• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-060


கனகதாரா சோஸ்திரத்தால் தங்க மழை கொட்டியது அன்று ஆதி சங்கர அவதாரம் மஹாபெரியவாமுன் இன்றும் கொட்டுகிறது

அதே கனகதாரா சோஸ்திரத்தால் தங்க மழை

இறைவன் மாறவில்லை மனிதன்தான் மாறிவிட்டான்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-060

பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

மஹாபெரியவா காசி யாத்திரை செய்து இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து காஞ்சியை அடைந்தார். அப்பொழுது காமாட்சி அம்மன் கோவில் வழியாக வரும் பொழுது காமாட்சி கோபுரத்தை ஒரு வாஞ்சையுடன் பார்த்தாராம்.

காமாட்சி கோபுரம் அழுது வடிந்து கொண்டிருந்ததாம்.மஹாபெரியவா கண்களில் கண்ணீர் வராத குறை.. அப்பொழுது முடிவு செய்தாராம் காமாட்சிக்கு தங்கத்தால் கோபுரம் செய்ய வேண்டும் என்று..

மடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நாள் காலை அங்கிருந்தவர்களிடம் தன்னுடைய ஆசையை சொன்னாராம்.. எல்லோரும் மஹாபெரியவாளுக்கு அறிவுரை சொன்னார்களாம். வேண்டாம் பெரியவா அதற்கு ஏகப்பட்ட தங்கம் செலவாகும். மிகவும்கஷ்டம் என்று சொன்னார்களாம்.

மஹாபெரியவா மடத்தில் கைங்கர்யம் செய்யும் ஒருவரை அழைத்து தங்க வேலை செய்யும் ஆசாரி ஒருவரை அழைத்து வர சொன்னாராம்.ஆசாரியும் வந்தார். மஹாபெரியவா விஷயத்தை சொன்னாராம். உடனே ஆசாரி கணக்கு போட்டு இவ்வளவு தங்கம் ஆகும் என்று சொன்னாராம்.

ஆசாரியை சற்று காத்திருக்கச்சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம். அன்றைக்கு ஆதி சங்கரர் கனகதாரா சோஸ்திரம் சொல்லி தங்க மழை பொழிய வைத்தார். அன்று பொழிந்ததென்றால் இன்றும் பொழிய வேண்டுமல்லவா என்று கேட்டாராம்.

அதே நேரத்தில் மிகசிறந்த பாடகர் மகாராஜபுரம் சந்தானம் மடத்திற்கு வந்தாராம். மஹாபெரியவா அவரிடம் "ஏன்டா சந்தானம் உனக்கு கனகதாரா ஸ்தோஸ்திரத்தை பாட்டாக பாடத்தெரியுமா ?என்று கேட்டாராம். சந்தனமும் பட ஆரம்பித்தாராம். அன்று பார்த்து மடத்தில் பெண்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததாம்.

மஹாபெரியவா முன் ஒரு மூங்கில் தட்டு வைக்கப்பட்டதாம். பெண்கள் அனைவரும் கைகளில் இருந்த வளையல் மோதிரம் சங்கிலி எல்லாவற்றையும் கழற்றி அந்த மூங்கில் தட்டில் போட்டார்களாம்..

ஒரு சமயத்தில் போதும் நிறுத்துங்கள் என்று மஹாபெரியவா சொன்னாராம். கிடைத்த தங்கத்தை நிறுத்து பார்த்ததில் தேவையான தங்கமும் பெண்கள் போட்ட தங்கமும் ஒன்று போல இருந்ததாம்.

இது தனது பர்வையால் போட்ட கணக்கா

இல்லை மனதில் போட்ட கணக்கா

தனது ஞானத்தால் போட்ட கணக்கா

தெய்வம் எண்கள் இல்லாமலே கூட கணக்கு போடும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்