• காயத்ரி ராஜகோபால்

Guru Pooja Experience by Sri.Ramanujam - Abroad பத்து வருடங்களாக சாத்தியமே இல்லாத ஒன்றை சத்தியமாகிய


Guru Pooja Experience by Sri.Ramanujam - Abroad

பத்து வருடங்களாக சாத்தியமே இல்லாத ஒன்றை

சத்தியமாகிய மஹாபெரியவா குரு பூஜை அற்புதம்

மஹாபெரியவா என்னும் பிரபஞ்சம்

பக்தர் மனதில் புனிதம் இருப்பின்

சிந்தும் கண்ணீரில் ஒரு பக்தி இருப்பின்

வேண்டுதலில் ஒரு நியாயம் இருப்பின்

பெரியவாளின் கருணை கண்கள்

நிச்சயம் திறந்து விடும்

ராமானுஜம் ஒரு வாழும் உதாரணம்

இந்த குரு பூஜை அற்புதத்தின் நாயகர் ராமானுஜம். இவர் வெளி நாட்டில் வாழும் இந்தியர். இவருக்கென்று குடும்பம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் குடும்பம் சென்னையிலும் ராமானுஜம் வெளி நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலும் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது கிடையாது. கொஞ்சம் மேலே படியுங்கள். உங்களுக்கு காரணம் புரியும்.

ராமானுஜம் வெளி நாட்டில் வேலை பார்க்கவில்லை. வெளி நாட்டில் சொந்தமாக வர்த்தகம் செய்கிறார். பல வருடங்களாக வர்த்தகம் செய்கிறார். வர்த்தகம் நல்ல முறையில் தான் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக பத்து வருடங்களுக்கு முன்னால் வியாபாரத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டது.அந்த பிரச்சனைகள் சிறிது சிறிதாக வளர்ந்து பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து வர்த்தகத்தை முடக்கி போட்டது.

ராமானுஜம் வாழும் நாட்டில் வத்தகத்தில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் பிரச்சனைகள் தீரும் வரை வியாபாரம் செய்தவர் நாட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது. இந்த சட்ட சிக்கல்களினால் ராமானுஜம் இந்தியா வரமுடியாமல் குடும்பத்துடன் வாழ முடியாமல் தவித்தார்.

நினைத்து பாருங்கள். ஒரு குடும்பத்தில் மனைவியும் கணவரும் பாசத்தையும் உறவையும் பரஸ்பரம் பரிமாறி கொள்ளாமல் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்.தந்தை குழந்தைகள் உறவு என்பது மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இந்த சமயத்தில் இந்த மாதம் நான்காம் தேதி செவ்வாய் கிழமை மாலை ஆறு மணி இருக்கும். இந்த அற்புதத்தின் நாயகர் ராமானுஜத்திடம் இருந்து எனக்கு கைபேசி அழைப்பு வந்தது.. அவர் என்னுடன் மிகவும் உணர்வு பூர்வமாக பேசினார். அவர் சொன்னதன் சாராம்சம்.

"மாமா உங்களிடம் பேசுவது எனக்கு மிகுந்த சாந்தியளிக்கிறது.. எனக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன் நான் செய்து கொண்டிருந்த வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்ல யாராலும் முடியவில்லை.நானும் இந்தியாவிற்கு செல்ல முடியவில்லை. இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் அப்படி.. இதற்கு எனக்கு பெரியவா ஒரு தீர்வு சொல்லுவாரா.

எனக்கு என் மனைவியையும் குழந்தைகளையும் உடனே பார்க்க வேண்டும் போல இருக்கு மாமா என்று சொல்லிவிட்டு கதறி அழுது விட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் அவருக்கு தைரியம் சொல்ல ஆரம்பித்தேன்.

ரமனுஜம் உங்கள் கஷ்டமும் ஏக்கமும் எனக்கு புரிகிறது. நான் இன்று இரவும் நாளை காலையும் உங்களுக்காக மஹாபெரியவாளிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். கவலை வேண்டாம் என்றேன். இதற்கு ராமானுஜம் என்னிடம் கேட்டகேள்வி

‘மாமா பத்து வருஷமா அரசாங்கத்தில் பரிசீலனை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்று வரை ஒரு முடிவு எட்டப்படவில்லை. மஹாபெரியவா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து என் வயிற்றில் பாலை வார்ப்பாரா? என்று கேட்டார்.

