• காயத்ரி ராஜகோபால்

குருப்புகழ்


பெரியவா சரணம். கீதையிலே மாதவன் கூறியருளியபடியாக நமக்கு அறநெறிகளைக் கூறி அறவழிதனைக் காட்டி அதிலே செவ்வுற வாழ்ந்து திளைக்கும் வகையிலே உடனிருந்து வழிகாட்டி வாழ்விக்கவென அகிலத்திலே பிறப்பெய்தி, அவனியின் குருவாக, செகத்குருவாக அமைந்து, நம்மை இன்றளவும் நல்லமுறையிலே வாழ்வித்து வரும் ஐயன், காஞ்சிக் கற்பகம், காஞ்சிப் பொக்கிஷம், கருணாமூர்த்தி, விடலையேறியான பரமேஸ்வரனுடைய அவதாரமாக, மா'தவனாக காத்தருளும் நம் உம்மாச்சி ஸ்ரீமஹாபெரியவாளுக்கு இன்னுமொரு குருப்புகழைப் பாடிப் போற்றி அகிலத்தோர்க்கெனவே அவர் அருளாலே அவர் தாள் பணிந்து தொழுவோமே! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் ......... சந்தம் ......... தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அகிலமிதி லேபி றந்து அமுதமென வேதி கழ்ந்து அறமுயர வேந டந்த… … … இனியோனாய் கலவைதனி லேது றவில் கனியுருவி லேநி றைந்து கச்சிமட மேகி நின்ற … … … கனியோனே புவனமிதி லேம றையும் புனிதமென வேவி ளங்க புதினமென வேதி கழந்து … … … வழிகாட்டி தரணிதனி லேஅ றமும் தழைத்துயர வேயு ரைத்த தருமநெறி யேயு ருவில் … … … வாய்த்தோனே காசினியி லேத ருமம் காத்திடவு மேதி னமும் காவிறையு மாமு னையும்… … … பணிந்தோமே நாவினியு மேந விலும் நாதியுரு வாய் உந்தன் நாமமதை யேநா ளும் … … … செபித்தேற்க காஞ்சிதனி லேயு றையும் கார்முகில னேஇ னிக்கும் காவியுரு வேநி தமும் ………………… நினைந்தேனே பாரிதனி லேம னதில் பாங்கணைய வேக ழலில் பாசநினை வேநி றைய ....... அருள்வாயே! பாடலின் பதம்: அகிலமிதிலே பிறந்து அமுதமெனவே திகழ்ந்து அறமுயரவே நடந்த இனியோனாய் கலவைதனிலே துறவில் கனியுருவிலே நிறைந்து கச்சிமடம் ஏகி நின்ற கனியோனே புவனமிதிலே மறையும் புனிதமெனவே விளங்க புதினமெனவே திகழந்து வழிகாட்டி தரணிதனிலே அறமும் தழைத்துயரவே உரைத்த தருமநெறியே உருவில் வாய்த்தோனே காசினியிலே தருமம் காத்திடவுமே தினமும் காவிறையுமாம் உனையும் பணிந்தோமே நாவினியுமே நவிலும் நாதியுருவாய் உந்தன் நாமமதையே நாளும் செபித்தேற்க காஞ்சிதனிலே உறையும் கார்முகிலனே இனிக்கும் காவியுருவே நிதமும் நினைந்தேனே பாரிதனிலே மனதில் பாங்கணையவே கழலில் பாசநினைவே நிறைய அருள்வாயே! இப்பாடலுக்கு விளக்கமும் தேவையோ என்ன? எல்லோருடைய ப்ரார்த்தனைகளையும் ஒன்றேனக் கேட்டு ஐயனின் பாதாரவிந்தங்களிலே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஸ்தோத்தரிப்பதாகவே அமைந்துள்ளதன்றோ! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்,. ஆம்! ஸத்யமே அது தான். ஆவல் மட்டுமே அடியேனுடையது; அதனை ஆக்கப்பூர்வமாக ஆக்குவது ஐயனின் கருணையன்றோ! சங்கரம் போற்றி! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


0 views