• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -V ப்ரியா சுதாகர் தம்பதியினர்


நீங்கள் எங்களுடன் இருப்பதால்தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம்

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 பாகம் -V

பிரதி திங்கட்கிழமை தோறும்

ப்ரியா சுதாகர் தம்பதியினர்

கற்பனை ஒருவர் வாழ்க்கைக்கு அழகு சேர்க்கிறது

எதார்த்தம் ஒருவர் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது.

அழகும் அர்த்தமும் சேர்ந்தால் வாழும் வாழ்கை நிதானப்படுகின்றது

மஹாபெரியவா என்னும் இறை சக்தி சேர்ந்தால்

வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறது.

இதோ ஒரு வாழும் உதாரணம்

மஹாபெரியவா ப்ரியாவின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்து இன்றும் நொடிப்பொழுதும் கூடவே இருந்து ப்ரியாவின் செயல்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இனி அடுத்தது ப்ரியாவின் கணவர் சுதாகரனுக்கு ஒரு தெளிவான பாதையை காண்பிக்க வேண்டும்... சுதாகர் வாழ்க்கையில் மஹாபெரியவா அடியெடுத்து வைத்த பிறகு சுதாகர் தன்னுடைய சொந்த வியாபாரத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை பற்றி கவலை படமால் வாழ்வில் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்தார்.

அது தான் தன்னுடைய அனுபவத்தை ஆதாரமாக வைத்து ஒரு நல்ல அலுவலகத்தில் வேலைக்கு சேருவது.. பல மாதங்களாக சொந்த வியாபாரத்தை கவனித்து வந்ததால் வேலை தேடும் சந்தையில் தன்னுடைய கால்களை பதிப்பதில் சிலசிக்கல்கள் இருந்தன.

இந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டுமானால் சுதாகர் அந்த நாட்டின் ஒரு தேர்வு எழுதியாக வேண்டும்.. அதற்கு பணமும் செலவாகும். சேமிப்பு முழுவதும் வியாபாரத்தில் உண்டான நஷ்டத்தில் கரைந்து போனது.

தன்னுடைய முயற்சியில் இழந்ததது எவ்வளவோ..பெற்றது ஒன்றுமே இல்லை. காலமும் பணமும் விரயமானது. வயதும் கூடிக்கொண்டே போனது.

கணவன் ஒரு குடும்பத்தின் தலைவன். மனைவிக்கு மனதில் கலக்கமோ பயமோ என்றால் கணவனிடம் முறையிடுவாள். கணவனும் ஆறுதல் வார்த்தைகளை கூறி பயத்தை போக்குவான்..குழந்தைகளுக்கு பயம் என்றால் தந்தையை அண்டி கோழிக்குஞ்சுகள் போல பதுங்கிக்கொள்ளும்.

ஆனால் அந்த தலைவனே கலங்கி நின்றால் அவனுக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?. அந்த நிலையில் தான் சுதாகரும் இருந்தார்.. இங்கு தான் சுதாகர் அழுது முறையிட மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி கூடவே துணைக்கு இருக்கிறது.

மனிதர்களாகிய நமக்குத்தான் வரையறைகள் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் தெய்வத்திற்கு அதெல்லாம் ஏது?. படைப்பவனும் அவனே கொடுப்பவனும் அவனே.சுதாகர் மஹாபெரியவாளிடம் முறையிட தன்னுடைய விடை தெரியாத தேடலுக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது.. எந்த தேர்வு எழுத வேண்டும். அதற்கு உண்டான கட்டணம் எவ்வளவு என்ற தகவல்களை எல்லாம் சேகரித்தார் சுதாகர்.

சேகரித்த எல்லா விவரங்களையும் மஹாபெரியவா முன் பிரியா சுதாகர் இருவரும் அமர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். மஹாபெரியவா இவர்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்தபின் இவர்கள் கருத்து பரிமாற்றங்களில் மஹாபெரியவாளும் பங்கேற்க ஆரம்பித்தார்..

இப்பொழுது இவர்கள் இருவருக்கும் மேல் மஹாபெரியவா தலைமையேற்று தானும் தன கருத்துக்களை சொல்லத்தொடங்கினார். எவ்வாவு பெரிய பாக்கியம். கோவிலில் வழிபடும் இறைவனே குடும்பத்தை தலைமையேற்று நடத்த ஆரம்பித்தார்.. தடைகள் அகன்றன.. பயம் இருக்கும் இடம் தெரியாமல் சென்றது.நினைத்தது நடக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்தது.