நான் சொன்னேன் " மஹாபெரியவா நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் எல்லாமே தலை கீழாக மாறிவிடும். நான் மஹாபெரியவாளிடம் எப்படியாவது மன்றாடி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுக்கிறேன். இந்த வியாழக்கிழமையே பூஜையை ஆரம்பித்து செய்யுங்கள். மற்றவற்றை மஹாபெரியவளிடம் விட்டுவிடுங்கள். எல்லாம் நல்ல படியாக முடியும்.என்றேன். அவரும் சரி என்று சொல்லி சற்றே சமாதானத்துடன் விடை பெற்றார்.

அன்று இரவு மஹாபெரியவாளிடம் சற்றே மன்றாடினேன். அடுத்த நாள் காலை புதன் கிழமை ஐந்தாம் தேதி காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளிடம் பின் வருமாறு வேண்டினேன்

"பெரியவா இன்று ஒரு பக்தரின் நியாயமான வேண்டுதல். அவர் தன்னுடைய மனைவி குழந்தைகளை பத்து வருடமாக பார்க்க முடியவில்லை. அவருக்கு வியாபாரத்தில் ஒரு பிரச்சனை வந்து அது தீர்க்க முடியாமல் போய் விட்டது. அவர் வசிக்கும் நாட்டின் சட்டங்களின் படி பிரச்சனை முடியாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது..

இப்படியே பத்து வருடங்கள் ஓடி விட்டன. ராமானுஜத்தின் நியாயமான வேண்டுதலை கொஞ்சம் நிறைவேற்றி கொடுங்கள். பெரியவா என்றேன். மஹாபெரியவா என்னிடம் சொன்னது.

கவலைப்படாமல் அவனை குரு பூஜை பண்ண சொல்லு. எல்லாம் சரியாகி விடும் என்றார். நான் கேட்டேன் நிச்சயம் ஒரு சில மாதங்களுக்குள் அவர் குடும்பத்தை பார்க்க முடியுமா பெரியவா என்றேன்.

சில மாதங்கள் என்னடா ஓரிரு நாளிலேயே அவன் குடும்பத்தை பார்ப்பான் என்றார். எனக்கு கொஞ்சம்பயம் வந்து விட்டது. ஒன்னும் ஒரு சில மாதங்களில் என்று சொன்னது மஹாபெரியவா அற்புதங்களின் சக்திக்கு பொருந்த வில்லையோ என்று நினைத்தேன்.

நான் கேட்டேன் பெரியவா கோவிச்சுண்டு இருக்கேளா பெரியவா என்று பெரியவா : ஏண்டா என்னமோ நீயே உன் குடும்பத்தை பார்க்காத மாதிரி அழுதாயே. இந்த உண்மையான வேண்டுதலுக்கு நான் ஒரு மரியாதை செய்ய வேண்டாமா. கவலை படாதே.

இந்த வியாழக்கிழமை அவனை குரு பூஜையை ஆரம்பிக்க சொல்லு. அவனுக்கென்றே ஒரு சூரிய உதயம் கிடைக்கும். என்று சொல்லி முடித்தார். நானும் மற்றவர்களின் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு விடைபெற்றேன்.

ராமானுஜத்தை அழைத்து இந்த விவரங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டு பிறகு மின் அஞ்சல் அனுப்பினேன். தொலை பேசியில் ராமானுஜம் என்னிடம் கேட்டது." மாமா இந்த குரு பூஜையாவது எனக்கு ஒரு வெளிச்சத்தை காட்டுமா" என்றார்

நான் சொன்னேன் "உங்கள் பிரார்த்தனைகளை பின்னுக்கு தள்ளி பக்தியை முன் நிறுத்தி பூஜையை செய்யுங்கள். நிச்சயம் மஹாபெரியவா உங்களுக்காக ஒரு அற்புதத்தை செய்வார். நம்புங்கள் என்றேன். அவரும் நம்பிக்கையோடு என்னிடம் விடை பெற்றார்.

