• காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவா குரு பூஜை அற்புத அனுபவங்கள் - இல்லத்தரசி திருமதி மாலதி ரமேஷ்


அர்த ராத்திரியில் அழைத்தாலும்

அத்துவான காட்டில் இருந்து கொண்டு

அழைத்தாலும் அழைத்தார் குரலுக்கு

செவி சாய்க்கும் தெய்வமே

உன் தாமரை பாதங்களில்

மேலும் ஒரு ஆத்மா சரண்

மாலதி ரமேஷ்

-G.R.Mama

மஹாபெரியவா குரு பூஜை அற்புத அனுபவங்கள்

திருமதி மாலதி ரமேஷ் ஒரு இல்லத்தரசி. சென்னையில் வாசம் செய்கிரார். வாழ்க்கை என்றால் எல்லோருக்கும் ஆயிரம் இருக்குமே. வீட்டிற்கு வீடு வாசல் படிதானே. இந்த இல்லத்து அரசிக்கும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தன.

தன்னால் இயலவில்லை என்னும் பொழுது கைகளை தலைக்கு மேலே உயர தூக்கி இறைவா என்னை காப்பாற்று என்று அழைப்பது தானே வழக்கம். அன்று த்ரௌபதியில் இருந்து இன்று வரை இது தானே நமக்கு பழக்கம்.

மாலதி கைகளை உயர்த்தி தன்னுடைய இயலாமையை சொல்ல இறைவனை அழைத்தார். நம்முடைய பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா தானே. என் மூலமாக மாலதிக்கு குரு பூஜைக்கு உத்தரவிட்டார். நான் மாலதியை அழைத்து குரு பூஜை உத்தரவை பற்றி சொல்லி பூஜை செய்யும் விதத்தையும் சொன்னேன்.

அந்த வாரம் முதல் வார குரு பூஜை. செய்ய வேண்டும். புதன் கிழமையே மாலதியும் அவரது கணவர் ரமேஷும் அடுத்த நாள் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டிய பூஜைக்கு தயாரானார்கள். இரவு சாப்பிட்டு விட்டு கணவரும் மனைவியும் மிகவும்பதட்டமாகவே இருந்தனர்.

இரவு ஒன்பது மணி இருக்கும். பூஜை சாமான்கள் எல்லாவற்றையும் சார் பார்த்தனர். அப்பொழுதான் அடுத்த நாள் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்களை வாங்கி வைக்க மறந்து விட்டனர் என்பது தெரிய வந்ததது. இருவரும் மனம் கலங்கி விட்டனர். மாலதிக்கு கண்களில் கண்ணீர் தளும்பி நிற்கிறது.

மாலதி உடனே மஹாபெரியவாளை அழைக்க அங்கு சிறிது நேரம் மௌனம். வாசலில் அழைப்பு மணி ஒலிக்கிறது. மாலதி சென்று வாசல் கதவை திறக்க அங்கு ஒருவன் கை நிறைய பூக்களை வைத்துக்கொண்டு உங்களுக்கு பூ வேணுமா அம்மா என்று கேட்க மாலதியும் குரல் தழு தழுதழுக்க பூ வேணும் கொடுப்பா என்று சொல்லி விட்டு கை நிறைய பூக்களை சுமந்துகொண்டு மஹாபெரியவா முன் மண்டியிட்டாள்.

அந்த அகால நேரத்தில் பூக்காரர் உருவத்தில் வந்தது மஹாபெரியவா என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இந்த அற்புதம் நடந்தது அந்தக்காலத்தில் அல்ல. நாம் வாழும் காலத்திலேயே சென்ற வாரம் நடந்தது.

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்

அன்று பாரதத்தில் கண்ணன்

இன்றும் அதே கண்ணன் மஹாபெரியவா உருவத்தில்

சொல்கிறார் அழைத்தால் வருவேன் என்று

மாலதி ஆங்கிலத்தில் எழுதியதை நான் உங்களுக்காக தமிழாக்கம் செய்து சமர்பித்துளேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்