சுதாகரும் ப்ரியாவும் கலந்து பேசி ஒரு தேர்வை எழுதுவது என்ற முடிவு செய்தார்கள். அந்த தேர்வு சம்பந்தமாக அவர்கள் வாழும் நாட்டில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதாகர் அந்த கருத்தரங்குக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் அந்தக்கருத்தரங்குக்கு நுழைவு கட்டணமே மிக அதிகம். இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்.

G.R: நானும் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன். " பெரியவா சுதாகர் எழுதப்போகும் தேர்வு சம்பந்தமாக ஒரு கருத்தரங்கு நடக்கப்போகிறது. அதில் கலந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதில் நுழைவு கட்டணம் மிகவும் அதிகம்.

இப்பொழுது இவர்கள் இருக்கும் நிலமையில் ஒவ்வொரு பைசாவும் மிகவும் முக்கியமானது. சுதாகருக்கு ஒரு வழி சொல்லுங்கள் பெரியவா என்ற வேண்டிக்கொண்டேன்.

பெரியவா: மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார். இவாளுக்கு பணத்துக்கு நான் எங்கேடா போவேன்.நானே சன்யாசி.என்றார்.

G.R.: பெரியவா நீங்கள் சங்காபித்தல் என்ன வேண்டும் என்றாலும் . நடக்கும். கொஞ்சம் கருணை காண்பியுங்கள் பெரியவா என்றேன்.

பெரியவா::சரிடா. நான் பார்த்துக்கறேன் என்றார்.

என்ன நடந்தது தெரியுமா?

அந்த கருத்தரங்கு நடத்துபவர்கள் சுதாகரின் அனுபவங்களையும் படிப்பையும் பார்த்து நுழைவு கட்டணம் இல்லாமலே கருத்தரங்கில் பங்கேற்க அனுமதித்தார்கள். நுழைவு கட்டணம் மஹாபெரியவா அற்புதத்தால் இல்லாமல் போனது. நினைத்து பாருங்கள் கையில் பண புழக்கம் இல்லாமல் போனாலும் மஹாபெரியவாளை நெக்குருக வேண்டொண்டால் எதுவும் நடக்கும் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்..

அடுத்தது சுதாகர் தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வுக்கு எத்தனையோ தொகை கட்டணமாக செலுத்த வேண்டும். நிச்சயம் இந்த தொகைக்கு சுதாகர் பல முறை யோசித்தாக விடும்.

யோசித்து பாருங்கள். வியாபாரத்தில் முதல் காணாமல்போனது. மனைவி ப்ரியா அப்பொழுதுதான் வேலைக்கு சேர்த்திருந்தாள். இன்னும் முதல் மாச சம்பளமே வாங்க வில்லை.குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் பணம் கட்ட வேண்டும். இந்த நிலைமையில் தேர்வுக்கு கட்டணம் எப்படி செலுத்த முடியும்.

மீண்டும் மஹாபெரியவாளிடம் சென்று முறையிட்டேன்.

G.R. :பெரியவா, சுதாகர் எழுதும் தேர்வுக்கு பணம் கட்டவேண்டும். அவா இப்போ கட்டமுடியாக நிலையில் இருக்கா.. குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும். இந்த தேர்வுக்கு ஏதாவது பண்ணுங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா: நான் என்னடா பண்ண முடியும். .எல்லாத்துக்கும் என்கிட்டே ஓடி ஓடி வந்துடறே.. சரி போ ஏதாவது பண்ணலாம் என்றார். நானும் மஹாபெரியவாளிடம் என் நன்றியை சொல்லிவிட்டு விடை பெற்றேன்.

ஓரிரு நாட்கள் சென்றன..நானும் மஹாபெரியவா என்ன செய்யப்போகிறார் என்று யோசித்து கொண்டு இருந்தேன். சுதாகரிடம் இருந்து எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. அழைப்பின் விவரம் இதோ உங்களுக்காக.