சாத்தியமே இல்லாத ஒன்று சத்தியமானது.

வியாழக்கிழமை காலை பிரும்ம முகூர்த்த நேரம் ராமானுஜம் மிகவும் சிரத்தையாக பூஜையை செய்தார். பூஜையை முடித்து விட்டு மிகவும் கவலை தோய்ந்த மனதுடன் தன்னுடைய இருக்கையில் காபி தம்பளருடன் அமர்ந்தார். அன்றைய செய்தித்தாளை பிரித்து பார்த்தார்.

அவர் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. எந்த சட்டம் ராமானுஜத்தை பத்து வருடமாக குடும்பத்துடன் சேர முடியாமல் செய்ததோ அதே சட்டத்தை அரசாங்கம் வாபஸ் வாங்கிக்கொண்டது..

ராமானுஜம் என்னை அழைத்து இந்த அற்புதத்தை சொன்னார்.. நானும்மிகவும் மகிழ்ந்து போனேன். மஹாபெரியவாளின் அற்புதம் வேற்று நாட்டில் புகுந்து அரசாங்கத்தின் கொள்கையையே மாற்றி விட்டது.உண்மையான பக்திக்கும் ஆத்மார்த்தமான கண்ணீருக்கும் என்றுமே மஹாபெரியவளிடம் விடை உண்டு.

அரசாங்கத்தின் வாபஸ் வாங்கிக்கொண்ட சட்டம் ஒரு ஆங்கில பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது. கீழே அந்த செய்தியை உங்களுக்காக வெளியிட்டுள்ளேன்.

அன்று மாலையே எந்த நபர் ராமானுஜத்தின் மேல் வழக்கு போட்ருந்தாரோ அதே நபர் ராமானுஜத்தை அழைத்து தான் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்வதாக சொன்னாராம். ஒரு சில நல்ல புனிதமான ஆத்மாவிற்கு தான் முதல் குரு பூஜையிலேயே அற்புதம் நடக்கும். ராமானுஜமும் ஒரு புண்ணிய ஆத்மா என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? .

ராமானுஜம் அவர்கள் சொன்னதை உங்களுக்காக கீழே பிரசுரிக்கிறேன்.

ஒரு நாள் . youttube .பார்க்கும்பொழுது G.R மாமாவின் லோக ஷேமம் பிரார்த்தனை பற்றி அறிந்தேன். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா ? என்று வியந்து போனேன்.

உடனே மாமாவை தொடர்பு கொள்ள நினைத்து முயற்சித்தேன்.உடனே எனக்கு மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. நான் என்னுடைய பிரார்த்தனைகளை சொல்லி மாமாவிற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மாமாவும் உடனே எனக்கு பதில் கொடுத்து மின்னஞ்சல் அனுப்பினார்.

மாமாவிடம் பேசும் பொழுது என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.மாமா மிகவும் பொறுமையுடனும் அக்கறையுடனும் நான் பேசுவதை எல்லாம் கேட்டார். அவருடைய பதில் எனக்கு மன ஆறுதலை கொடுத்தது. இப்படி ஒரு மாமனிதரை பார்க்க முடியுமா என்று வியந்தேன். ஒரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் லோக ஷேமத்திற்காக ஒரு G.R மாமா. அவருக்கு என் நமஸ்கரங்கள்.

மஹாபெரியவா குரு பூஜையும் பிரார்த்தனைகளும்

பிரார்த்தனைகள் முதல் வாரத்திலும் பலிக்கலாம்

கடைசி வாரத்திலும் பலிக்கலாம்

ஒன்பது வாரங்கள் முடிந்து சில வாரங்களில் பலிக்கலாம்

நமக்கு எப்பொழுது நடந்தால் நல்லதோ

அப்பொழுது நிச்சயம் நடக்கும்

இறுதி வரை பொறுமையும் பக்தியும் நம்பிக்கையும் அவசியம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்