• காயத்ரி ராஜகோபால்

விஷ்ணுமாயாவின் குரு பூஜை அற்புத அனுபவங்கள் -002


உன் பக்திக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

செய்யும் பக்தி உன்னை வந்து சேர்த்தால்

நீ செய்யும் அனுகிரஹங்களும் ஆசிகளும்

வாழும் வாழ்க்கையை தாண்டி கூட வாழுமே

விஷ்ணுமாயா பக்திக்கு நீ கொடுத்த பரிசு

ஓர் முழுமையான வாழ்க்கையல்லவா

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்-002

விஷ்ணுமாயா தொடர்கிறாள்:-

விஷ்ணுமாயா மஹாபெரியவா குரு பூஜை ஆரம்பித்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் மஹாபெரியவா விஷ்ணுமாயாவின் பக்திக்கு இறங்கி பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

பட்ட காலிலேயே படும் என்பது போலெ வாழ்க்கையில் கஷ்டம் என்று வந்தால் அடுத்தடுத்து கஷ்டமே வரும் என்பது வாய்மொழி விஷ்ணுமாயாவின் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு உண்மை மொழி.. எந்த உண்மை மொழிக்கும் பதில்தான் மஹாபெரியவா குரு பூஜை. இதை நிதர்சன உண்மையாக மஹாபெரியவா குரு பூஜை மூலம் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் விஷ்ணுமாயாவின் வாழ்க்கை அற்புதங்களுக்குள் செல்வோம்.

அற்புதம்-2

விஷ்ணுமாயா தன்னுடைய இரண்டாவது வார குரு பூஜைக்கு தயாராகி விட்டாள்.. விஷ்ணுமாயாவின் தாய் புற்று நோயால் அவதிப்படுவது நாமெல்லாம் அறிந்ததே. கடந்த மூன்று மாத காலமாக படுத்த படுக்கையாய் இருக்கிறார்.

விஷ்ணுமாயா அதிகாலையிலேயே எழுந்து மஹாபெரியவா குரு பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டாள். பிரசாத வேலைகளை முடித்து விட்டு சமையல் அறையை விட்டு வெளிய வந்தாள்.

என்ன ஒரு ஆச்சர்யம்.மூன்று மாதமாக படுத்த படுக்கையாய் இருந்த தாய், எழுந்திருக்ககூட மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்கும் தாய் தானே குளித்துவிட்டு கொண்டைக்கடலை மாலை தயார் செய்து விட்டார்.

இந்த புதிய தெம்பை யார் கொடுத்தார்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமா நம் மஹாபெரியவா தான்.

மஹாபெரியவா பெயருக்கே இவ்வளவு மகிமை என்றால்

குரு பூஜை அற்புதங்களை சொல்லவும் வேண்டுமா

இதை விஷ்ணுமாயா என்னிடம் சொன்னபோது விஷ்ணுமாயாவைவிட அதிக சந்தோஷப்பட்டது நான்தான். மஹாபெரியவா ஒரு விஷயத்தை விஷ்ணுமாயாவின் தாயாருக்கு மட்டும்மில்லாமல் நம் எல்லோருக்கும் புரிய வைத்து விட்டார்கள்.

நாம் ஆத்மார்த்தமாக மனதார மஹாபெரியவா குரு பூஜை ஆர்வத்தை வெளிக்கொண்டுவந்தால் நம் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக உடல் தெம்பையும் மன உற்சாகத்தையும் தேவையான அணைத்து விதமான பொருட்களையும் நம்மை தேடி வரவைத்து விடுவார்கள்.

இதே அனுபவத்தை சென்ற வாரம் மஹாபெரியவா குரு பூஜை பற்றி என்னிடம் விவரமாக கேட்டுக்கொண்ட பக்தர் ஒருவர் பூஜை ஆரம்பிக்கும் பொழுது தன்னிடம் எதுவுமே இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது பூஜைக்கு வேண்டியதெல்லாம் தானே வந்துசேர்ந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மிக விரைவில் இந்த அற்புதத்தையும் நாம் படிக்கப்போகிறோம்.படித்து அனுபவிக்க போகிறோம்.

