• காயத்ரி ராஜகோபால்

இந்த பதிவை  தவறாமல் படித்து விட்டு சங்கரன் வசந்த கல்யாணி குரு பூஜை அற்புதங்களை படித்து அனுபவியுங்கள்


உருகும் பக்தியும் வானளவு நம்பிக்கையும்

கொண்டால் நீ பக்தர்களின் இதய வானில்

சிறகடித்து பறக்கும் பறவையாகி விடுவாயோ

சங்கரன் குடும்பம் சொல்கிறது.

உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் குரு பூஜை அற்புதங்களில் மஹாபெரியவா செய்த அற்புதங்களில் சில இன்றும் நம் மனதை விட்டு அகலாது வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று சங்கரன் வசந்தகல்யாணி. அவர்களது இருப்பது ஆண்டு காலா வறுமை ஒரே இரவில் குரு பூஜை மூலோலமாக தூக்கி எறியப்பட்டது. சுபிக்ஷம் இல்லத்தில் நுழைந்தது.

இந்த அற்புதத்தின் நாயகன் சங்கரன் மேலும் ஒரு அற்புதத்தை அனுபவித்தார். அற்புதம் நடந்த நாள் சென்ற மாதம் இருபத்தி ஆறாம் தேதி. அந்த அற்புதத்தை அனுபவிப்பதற்கு முன்னால் அவர்களது குரு பூஜை அற்புதங்களை நம்முடைய இணைய தளத்தின் புதிய உறவுகளுக்காக மீண்டும் இன்றும் நாளையும் பதிவுகளாக வெளி வருகிறது. கடந்த கால அற்புதங்களை அனுபவித்தால் தான் சென்ற மாதம் அரங்கேறிய அற்புதத்தை அனுபவிக்க முடியும்.

உங்களுக்காக இதோ அந்த அற்புதங்கள்.வழக்கம் போல் . இந்த மாதம் பதினொன்றாம்தேதி என் வாழ்வில் மஹாபெரியவா தொடரில் சங்கரன் அனுபவித்த அற்புதம் வெளியாகும்.. தவறாமல் படியுங்கள்.நம் எல்லோருடன் நொடிப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹாபெரியவாளை தரிசியுங்கள்.

இன்னும் சற்று நேரத்தில் சங்கரன் வசந்த கல்யாணி குரு பூஜை அற்புத அனுபங்கள் வெளியாகும். அதுவரை சற்று பொறுமை காத்திடுங்கள்.

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்