• சாணு புத்திரன்

#குருப்புகழ்


பெரியவா சரணம். வாழ்விலே ஒருவருக்கு கிடைத்தற்கரிய வரம் எதுவென்றால் நோயற்ற வாழ்வு தாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர் நம் சான்றோர். அப்படியாக இன்றைய தினம் ஸ்ரீசரணராம் ஸ்ரீமஹாஸ்வாமிகளிடத்திலே, நம் உம்மாச்சித் தாத்தாவினிடத்திலே, இருள்மாயையாம் ரோகத்தை நீக்கி, துன்பம் ஏதும் எமை அண்டிடாத நிலை வேண்டும் ஸ்வாமீ என தொழுவோமே உறவுகளே! சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

......... சந்தம் ......... தனதன தான தனதன தான தனதன தான ........ தனதான ......... பாடல் ......... இருளென ரோக முடமதன் வாச மெதுமணு காத ........ கடமோடே யினிநலி யாத நிலைதனி லேகி பெறுநல மாக ........ சுகமோடே பெருவள மீயுங் குருவடி தேட வரமெனக் கீயு ........ முதல்வோனே பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாசி ........ அருள்வாயே வரமொடு கூடி யறிதற்கு மாதி குருவரு ளாசி ........ பெறவேண்டி திருவுரு காண மனமுற நாடி கதியுன தாகி ........ வருவேனே தருநிழல் போலே யருளிட வந்த சந்திர சேகர ........ குருநாதா இருவினை களையு மருட்தல காஞ்சித் திருத்தல மேவு ........ பெருமாளே! பாடலின் பதம்: இருள் என ரோகம் முடமதன் வாசம் எதும் அணுகாத கடமோடே இனி நலியாத நிலைதனில் ஏகி பெறு நலமாக சுகமோடே பெரு வளம் ஈயும் குருவடி தேட வரம் எனக்கு ஈயும் முதல்வோனே பிறவிகள் தோறும் எனை நலியாத படி உனது ஆசி அருள்வாயே வரமொடு கூடி அறிதற்கும் ஆதி குரு அருளாசி பெறவேண்டி திருவுரு காண மனமுற நாடி கதிய உனது ஆகி வருவேனே தருநிழல் போலே அருளிட வந்த சந்திர சேகர குருநாதா இருவினை களையு மருட்தல காஞ்சித் திருத்தல மேவு ........ பெருமாளே! "குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்" எனச் சொல்லி அடியேனுக்கு ஸ்ரீகுஞ்சிதசங்கரரின் திருவுருவப் படத்தினை அனைத்து அன்பர்கட்கும் கடந்த சில வருடங்களாக வழங்கிடும் நல் பாக்கியந்தனைத் தந்த அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான மஹாபிரபு, இந்த குருப்புகழை ஏற்றுக் கொண்டு இதனைப் பாடிப் போற்றிடும் அன்பர்கள் அனைவருக்கும் ரோக நிவாரணம் தரவேண்டுமென பிரார்த்தித்து கொண்டு இன்றைய தினம் இந்தக் குருப்புகழை அனைவருக்குமாகப் பகிர்கின்றேன். அவர் அருளாலே அவர் தாள் வணங்கி ஆனந்தமடைவோம்! சங்கரம் போற்றி! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.