரிவிக்குமாறு சொன்னார்கள். ப்ரியாவும் ரத்து செய்து விட்டு அவளது அலவலகத்தில் தெரிவித்து விட்டாள்..

இத்தனை நாட்கள் ஆகியும் ப்ரியாவின் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.இன்னும் நன்கு நாட்கள்தான் இருக்கு. அதற்குள் ப்ரியாவிற்கு புதிய விசா வரவில்லையென்றால் ப்ரியா அங்கு தங்கி இருப்பது சட்டவிரோதமாகி விடும்..

உடனே அவள் இந்தியா திரும்ப வேண்டும். தேவையில்லாத சங்கடம். செலவு. இருக்கும் பிரச்னையில் இந்த பிரச்னையும் சேர்ந்து விட்டால் அவர்கள் தைரியம் இழந்து விடுவார்கள். அவர்கள் இருவரும் குழந்தைகள் பெரியவா. ஆறுதல் சொல்லுகூட அவர்களுடன் பெற்றோர்கள் இல்லை.. இந்த இரண்டு குழந்தைகளுக்கு ஈசன் அருளால் இரண்டு குழந்தைகள். இவர்களுக்கு சமாதானம் சொல்லக்கூட யாருமில்லை. இவர்கள் குழந்தைகளுக்கு எப்படி சாமகானம் சொல்ல முடியும். ப்ரியாவை இந்த சங்கடத்தில் இருந்து மீட்டு வீட்டிலும் அவர்கள் மனதிலும் அமைதியை கொடுங்கள் பெரியவா.

பெரியவா: அவளுக்கு எல்லாம் நாளைக்கு வந்துடும்.. நான் தான் அவா கூடவேஇருக்கேனேடா.அவளுக்கு ஒன்னும் ஆகாது கவலை படாதே.

G.R. இப்போதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு பெரியவா. என்று சொல்லி விடை பெற்றேன்.

மறு நாள் மாலை எனக்கு ப்ரியாவிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. அழைப்பின் விவரம் இதோ உங்களுக்காக.

"மாமா நான் சேரப்போகும் அலுவலகத்தில் இருந்து எனக்கு விசா எடுத்து விட்டார்கள். நான் இனி ஒரு நாளும் நல்ல நேரமும் பார்த்து வேலையில் சேர வேண்டும்..

மஹாபெரியவாளும் நீங்களும் எங்களை குழந்தை மாதிரி பார்த்துக்கொள்கிறீர்கள்.. என் உயிர் மூச்சு இருக்கும் வரை மஹாபெரியவாளை மறக்காமல் இருக்க வேண்டும். எங்கள் பக்தி ஒரு போதும் குறையக்கூடாது".

ப்ரியாவின் பிரார்த்தனை முழுமையாக நிறைவேறியது.. இனி ப்ரியாவின் கணவர் சுதாகரின் அத்யாயம் ஆரம்பிக்க வேண்டும். மஹாபெரியவா எப்படி ஆரம்பித்தார் என்பதை அடுத்தவாரம் காண்போம்.

முக்கியமான தகவல்: பிரியா சுதாகர் அவர்களின் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களின் காணொளி நாளை காலை இணைய தளத்தில் வழக்கம் போல் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

காணுங்கள் கண்டு மஹாபெரியவா அற்பதங்களை சிலாகித்து எழுதுங்கள்

மிகவும் எளிமையான ஆடம்பரமில்லாத

அற்புதத்தை கண்டிருக்கிறீர்களா

இல்லையென்றால் காணுங்கள்

அவர்தான் மஹாபெரியவா

எளிமைக்கு எளிமை

அற்புதத்திற்கு அற்புதம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்