அவர்கள் வாழும் நாட்டில் அந்த நாட்டின் காவல் துறை இருபத்திநான்கு பேரை தேர்ந்தேடுத்து அவர்கள் எல்லோருக்கும் தாங்களே தேர்வு தொகையை செலுத்தி உதவுவதாக முடிவு செய்தார்களாம்.

காவல் துறை தேர்ந்தேடுத்த இருபத்திநாலு பேரில் சுதாகரும் அடக்கம். உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா. மஹாபெரியவா அற்புதங்கள் காலத்தை கடந்தும் பாயும். பூகோள அமைப்பை தாண்டியும் பாயும். அது தான் பாய்ந்து விட்டது.

சுதாகரும் தேர்வு எழுதலாம். செலவு இல்லாமலேயே. இதை என்னவென்று சொல்லுவது.அற்புதம் என்னும் வார்த்தை மிகவும் சிறிய வார்த்தையாக தெரிகிறது எனக்கு.

கலி யுகத்திலும் இறைவன் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பான் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

அற்புதத்தின் உச்சம்

அடுத்தது சுதாகர் தேர்வு எழுக வேண்டும்.. உலகம் முழுவதும் அந்த தேர்வை எழுத வசதி செய்ய பட்டிருந்தது. இதில் சுதாகர் இந்தியாவை தேர்ந்தெடுத்தார். இந்த வாரம் வியாழக்கிழமை சென்னை வந்தார். சனிக்கிழமையன்று நேற்று தேர்வு நடந்தது.

தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாம். நூற்றி பத்து கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.

சுதாகர் சோர்ந்து விட்டார். மஹாபெரியவா இவ்வளவு கருணை காட்டியும் தன்னால் இந்த தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போய் விட்டதே. என்ற மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று மனதிற்குள் மஹாபெரியவளை நினைத்து கொண்டு "பெரியவா மீதி இருக்கும் நூற்றி நாற்பது கேள்விகளுக்கும் நீங்கள் தான் விடை எழுதுகிறீர்கள். என்ற வேண்டிக்கொண்டு இருக்கும் குறைந்த நேரத்தில் எழுத ஆரம்பித்தார்.. நேரமும் முடிந்தது. தேர்வும் நிறைவு பெற்றது..

சுதாகர் என்ன நினைத்தாராம் தெரியுமா? தன்னுடைய மானம் போவதற்குள் தேர்வு மையத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று.. ஏன் தெரியுமா? தேர்வின் முடிவுகள் ஒரு மாதம் கழித்தோ அல்லது பிறகு ஒரு நாளிலோ வெளி வராது. தேர்வு மையத்திலேயே கணினி கொடுக்கும் தேர்வு முடிவை அறிவித்து விடுவார்களாம்.

அதனால் மானம் போய் விடும் எனவே முதலில் முடிவை தெரிந்து கொண்டு கிளம்பி விடலாம் என்ற முடிவு செய்து காத்திருந்தாராம். முடிவுகள் தெரிய ஆரம்பித்தன.. ஒவ்வொருவரையும் அழைத்து. உங்கள் தோல்விக்கு வருந்துக்கறேன் அல்லது உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்ற சொல்லி தேர்வு முடிவை தெரிவித்து கொண்டு இருந்தனர்.

சுதாகர் தலையை குனிந்து கொண்டே தன்னுடைய பெயர் அழைப்பிற்காக காத்திருந்தாராம்.. பெயரும் அழைக்கப்பட்டது.. குனிந்த தலை நிமிராமல் சுதாகர் முடிவை பெற்றுக்கொள்ள சென்றாராம். சுதாகருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதாம்.

குனிந்த தலை தன்னையும் அறியாமல் ஆச்சரியத்தில் நிமிர்ந்ததாம்..வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அங்கே மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை விண்ணுக்கும் மண்ணுக்கும் பார்த்தாராம் சுதாகர்.

வாழ்க்கை என்பதே

சோதனைகளும் வேதனைகளும் பாதகங்களும் நிறைந்தது தானே

மஹாபெரியவா கமலபாதங்களை பற்றிக்கொள்ளுங்கள்

வேதனைகள் வேரறுக்கப்படும் சோதனைகளுக்கே சோதனை வரும்

பாதகங்கள் பறந்து போகும் வாழ்க்கையில் வசந்தம் வீசும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்