சோம்பிப்படுத்தால் சாக்காடு

எழுந்து நடந்தால் இந்த பூமியே பூக்காடு

மஹாபெரியவா குரு பூஜை யாரையும் எழுந்து நடக்கவைக்கும்

இனி மேல் விஷ்ணுமாயாவின் தாயாரின் வாழ்வு பூக்காடுதான். நந்தவனம்தான் மஹாபெரியவா எழுந்து நடக்கும் ஆரோகியத்தையும் தருவார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

அற்புதம்-3

சோதனை மேல் சோதனை.. விஷ்ணுமாயா வியாழக்கிழமை குரு பூஜை தடையில்லாமல் செய்யமுடியும் என்று உறுதியாக இருந்ததற்கு காரணம் விஷ்ணுமாயாவின் அலுவலகத்தில் விஷ்ணுமாயாவிற்கும் மற்றும் பதினைந்து பேருக்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சௌகரியம் இருந்தது.

எதிர்பாராதவிதமாக விஷ்ணுமாயாவின் அலுவலகத்திலிருந்து இந்த சலுகை வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.. இனி வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக. விஷ்ணுமாயா என்னிடம் இந்த தகவலை தெரிவித்து மிகவும் வருந்தினாள்.

வழக்கம் போல் மஹாபெரியவாளிடம் நான். முறையிட்டேன்.-

“மஹாபெரியவா இது என்ன சோதனை. எதிர்பாராமல் வந்த இந்த சோதனையால் குரு பூஜை நின்று விடுமே. விஷ்ணுமாயா என்ன செய்வாள். வந்த சோதனை போதும் பெரியவா.இனி சோதனை வேண்டாம்

என்னுடைய பிரார்த்தனை விஷ்ணுமாயா குரு பூஜை தடை படாமல் நடக்கவேண்டும் பெரியவா. அவளுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் பெரியவா. எனக்கு அடுத்த குரு பூஜைக்குள் ஒரு தீர்வு வேண்டும் பெரியவா. குரு பூஜை நிற்காமல் நடக்க வேண்டும். இதற்கு தீர்வு சொல்லுங்கள் பெரியவா! விஷ்ணுமாயாவும் பெரியவளிடம் முறையிட்டாள்.

மனிதன் அடி தாங்கலாம்.

இடி தாங்கமுடியுமா

விஷ்ணுமாயாவின் அலுவலகத்தில் இந்த சலுகையை அனுபவித்துக்கொண்டிருந்த பதினைந்து பேரும் மீண்டும் இந்த சலுகை வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். இரண்டு நாட்கள் வரை மௌனம். எந்த பதிலும் வரவில்லை. விஷ்ணுமாயா தன்னுடைய நம்பிக்கையை இழந்துவிட்டாள். என்னிடம் இந்த விவரத்தை சொல்லி எனக்கு விடிவுகாலமே இல்லை மாமா. என் தலைவிதி அவ்வளவுதான் என சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள்.

ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியும். என்னுடைய உருக்கமான பிரார்த்தனையும் விஷ்ணுமாயாவின் மஹாபெரியவா நம்பிக்கையும் பலிக்காமல் இருக்கமுடியாது. நான் விஷ்ணுமாயாவிற்கு நம்பிக்கை கொடுத்தேன் தைரியம் கொடுத்தேன். ஏனென்றால் மனதுருக செய்யும் எந்த ப்ரார்தனைக்கும் மஹாபெரியவா செவி சாய்க்காமல் இருக்கமாட்டார். இது என் சொந்த அனுபவம்.

நான் தைரியம் கொடுத்த மறுநாள் விஷ்ணுமாயாவிற்கு ஒரு மெயில் வந்தது. மெயிலின் சாராம்சம் இதுதான். சலுகை வேண்டி விண்ணப்பித்த பதினைந்து பேரில் விஷ்ணுமாயாவிற்கு மட்டும் இந்த சலுகை மீண்டும் வழங்கப்படுகிறது.

ஓர் இரவு உருக்கமான பிரார்த்தனையின் விளைவு தான் இந்த மாற்றம். அலுவலக அதிகாரிகளின் மனதை யார் மாற்றினார்கள்.. மற்ற பதினைந்து பேருக்கு திரும்பவும் கிடைக்காத சலுகை எப்படி விஷ்ணுமாயாவிற்கு மட்டும் கிடைத்தது. இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

கையில் வெண்ணை ஆனால்

இதை அறியாது

நெய்க்கு அலைகிறோம்

இப்போது புரிகிறதா. நம்மை ஆட்கொள்ளும் ஆட்டுவிக்கும் சக்தி நமக்கு மேல உள்ள தெய்வ சக்திதான். இதிலிருந்து என்ன தெரிகிறது. நம்மை தெய்வத்திடம் ஒப்படைத்தால் நம்முடைய முன் வினைகள் கர்மாக்கள் இன்னும் என்ன உண்டோ அத்தனையும் நொடிப்பொழுதில் தவிடு பொடியாகி விடும். அந்த கண்ணுக்கு தெரியாத தெய்வ சக்தி யார் எங்கே இருக்கிறது.

கண்ணுக்கு தெரியாத

எங்கும் நிறைந்திருக்கின்ற அந்த தெய்வ சக்தி நம்முடைய

மஹாபெரியவா தான்.

இவை எல்லாம் எங்கோ படித்துவிட்டு போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதல்ல. என் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் என் அனுபவத்தின் வெளிப்பாடு.

செல்லரித்த புத்தகமாக இருந்த என்னை புனித இறை புத்தகமாக மாற்றி என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் புனித பணியை கொடுத்தவர் மஹாபெரியவா.

இன்று வரைமஹாபெரியவா எனக்கு கொடுத்த புனித சிந்தனையாலும் புனித பேச்சாலும் புனித செயலாலும் மஹாபெரியவளின் நம்பிக்கைக்கு பத்திரமாக ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

குருவே சரணம் குரு பாதமே சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

மஹாபெரியவா நமக்கு சொல்லும் சேதி:

வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் வேகம் வரும்

நம்பிக்கை இல்லாவிட்டால் வேகம் தடை படும்

வாழ்க்கையில் வரும் பிரச்னைகள்

நிரந்தரமானவை இல்லை

ஆனால் நாமும் நம் வாழ்க்கையும் நிரந்தரமானவை

வாழ்க்கைத்தடைகளை தகர்ப்போம் வாழ்க்கையில் முன்னேறுவோம்

வாழ்க்கை வாழ்வதற்கே

மிக விரைவில் நம் நாயகி விஷ்ணுமாயா நம்மையெல்லாம் சந்திக்க இதே பெரியவா அருள் இணையதளத்தில் தோன்றுவார் என்பதை என்னால் ஊறுதியாகக்கூற முடியும். நானும் உங்கள்கைப்போலத்தான் இதுவரை பார்த்ததில்லை. குரல் அறிமுகம் மட்டும்தான். முகம் அறிமுகமில்லை.

நாம் எல்லோருமே சேர்ந்து காண்போமே.

ஒரு மின்னல் செய்தி:

இந்த அற்புத தொகுப்பை முடிக்கும் தருவாயில் விஷ்ணுமாயாவிடம் இருந்து என் காதில் தேனாகப்பாய்ந்த ஒரு செய்தி.

மிக நீண்ட இடைவேளைக்கு அப்புறம் விஷ்ணுமாயாவின் கணவரிடமிருந்து வந்த ஒரு குறுந்செய்தி அவர்களின் ஒரே காதல்பரிசான குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த ஒரு சிறு பொறி காட்டுத்தீயாய் மாறி பாசம் என்னும் பிணைப்பில் கட்டுண்டு இருவர் கண்களும் குளமாக மாறும் பொழுது நம் கண்களிலும் கண்ணீர் பெருகும் என்பதில் சந்தேகம் என்ன.

மஹாபெரியவாளின் அருளாசியால் விஷ்ணுமாயா நல்ல ஆரோகியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷமாக வாழவேண்டும் என உங்கள் சார்பிலும் என் சார்பிலும் மஹாபெரியவாளை பிரார்த்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்